Romance வித்யா வித்தைக்காரி(நிறைவுற்றது)
#3
【02】

காரில் கிளம்பிய பிறகும் வளன் மற்றும் வித்யா இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நேற்று திருவிழா என்பதால் சரியாக தூங்காத வித்யா, காரில் இருந்த அமைதி மற்றும் ஏசி காற்றில் அவள் கண்கள் சொக்க, கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்தாள். சரியான தூங்கு மூஞ்சி என நினைத்துக் கொண்டான் வளன்.

இடையில் ஒருமுறை காரை ஆஃப் செய்யாமல் ஹேண்ட் பிரேக் போட்டு விட்டு, தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டு வந்தான்.

கார் உள்ளே வந்தவன், அவளைப் பார்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவள் முகத்தில் எந்த கவலையும் இல்லை. சில வினாடிகள் அவளை ரசித்த படி தண்ணீர் குடித்தான்.

மீண்டும் கிளம்பி வண்டி சென்னையில் அவர்கள் வீட்டை அடையும் வரை அங்கும் இங்கும் புரண்டாலும் அவள் எழும்பவில்லை.

கையால் அவளை தொட்டு எழுப்ப விருப்பம் இல்லாமல், "ஏய் ஏய் என சொல்லிக் கொண்டே" அவளை எழுப்ப ஹாரன் அடிக்க அவளும் எழுந்தாள்.

அவனது அம்மா வீட்டுக்குள் போக வேண்டாம், நாங்கள் வரும்வரை வெயிட் பண்ணு என்று சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். அவள் அடேயப்பா பாட்டி சொன்ன மாதிரி நல்ல வசதியான குடும்பம் தான் என நினைத்துக் கொண்டாள். அவன் டிவி ஆன் செய்து ஒவ்வொரு சேனலாக வெறுப்பில் மாற்றிக் கொண்டிருந்தான்.

ஏதோ எனக்கு மட்டும் எல்லாம் பிடிச்சு நடந்த மாதிரியும், இவனுக்கு மட்டும் எதுவும் பிடிக்காத மாதிரியும், ரொம்ப பண்றான் என நினைத்து அமைதியாக டிவியை பார்த்தாள்.

வாடகை காரில் வந்தவர்கள் 15 நிமிடங்களில் வந்து சேர்ந்தார்கள். காரில் வரும்போதே வரதட்சனை பற்றி சிவமணி கேட்க, அதெல்லாம் உங்க விருப்பம், உங்க பொண்ணுக்கு நீங்க செய்யறதுன்னு நினைக்குறத செய்யுங்கள் என்றார்கள். எல்லோரும் இரவு உணவு முடித்த பிறகு, சிவமணி சென்னை வந்த அதே வாடகை காரில் ஊருக்கு புறப்பட்டார்.

வித்யாவை தனியாக அழைத்து முதலிரவுக்கு உடுத்த சேலை ஒன்றை வள்ளி கொடுததாள். வித்யா ரெடியான பிறகு அவளிடம், மேலே இருக்குற ரூம், அவனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துகிட்டு அவன் உன் வழிக்கு கொண்டு வருவது உன் சாமர்த்தியம் என்றாள் வள்ளி.

அவனைப் பற்றி பெரிதாக எதுவுமே தெரியாமல் நான் எப்படி அவனுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள முடியும் என மனதில் நினைத்துக் கொண்டே வளன் அறைக்குள் நுழைந்தாள் வித்யா..

முதலிரவு அறை என அத்தை சொல்லிய அறைக்குள் நுழைந்தவளுக்கு பேரதிர்ச்சி....

வாசு & வள்ளி பெட்ரூம்..

என்ன வள்ளி மருமகள் போயிட்டாளா?

ஆமா, போயிட்டாங்க..

ஓகே, என்ன நடக்க போகிறதோ என்பதைப் போல மனைவியை பார்த்தார் வாசு.

வளன் கொஞ்சம் பொறுமையா பேசுனா நல்லா இருக்கும். இல்லைனா நாளைக்கே அவ ஊருக்கு கிளம்பினா கூட ஆச்சரிய படுறதுக்கு இல்ல. உங்க மகன் குணம் அப்படி.

நாளைக்கு ஏதோ எக்ஸாம் இருக்குன்னு அவங்க அப்பா சொன்னாரே.

அய்யோ, ஆமா அது வேற என பெரும் மூச்சு விட்டாள்.

சரி விடு, அவளை இப்பவே போன்னு துரத்தி அடிக்காமல் இருந்தா சரி என சிரித்தார் வாசு.

அதெல்லாம் நம்ம மருமக பார்த்துப்பா. அம்மா அவ சரியான வித்தைக்காரின்னு சொல்லு வாங்க.

புரியலை வள்ளி.

நல்லா பேசுவா, எதுவா இருந்தாலும் பேசி சமாளிப்பா, நல்ல துறுதுறுன்னு இருப்பான்னு அம்மா சொல்வாங்க.

பார்த்தா அப்படி தெரியலை...

அவளும் பாவம், இந்த கல்யாணம் இப்படி நடந்தது அவளுக்கும் ஒரு பக்கம் வருத்தமா தான இருக்கும்.

எனக்கும் தான் வள்ளி, இருந்தாலும் ஒரு விதத்தில நல்லது தான். இல்லைன்னா பையன் கண்டிப்பா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாட்டான், என்ன இருந்தாலும் அவங்களுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமையில கல்யாணம் நடந்திருக்க கூடாது. அதுதான் எனக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

சரி விடுங்க, எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க வேண்டியது தான். . அம்மா அடிக்கடி சொல்லுவா, நல்ல துடிப்பான பொண்ணுன்னு. எனக்கு நம்பிக்கை இருக்கு.

நல்லது நடந்தால் சரி தான். சரி நீ மாத்திரை போட்டியா..?

போட்டேன்...

வள்ளி அண்ட் வாசு தூங்க தயாரானார்கள்.

முதலிரவு அறைக்குள்..

உள்ளே நுழைந்த வித்யாவுக்கு அதிர்ச்சி..

திரைப்படங்களில் முதலிரவு அறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, பழங்கள் இனிப்புகள் என தட்டில் நிறைய அடுக்கப்பட்டிருக்கும் என நினைத்திருந்தவளுக்கு, அவளது முதலிரவு அறையை பார்த்து அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

லேப் கோட் அணிந்து வளன் நிற்க, அறைக்குள் எங்கு பார்த்தாலும் கண்ணாடி குடுவைகளும் அதில் கலர் கலர் திரவங்களும். எஞ்சி இருந்த இடங்களில் எல்லாம் நிறைய புத்தகங்களும், பேப்பர்களும்.

அடடா, இது கெமிஸ்ட்ரி லேப் மாதிரி இருக்கே. ஒருவேளை தப்பான அறைக்குள் வந்துட்டோமா என்ற எண்ணம் வித்யாவுக்கு வந்தது.

இரண்டடி எடுத்தவளை பார்த்து.

ஹே இடியட், அங்கேயே நில்லு என கத்தினான் வளன்.

அவள் கையில் ஒரு பேப்பரை கொடுத்து, இதுல பாதுகாப்பான பாதை என்னன்னு இருக்கு, அந்த வழியே வா..

என்னது?

என்ன என்னது? தமிழ்ல தான சொன்னேன், இதுகூட உனக்குப் புரியாதா?

அது புரியுது, ஆனா வீட்டுக்குள்ள நடக்க யாரு மேப் ரெடி பண்ணுவா?

சரியா விசாரிக்காம இப்படி ஒரு லூசுப் பயலுக்கு கட்டி வைத்து விட்டார்களே கிழட்டு பசங்க என நினைத்துக் கொண்டாள்..

வளன் பாட்டி தன் பேரன் பற்றி தம்பட்டம் அடிக்கும் போது கேட்டிருந்தாலும், அவள் சொன்ன விஷயங்களுக்கும் இங்கே வளன் நடந்து கொள்ளும் விதத்துக்கும் சம்பந்தம் இல்லை. ரசனை இல்லாத இவன் ஒரு சைக்கோ என்ற எண்ணம் அவள் மனதில்...

கல்யாணத்துக்கு பிறகு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருக்கிறான். அவளை ரசிக்கவில்லை.

நல்லா பாரு, இங்க என்ன இருக்கு? உனக்கு கை கால் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாம இப்ப இருக்குற மாதிரி இருக்கணுமா வேண்டாமா?

டேய் என்னடா கேள்வி இதெல்லாம் என்பதை போல அவனைப் பார்த்தாள்.

என் பின்னால வா என நடந்தான்.

அவளும் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.

அவள் உள்ளே நுழைந்த போது அவன் நின்ற இடத்தில் இருவரும் இப்போது..

அவன் மீண்டும் ரிசர்ச் என கையில் ஒரு குடுவையை எடுக்க..

சுற்றி முற்றி பார்த்தாள். பெட் கூட இல்லாத இந்த அறையில் எப்படி முதலிரவு என நினைத்தாள். ஒரு வேளை இவன் கண்டிப்பா "சைக்கோ" என நிமிடத்துக்கு நிமிடம் அவள் நினைக்காமல் இல்லை.

இவனைப் பற்றி எல்லாம் தெரிந்தும் தன்னை இங்கே அனுப்பிய அத்தை ஒரு சைக்கோ என நினைத்தாள். மாமனார் அமைதியான சைக்கோ. கிழவி ஒரு சைக்கோ மொத்தத்தில் இது ஒரு சைக்கோ குடும்பம், அய்யோ இங்க எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலையே என நினைத்தாள்.

மறு கணமே, நீ கில்லாடி வித்யா உன்னால முடியாதுன்னு ஒரு விஷயம் உண்டா எனவும் நினைத்துக் கொண்டாள்.

ஆம், வித்யா இப்போது நிற்கும் இடம், ஒரு கெமிஸ்ட்ரி லேப். வாடகைக்கு விடுவதற்காக கட்டப்பட்ட மாடி வீட்டை ஆராய்ச்சி கூடமாக மாற்றி வைத்திருந்தான் வளன்.

இங்க எங்க தூங்குவீங்க..

இங்க தான்,

இங்கேயே?

ஆமா இங்கே தான்.

இதுக்குள்ளயா?

ஆமா, அதுக்கென்ன?

ஆமா ஆமா இங்க எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு என் வித்யாசமான குரலில் சொல்ல..

கடுப்பில் வளன், உனக்கு இப்ப என்ன வேணும்?  தூங்கணுமா?

ஆமா. நாளைக்கு எக்ஸாம் இருக்கு.

முதலிரவில் தூங்கலாமா எனக் கேட்கும் கணவன்கள் இருப்பார்கள் ஆனால் தூங்கணுமா என கேட்கும் கணவன் இவனாத்தான் இருப்பான் என நினைத்து மனதுக்குள் சிரித்தாள்..

ஓஹ்! நீ படிக்கிறியா?

ஏன்? அது கூட தெரியாதா உங்களுக்கு..

எல்லாம் தெரிஞ்சா கல்யாணம் நடந்துச்சு..?

ஹம், நீங்க என்ன பண்றீங்க?

ஏன்?

சும்மா தெரிஞ்சுக்க..

ஹம், ரிசர்ச் பண்றேன்.

எங்கே?

அதெல்லாம் உனக்கு தேவையில்லை. இங்க இருக்குற வரைக்கும் மேப் பத்திரமா வச்சுக்க, இப்ப என்கூட வா என நடந்தான்.

போடா சைக்கோ என முணுமுணுத்துக் கொண்டே அவன் பின்னால் போனாள்.

அவன் அந்த அறையில் இருந்த குறைவான வெளிச்சத்தில் கதவை திறக்கும் பட்டன் தேடிய வளன் சுவரில்  முட்ட..

அய்யோ பாவம். உங்களுக்கும் வழி தெரியாதா? இந்தாங்க மேப் என தன் கையிலிருந்த பேப்பரை நீட்டினாள்.

அவள் குணம் பற்றி தெரியாத வளன் தன்னை நக்கல் செய்கிறாள் என ஏற இறங்கப் பார்த்தவன்  பட்டன் அழுத்த கதவு திறந்தது. கெமிஸ்ட்ரி லேப் என்பதால் அந்த அறையை நன்கு பாதுகாப்பாக வைத்திருந்தான்.

என்ன மேஜிக் எல்லாம் பண்றான் என நினைத்தாள். உள்ளே நுழைந்தனர். வித்யா ஆர்வமாக புதிதாக திறந்த அறையை பார்த்தாள். அங்கே எல்லா வசதிகளும் இருந்தது விலை உயர்ந்த ஷோபா, ஹோம் தியேட்டர், மினி ரெப்ரிஜிரேட்டர் உட்பட.

இவன் சைக்கோ இல்லை ஒருவேளை அவன் பாட்டி தம்பட்டம் அடிச்சது போல நல்லவன் தான் என நினைத்துக் கொண்டே..

இந்த ரூம் மேப் குடுங்க என கை நீட்ட..

அவன் அதற்கு பதில் சொல்லாமல், உன்னோட லக்கேஜ் பேக் அங்கே இருக்கு, டிரஸ் மாத்திட்டு ஒரிஜினலா வா என பால்கனி சென்றான்.

ஒரிஜினல்னா "அம்மணமா" வர சொல்றானா? இருக்காது இருக்காது என்று நினைத்துக் கொண்டே உடைகளை மாற்றிவிட்டு வளன் நின்று கொண்டிருந்த பால்கனிக்கு வந்தாள்.

அவளைப் பார்த்தவன் நாட் பேட். லுக்ஸ் குட் என மனதில் நினைத்தான்.

பெண் வாசம் இதுவரை அறியாதவனுக்கு அவள் அருகில் இருப்பது ஒருவிதமான உணர்வை தந்தது..

நீ இந்த மேரேஜ் பத்தி என்ன நினைக்குற?

அய்யே, மொக்க போட கூப்பிட்டுருக்கான் சைக்கோ என நினைத்துக் கொண்டே, இப்படி நடக்கும்னு நினைக்கல..

ஹம், உன்னால இதை ஏத்துக்க முடியுதா?

ஹம்..

என்னால முடியலை..

அதுக்கு நான் என்னடா பண்ண முடியும் என்பதைப் போல பார்த்தாள்.

நா‌ன் எதையும் மறைக்க விரும்பலை. எனக்கு விவாகரத்து வேணும்..

ஓஹ்! அவ்ளோ தானா? நான் மார்னிங் விவாகரத்து தரேன்.நீங்க உங்க அம்மாகிட்ட மார்னிங் பூஸ்ட் மட்டும் ரெடி பண்ண சொல்லுங்க, இப்ப நான் போய் தூங்குறேன், குட் நைட் என சொல்லி பெட் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

அவளது பதிலை சற்றும் எதிர்பார்க்காத வளன் வாயடைத்து நின்றபடி அவள் செல்லும் திசையை பார்த்தான்...
[+] 2 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: வித்யா வித்தைக்காரி 02 - by JeeviBarath - 06-03-2024, 05:20 AM



Users browsing this thread: 4 Guest(s)