அபர்ணா அண்ணி
தன்மானம், குடும்ப கௌரவம் என்ற பெயரில் லீனாவின் குடும்பத்தார்கள் லீனாவை பழிவாங்குவது அல்லது தண்டிப்பது அப்பாவுக்கு மிகவும் மனதினை நோகடித்திருக்க வேண்டும்.. அதனாலேயே லீனாவை தானே நல்ல ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதாக வாக்களித்து கூட்டிக்கொண்டு வந்து விட்டார்.. அம்மாவும் அந்த முடிவினைப் பாராட்டினார்.. எனக்கும் அவர் செய்தது மிகவும் பிடித்திருந்தது.. ஆனாலும், உள்ளுக்குள் ஒரு பயம்.. லீனாவின் மனதினை மாற்றி எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்களோ என்று.. இருந்தாலும், அண்ணா காதலித்த பெண் என்பதாலும் கல்யாணத்துக்கு அப்புறமும் தொடர்ந்த அவர்களது தொடர்பு காரணமாகவும் அப்பா அம்மா அது பற்றி யோசிக்க மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கையும் இருந்தது..

லீனா காரில் வரும் பொழுதும் கூட அழுகையை நிறுத்தவில்லை.. அழுது கொண்டே தான் வந்து கொண்டிருந்தாள்.. அம்மாவும் அப்பாவும் அவளை தேற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.. நான் காரை ஓட்டிக் கொண்டு அமைதியாக நடப்பதனை அவதானித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன்.. அண்ணா முன் சீட்டில் வெளியே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான்..

"நா எந்த தப்பும் பண்ணல ஆண்ட்டி.. ஆனாலும் என்ன எங்க அண்ணனே அப்புடி சொல்லுறான்.. எவ்வளவு ஹர்டிங்கா இருக்கு தெரியுமா...? இவர லவ் பண்ணது மட்டும் தான் நா பண்ண தப்பு.. இந்த கல்யாணம் வேணாம் வேணாம் னு எவ்வளவு அழுதேன்.. அதையெல்லாம் பொருட்படுத்தாம தானே எனக்கு விருப்பமில்லாத கல்யாணத்த பண்ணி வச்சாங்க.. இப்ப என்ன மட்டும் தப்பு சொல்றாங்க முழுக்க முழுக்க.." அழுதழுது தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திக் கொண்டு வந்தாள் லீனா..

அம்மா லீனாவை அணைத்து அவரது நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.. அம்மாவும் லீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாவது எனக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்தது..

எப்படியாவது அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்து லீவை அண்ணியாக்கி விட வேண்டும்.. நான் எனது முன்னாள் அண்ணியை எனது மனைவியாக்கிக் கொள்ள வேண்டும்.. இது மட்டும் நடந்துவிட்டால் போதும்.. எனது வாழ்க்கை நிறைந்து விடும்..

கொஞ்ச நேரத்தில் லீனாவின் வீடு இருக்கும் ஏரியா வரவும் நான் உள்ளே செல்லும் பாதையில் காரை திருப்பினேன்.. ஆனால் அம்மா வண்டியை நேராக நமது வீட்டுக்கு விடுமாறு கூற நானும் வண்டியை திருப்பி வீடு நோக்கி செலுத்தினேன்..

வீட்டிற்கு சென்றதும் எல்லோரும் ஹாலில் ஒன்றாக அமர்ந்தோம்.. அம்மா எல்லோருக்கும் நல்ல டீ போட்டுக் கொண்டு வந்தார்.. லீனா கொஞ்சம் அமைதி அடைந்திருந்தாள்..

"ஏம்மா...! உங்க பேமிலி கூட நா ஏதும் தப்பா பேசி இருந்தா என்ன மன்னிச்சிரும்மா..."
என்றார் அப்பா..

"என்ன அங்கிள் இப்படியெல்லாம் பேசுறீங்க.. நீங்க ஒரு வார்த்த கூட தப்பா பேசல.. எங்க குடும்பத்தவங்க தான் உங்கள மரியாதை இல்லாம பேசிட்டாங்க.. அதுக்காக நா தான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கணும்.. எனக்காக அவங்கள மன்னிச்சிருங்க அங்கிள்.." என்றாள் லீனா பதிலுக்கு..

"அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.. ஆனா இனிமே நீயும் என் பொண்ணு மாதிரி தான்.. நா இன்னைல இருந்து உன்னோட கார்டியன்.. உனக்கு நல்ல ஒரு வாழ்க்கைய அமைச்சு தர வேண்டியது என்னோட பொறுப்பு.. ஆனாலும், நா உன்கிட்ட கேக்குறேன்.. நீ எதுவுமே மறைக்காம உண்மையா மட்டும் தான் சொல்லணும்.."

"என்ன அங்கிள்...?"

"உனக்கு நா பாக்குற பையன் யாரா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படுவியா..? இல்லன்னா உனக்கு இன்னும் இவனத் தான் பிடிச்சிருக்கா..?" அப்பா கொஞ்சம் ஸ்ட்ரயிட் போர்வர்ட் டைப் தான்.. ஆனாலும், அவளை திக்குமுக்காடச் செய்யும் அளவுக்கு இப்படி கேப்பார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.. அவள் கொஞ்சம் அதிர்ந்தாள்.. அண்ணனையும் அம்மாவையும் மாறி மாறி பார்த்து நெளிந்தாள்.. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. உதடுகளை உள்ளே இழுத்தவாறு கொஞ்சம் யோசித்தாள்..

"நீங்க எது சொன்னாலும் எனக்கு ஓகே அங்கிள்.. நீங்க என்ன சொன்னாலும் நா கேக்குறேன்.. ஆனா கொஞ்ச நாள் போகட்டும்.." கொஞ்சம் தயக்கத்துடன் சொன்னாள் பவ்வியமாக..

"கொஞ்ச நாள் ன்னா..?"

"அட்லீஸ்ட் ஒரு வருஷமாச்சும் போகட்டும் அங்கிள்.. ஐ வில் ட்ரை டு பிக்ஸ் மை மைண்ட்.."

"நா உன்னோட பதில கேக்கலம்மா.. உன்னோட விருப்பத்த கேட்டேன்.."

"எதுன்னாலும் சொல்லுமா.. தயங்காம சொல்லு.." என்றார் அம்மா..

"லீனாக்கு தான் அண்ணன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே.. அதனால தானே இவ்வளவு ப்ராப்ளம்.. அவ எப்புடிப்பா வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவா...?" என்று லீனாக்கு ஆதரவாக ஒரு பாயிண்ட் எடுத்து வீசினேன்..

"சொல்லுமா.." என்று அம்மா அவளது தோளை பிடித்து உசுப்பினார்..

"எனக்கு உங்க பையன ரொம்ப பிடிக்கும்.. அவரு கூட தான் என்னோட வாழ்க்கைன்னு ரொம்பவே கற்பன பண்ணி வாழ்ந்துட்டேன்.. ஆனாலும், அதுக்குள்ள என்னென்னமோ நடந்துரிச்சு.. என்னால அவர மறந்து வாழ முடியல.. ஆனாலும், அவருக்கு இப்ப கல்யாணம் ஆயிடிச்சி.. அவர நம்பி ஒரு பொண்ணும் இருக்கா.. சோ.. அந்த பொண்ணு வாழ்க்க என்னால ஒரு நாளும் நாசமாக நா விருப்பல.. என் மனசும் அதுக்கு இடம் கொடுக்காது.. அதனால தான் சொல்றேன்.. எல்லாமே கொஞ்ச நாள்ல ஓகே ஆய்டும்.. அப்புறமா நா நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்குறேன்.. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் மட்டும் தந்தா போதும்.." குனிந்த தலை நிமிராமல் தைரியமாக கூறி முடித்தாள்..

"வாட் அ ப்ரேவ் கேர்ள்" என்று எழுந்து கை தட்ட வேண்டும் போல இருந்தது எனக்கு..

"சரி.. இது பத்தி நாங்களும் கொஞ்சம் யோசிக்கணும்.. நாம இது பத்தி அப்புறமா பேசலாம்.. நீ அந்த ரூம் ல போய் கொஞ்சம் ரெஸ்டா எடும்மா.." என்று எழுந்தார் அப்பா.. அம்மா அவளை ரூமுக்குள் கூட்டிச் சென்றார்.. நான் அண்ணனைப் பார்த்தேன்..

"போற போக்க பாத்தா லீனா தான் எனக்கு அண்ணி ஆகுவாங்க போலயே.." என்றேன் நான் நக்கலாக..

"சும்மா இருடா.. நானே கண்பியூஸ் ஆகி இருக்கேன்.."

"என்ன கண்பியூஸ்..?"

"இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியலையே.. நா இவள கல்யாணம் பண்ணா அபர்ணா நிலம என்ன..? அபர்ணாவ கூட்டி வந்தா இவ நிலம என்ன...?"

"எப்புடியும் ஒருத்தர் வாழ்க்க கஷ்டம் தான் ணா.. அவங்களுக்காக பாவப்படவும் பிரேய் பண்ணவும் தான் நம்மளால முடியும்.. என்ன பண்றது.. இல்லன்னா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி கூடவே வச்சிக்கோ..."

"கொஞ்சம் சீரியஸ்ஸா பேசுடா.. நீ வேற.. நிலம புரியாம.."

கொஞ்சம் நேரம் அவளுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அம்மா வெளியே வந்து எங்களுடன் அமர்ந்தார்..

"பாவம்.. நல்ல பொண்ணு.. அவ வாழ்க்கைல இப்படி ஒரு சோகம்.. கடவுளே.." என்றார் அம்மா..

"அவ வாழ்க்கைல வந்த சோகத்துக்கு காரணம் யாரு.. நம்ம நல்ல தம்பிதான்.." என்றேன் நான் நக்கலாக..

"அதானே.. எல்லாம் இவனால.. எனக்கு என்ன பண்றதுண்ணே ஒண்ணும் புரியல.. பாவம் அந்த பொண்ணுங்க ரெண்டு பேரும்.." என்றார் அம்மா..

"ஏம்மா...! உங்க செல்வாக்க பயன்படுத்தி அண்ணனுக்கு அவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா என்ன...?"

அம்மா சிரித்துக் கொண்டு அண்ணனைப் பார்த்தார்.. அவன் என்னை முறைத்து விட்டு கோபத்தில் செல்வது போல எழுந்து ரூமுக்குள் சென்று விட்டான்.. அம்மா என்னைப் பார்த்து சொன்னார்..

"அவனுக்கு லீனாவ தான் ரொம்ப பிடிக்கும் போல.."

"அது எப்புடி சொல்றீங்க...?"

"அபர்ணாவும் லீனாவும் அழகான பொண்ணுங்க.. ஆனா அபர்ணா கூடவே இருந்தும் அவள விட்டுட்டு லீனா கூட பேசி இருக்கான் னா அபர்ணாவ விட இவள தானே பிடிச்சிருக்குன்னு அர்த்தம்...?"

"எல்லாம் லவ்வு மா.. அழகுன்னு இல்ல.. எது வந்தாலும் லவ் மாறாது.. லவ் பண்ண பொண்ண தேடித் தான் மனசு போகும்.."

"சரி.. இப்ப என்ன பண்ணலாம்...?"

"நா என்ன சொல்ல...? அதெல்லாம் நீங்களும் அப்பாவும் சேர்ந்து ஏதாச்சும் ஒரு முடிவு எடுங்க.. என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நானும் சப்போர்ட்டா இருப்பேன்.."

அப்பா ரூமுக்குள் சென்று லுங்கியை மாற்றிக் கொண்டு வந்து எங்களுடன் அமர்ந்தார்..

"இங்க பாருங்க.. நாம மூணு பேரும் அவங்களுக்கு தெரியாம சில விஷயங்கள் பேசணும்.." என்றார் மெல்லிய குரலில்..

"என்னப்பா..?"

"அபர்ணா குடும்பத்துக்கு நாம பதில் சொல்லணும்னா அதுக்கு இன்னும் பதினஞ்சு நாள் தான் இருக்கு.. லீனா ரொம்ப பாவம்.. அவ குடும்பமே அவள கை விட்டிடிச்சு.. அவள ஃபோர்ஸ் பண்ணி இப்ப நாம கல்யாணம் பண்ணி வைக்கவும் முடியாது.. சோ.. நா நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுத்திருக்கேன்.."

"என்ன முடிவு..?" அம்மா வியப்புக் குறியுடன் கண்களை விரித்துக் கேட்டார்..

"அபர்ணா நல்ல பொண்ணு.. இவ்வளவு நடந்தும் இவ்ளோ நாள் அவ நம்ம குடும்பத்த நல்ல முறைல பாத்துக்கிட்டா.. யார்கிட்டயும் அவ கம்பளைண்ட் கூட பண்ணல.. அவ ஒரு நாளும் நம்மளால கஷ்டப்படக் கூடாது.. அதே நேரம் இந்த பொண்ணு லீனாவும் நம்ம பையனும் ரொம்ப பாவம்.. காதல் பிரிவு வலி என்னன்னு அத அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்.. நம்ம பையனும் அவன் மனசுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு புதச்சிட்டு புழுங்கிக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்திருக்கான்.. அதனால.." என்று இழுத்தார்..

"அதனால...?"
அம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை..

ஆனாலும், எனக்கு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று எனக்குக் கொஞ்சம் புரிந்தது.. அது எதுவாக இருந்தாலும், அதற்கு முதல் நான் எனது ஆசையினை கூற இது தான் சந்தர்ப்பம்.. முந்திக் கொண்டேன்.. நான் அம்மாவைப் பார்த்தேன்..

"அம்மா.. இன்னுமா உங்களுக்கு புரியல.. அண்ணாவையும் லீனாவையும் கல்யாணம் பண்ணி வச்சிட்டு.. அதுக்கு பரிகாரமா அபர்ணா அண்ணிய எனக்கு கட்டி வைக்கப் பாக்குறாரு.. அது ஒரு நாளும் நடக்காது.. அவங்க எனக்கு அக்கா மாதிரி.." என்றேன் பொய்க் கோபத்துடன்..

"என்னங்க இது..? அதெப்புடி முடியும்...? இதுக்கெல்லாம் யாரும் ஒத்துக்க மாட்டாங்க.. ஒரு நாளும் நடக்காது.."

"நா சொல்ல வந்த விஷயம் அது இல்ல.."

"அப்புறம் என்ன..?"

"அபர்ணா வீட்ல போய் அவங்க கால்லயாச்சும் விழுந்து மன்னிப்புக் கேட்டு.. அபர்ணாக்கும் பேசி புரிய வச்சு.. அவங்கள கஷ்டப்படுத்தாம அவக்கு ஒரு நல்ல பையனா நாமலே பாத்து கல்யாணம் பண்ணி குடுத்துட்டு.. நம்ம பையனுக்கும் லீனாக்கும் கல்யாணத்த பண்ணி வைக்கலாம் ன்னு தான் சொல்ல வந்தேன்.."
எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ஆனாலும் எனது ஐடியாவை எனக்கு விருப்பம் இல்லாத மாதிரியாக கூறி அவர்களின் மனதில் விதைத்து விட்டேன்..

"அதெப்புடிங்க இவ்வளவு சிம்பிளா ஒரு முடிவு எடுத்தீங்க...? அபர்ணாவும் அவ குடும்பமும் என்ன பொம்மைங்களா நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட..? அவ பாவம் இல்லையா..? இன்னொன்னு.. நீங்க நினைக்கிற மாதிரி அவக்கு யாருங்க உடனடியா மாப்புள தருவாங்க..? இனிமே அவள கல்யாணம் பண்ணனும்ன்னா யாராச்சும் ரெண்டாம் தாரமா தான் பண்ணிப்பாங்க.. கொஞ்சம் வயசானவங்க.. இல்லன்னா புள்ள குட்டின்னு இருக்குறவங்க தான் வருவாங்க.. பாவம்.. அவ சின்னப் பொண்ணுங்க.. அவள டைவர்ஸ் பண்ண நா ஒரு நாளும் ஒத்துக்க மாட்டேன்.." என்று திட்டவட்டாக அப்பாவின் முடிவினை எதிர்த்தார் அம்மா..

"இங்கப் பாரு.. அவங்களே டைவர்ஸ் பண்ணுற நோக்கத்துல தான் கூட்டி போய் இருக்காங்க.. அப்புறமா அவங்க யாரையாச்சும் பாத்து அவக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் போறாங்க.. அத நாமலே நம்ம மனசு சந்தோசத்துக்காக ஒரு நல்ல பையன பாத்து பேசி கல்யாணம் பண்ணி வைக்கலாம்.. ஏன்னா.. அவ லைஃப் ல இனிமே வரப்போற ஒவ்வொரு கஷ்டத்துக்கும் நாம தான் காரணமாக போறோம்.. அதனால தான் சொல்றேன்.."

"ஆனாலும், அபர்ணாவ டைவர்ஸ் பண்ணாம நம்ம பையன் கூடவே சேர்ந்து வாழுற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க.. ப்ளீஸ்.. அவ பாவம்.. ரொம்ப நல்ல பொண்ணு.."

"அவ ரொம்ப நல்ல பொண்ணு தான்.. ஆனா.. உன் பையன் மறுபடியும் லீனா கூட பேச மாட்டான் தொடர்பு வைக்க மாட்டான்னு என்ன நிச்சயம்...? அதே மாதிரி அவன் பண்ணலைனாலும் அபர்ணா மனசுல அது தான் ஓடிக்கிட்டே இருக்கும்.. சந்தேகத்தோடயே தான் அவ இவன் கூட வாழ்ந்துட்டு இருப்பா.. அத விட இது தான் நல்லதுன்னு படுது எனக்கு.."

(தொடரும்..)
[+] 10 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 05-03-2024, 01:20 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 24 Guest(s)