Romance ?கலையாத❣️கனவுகள்?
#9
Heart 
exam எழுதிவிட்டு resultkku காத்திருக்கும் நிலமையை விட கொடியது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது என்று கத்தி சொல்லணும் போல ஒரு உணர்வு அவள் ஓகே மட்டும் சொல்லிவிட்டால் கத்தி சொல்லிவிடுவேன். ஆனால் சொல்லாமல் சென்று விட்டாலே. அபி பலதடவை எனக்கு call செய்தும் நான் எடுக்கவில்லை. எந்த செய்தியையும் இப்போ நான் கேட்கும் நிலையில் இல்லை. என்ன முடிவாக இருந்தாலும் யாழ் சொல்லியே கேட்டுகொல்வோம் என்று இருந்து விட்டேன்.

மாலையில் கல்லூரி முடிந்து அதே பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அவர்களின் பேருந்து வந்தவுடன் பார்த்தால் யாழ் வரவில்லை. அபி மட்டும் வந்து 
போகலாம் என்று சொல்லி bike ஏறி அமர்ந்தாள். போகும் வழியில் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அபி வீடு வந்தவுடன் இறங்கி என் கன்னத்தில் பளார் என்று சத்தம் வர அறைந்தாள். காரணம் சொல்லாமல். நான் அமைதியாக நிற்க அவளே ஆரம்பித்தாள்

காதல் கத்தரிக்கையலாம் மூலைல ஓரங்கட்டி வைசிட்டு படிக்கிற வேலைய மட்டும் பாரு

சரி அபி, யாழ் ஏதாவது சொண்ணாலா

சொன்னா அவளோட லவ் பத்தி சொன்னா 

அவளோட love னா புரியலை 

டேய் அவ ஏற்கனவே ஒருத்தனை love பன்றாலாம். இதை உன்கிட்ட மட்டும் இல்லை இவளோ நாள் கூடவே இருக்கேனே என்கிட்ட கூட இருந்து மறைசிருக்கா ரொம்ப சீக்ரெட் love போல, நீ எதையும் நினைச்சி ஃபீல் பண்ணிக்காம படிப்புல கவனமாக இரு டா  என்ன okay தானே

சரி அபி நான் கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம்

சரி டா, நீ வீட்டுக்கு போ கொஞ்சம் நேரம் ஆனதும் நான் வரேன், அம்மா வர சொன்னாங்க எனக்கு வர நேரம் கிடைக்கலை டா

சரி நீ ஃப்ரீயா இருக்கும் போது வா அவங்க எப்போதும் v2la தானே இருக்காங்க நான் கிளம்புறேன் அபி
அபிகிட்ட சொல்லிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன் எனது அறைக்கு சென்ற நான் கட்டிலில் படுத்து கதறி அழுக ஆரம்பித்தேன். 5வருஷம் லவ் பண்ணி love சொல்ல போன அன்னைக்கே என் மொத்த love pochey என்னோட யாழ் இப்போ வேற ஒருத்தனூட யாழ் கடவுளே நானும் love சொல்ல கஷ்டப்படும் போதெல்லாம் கூட இந்த விஷயம் தெரின்சிருத்நால் எண்ணொடவே என் வலி போயிருக்கும். ஆனா இப்போ 5yrs நட்பா பழகின யாழ் என்னை விட்டு போக போரலே நட்பும் போச்சி காதலும் போச்சி அழுகை வந்து கொண்டே இருந்ததே தவிர நிறுத்துவதற்கு வழி இல்லை. என்னால் முடிந்தவரை கண்ணீர் தீரும் வரை அழுதேன். அழுது முடித்து எப்பொழுது உறங்கினேன் என்று தெரியவில்லை. அபி வந்து எழுப்பினால்.

தேவா டேய் என்னடா இப்படி தூங்குற இந்த நேரத்தில என்று கூறிக்கொண்டே என் முகத்தை பார்த்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் அழுது கண்ணீர் வந்த தடதுடன் என் முகமும் வீங்கி இருப்பதை கண்டு எதுவும் பேசவில்லை. இவளுக்கும் புரியும் அல்லவா. கடந்த 5வருடத்தில் நான் எந்த அளவுக்கு அவள் மேல் காதல் வைத்து அதை சொல்ல தடுமாறினேன் என்று. நாம் நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் கடவுள் என்று ஒருவர் இருப்பது மறந்துவிடும் அல்லவா. என்னிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்ற அபி அவன் தூங்குறான். அப்புறம் வாரேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றால். நான் மீண்டும் உறங்க ஆரம்பித்தேன்.
[+] 3 users Like Thamizhan98's post
Like Reply


Messages In This Thread
RE: ?கலையாத❣️கனவுகள்? - by Thamizhan98 - 04-03-2024, 05:23 PM



Users browsing this thread: 2 Guest(s)