03-03-2024, 02:38 PM
(03-03-2024, 11:39 AM)FantasyX Wrote: என்ன பண்றது தலை, மீண்டும் உண்மை கதைன்னு உருட்டுறான்..
வியூ குறைந்தது, திரி அவ்வப்போது இரண்டாவது பக்கம் போக ஆரம்பித்தவுடன் மீண்டும் பதிவுகள் வேகமாக வருகிறது, உண்மைக்கதை என்ற உருட்டும் இணைந்தே வருகிறது.
கதையின் views பற்றி நான் ஒருபோதும் எதிர்பார்த்ததோ கவலைப்பட்டதோ கிடையாது.. என்னைப் பொறுத்தவரை இப்பொழுது வந்திருக்கும் views எனக்கு தலைக்கு மேல்.. நான் இந்தக் கதைக்கு இவ்வளவு சொற்ப காலத்தில் இவ்வளவு views வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவும் இல்லை.. வந்ததே போதும் என்று தான் நான் நினைக்கிறேன்.. அது போக ஒவ்வொரு நாளும் views குறைகிறதா கூடுகிறதா என்று நான் பார்ப்பதும் இல்லை..
நான் கதையை அப்டேட் பண்ணினாலோ அல்லது யாராவது கமெண்ட் பண்ணினாலோ அந்த நேரம் முதல் பகுதியில் முதல் இடத்தில் எனது கதை வரும்.. அதே போல அடுத்த கதைகள் அப்டேட் ஆகும் போது எனது கதை கீழே செல்லும்.. அடுத்த பேஜிற்கும் செல்லும்.. இதெல்லாம் தெரிந்த விடயம் தானே.. ஏற்கனவே 5.4L views வந்த எனது கதை முதல் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று எதற்காக நான் நினைக்க வேண்டும்..? முதல்ப் பக்கத்தில் இருந்தால் தான் நமது கதையை அடுத்தவர்கள் படிப்பார்கள் என்றா இன்னும் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்...?