அபர்ணா அண்ணி
அப்பா அவனைப் பார்த்து.. "கோவப்படாதீங்க தம்பி.. பாக்கப் போனா எல்லாரும் தவறு செய்யக்கூடியவங்க தான்.. உங்க தங்கச்சியும் என் மகனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பி இருக்காங்க.. ஆனா, அது தெரிஞ்சதுக்கு அப்புறமா நீங்க அவக்கு வேற ஒரு பையன பாத்து கல்யாணம் பண்ணி குடுத்தீங்க.. ஆனாலும், லவ் பண்ணுன மனசு இல்லையா...? கல்யாணம் ஆனா மட்டும் உடனே காதல நிறுத்தி வைக்க முடியுமா என்ன...? ஒருத்தர ஒருத்தர் மறக்க முடியாம ஏதோ ஒரு ஆறுதலுக்காக ரெண்டு பேருமே சாட்டிங் பண்ணிக்கிட்டாங்க.. பேசிக்கிட்டாங்க.. அத தவிர அவங்க வேற ஏதும் தப்பு பண்ணல.. ஆனாலும், அதனால ரெண்டு பேர் லைஃப்லையும் இப்ப பிரச்சன.. உங்க பொண்ணு வாழ்க்கைல ஏதும் நல்லது நடக்காம என் பையன் வாழ்க்கைலயும் நல்லது நடக்காது.. எங்க பையனுக்காக நாங்க பேச வந்திருக்கோம்.. அதே மாதிரி நீங்களும் உங்க பெண்ணுக்காக உங்க மாப்புள்ளைக்கிட்ட திரும்பவும் பேசி இருண்டு போன அவ வாழ்க்கைல ஒளி ஏத்தி வைங்க.. புண்ணியமா போகும்.." என்று ரொம்ப பவ்வியமாக கேட்டார்..

"எங்கள எந்த முகத்த வச்சிக்கிட்டு சார் போய் மாப்புளைக்கிட்ட பேச சொல்றீங்க...? நாங்க உண்மைய மறச்சி தான் அவருக்கு இவள கல்யாணம் பண்ணி குடுத்தோம்.. ஆனாலும் இவ லவ்வு அது இதுன்னு எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டா.. அதுமட்டுமில்லாம எல்லாம் தெரிஞ்சும் அவரு இனிமே பேச வேணாம்னு சொல்லியும் கூட கேக்காம உங்க பையன் கூட தொடர்ந்து பேசி இருக்கா.. எவ்வளவோ பொறுத்துப் பொறுத்துப் பாத்த அந்த நல்ல மனுஷன் கடைசில பொறுமைய இழந்து இவள வெளிய அனுப்பிட்டாரு.. என்ன நடந்ததுன்னு
அவரு வீட்டுக்கு கூட சொல்லல.. ஆனாலும், எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு அவங்க குடும்பத்து ஆளுங்க எல்லாரும் எங்கள அடிக்காத குறையா வந்து சண்ட போட்டுட்டு போறாங்க.. நாங்க எல்லாரும் இன்னும் அவங்க குடும்பத்துகிட்டயும் இந்த ஊர் மக்கள் கிட்டயும் தல குனிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கோம்.. இப்ப எந்த முகத்த வச்சு நாங்க போய் அவங்ககிட்ட பேசுறது சொல்லுங்க.." என்றார் லீனாவின் அப்பா..

"நடந்தது நடந்து போச்சி.. அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா..? ஊர் உலகத்து பயந்து உங்க சொந்த பொண்ண வெளிய அனுப்பிட்டீங்க.. அவ என்ன ஆனா ஏது ஆனா ன்னு கூட நீங்க பாக்கல.. இதனால அவ ஏதும் தப்பான முடிவு எடுத்திருந்தா உங்களுக்கெல்லாம் ஓகேயா...? உங்க கடவுள் உங்கள மன்னிப்பாரா...? என் மகன் தான் அவள ரூம் எடுத்து தங்க வச்சி.. ஒரு வேலயும் ட்ரை பண்ணி எடுத்து கொடுத்திருக்கான்.. இல்லன்னா உங்க பொண்ணு இந்நேரம் உயிரோட இருந்திருப்பாவோ என்னவோ...? தயவு செய்து ஊருக்காக யோசிக்காம உங்க பெண்ணுக்காகவும் கொஞ்சம் யோசிங்க.." என்றார் அப்பா..

"நாங்க எங்க பொண்ண வெளிய அனுப்புனதே ரெண்டு பேருமே பண்ண தப்ப உணரணும் ன்னு தான்.. எங்க பொண்ணு வாழ்க்க நாசமா போன மாதிரி உங்க பையன் வாழ்க்கையும் நாசமா போகணும் ன்னு தான்.. இவள நாங்க வீட்லயே வச்சி இருந்திருந்தா உங்க பையன் அவரு பொண்டாட்டி கூட சந்தோசமா இருந்திருப்பாரு.. நாங்க மட்டும் வாழாவெட்டியான எங்க பொண்ண வச்சுகிக்கிட்டு ஒவ்வொரு நாளும் கவலப்பட்டுகிட்டே வாழனும் ல...?" மிகக் கடுமையாக லீனாவின் அப்பாவின் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன..

எல்லோரும் ஒரு நிமிடம் தடுமாறிப் போனோம்.. எனக்கு கோபம் தலைக்கேறியது.. ஆனாலும், அப்பா பொறுமையாக பேசிக்கொண்டு இருப்பதானால் எதுவும் பேசாமல் பொறுமையாக இருந்தேன்..

"சரி.. இப்ப நீங்க எதிர்பார்த்த மாதிரியே எல்லாமே நடந்திருச்சி.. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே.. இனிமே என்ன பண்ணலாம் ன்னு நினைக்குறீங்க...?" என்று கொஞ்சம் சமாளித்தார் அப்பா..

"இனிமே என்ன பண்ண..? இனிமே இவள யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க சொல்லுங்க...? இவளப் பத்தி ஊர்ல என்ன பேசிக்கிறாங்க ன்னு உங்களுக்கு தெரியுமா...? கல்யாணம் பண்ண முதல்ல ஒரு லவ் இருந்திச்சாம்.. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமாவும் அத கண்டினியு பண்ணாளாம்.. அதோட மாப்புள்ள அவள வீட்ட விட்டு துரத்தி விட்டாராம்.. அதுக்கப்புறமா அந்த பொண்ணு அவ லவ்வர் கூடவே தனியா ரூம் எடுத்து தங்கி இருக்காளாம்.. இப்புடி தான் பேசிக்கிறாங்க.. எங்க பொண்ணுக்கு டைவர்ஸ் ஆக போகுது.. உங்க பையனுக்கும் டைவர்ஸ் ஆக போகுது.. டைவர்ஸ் ஆனதும் இவங்கள எங்கயாச்சும் கூட்டிப் போய் சேத்து வச்சிடுங்க.. ஏன்னா.. இனிமே யார கல்யாணம் பண்ணி குடுத்தாலும் அவங்க இதையே தான் பண்ணப்போறாங்க.. எங்க பொண்ணு இனிமேல் எங்களுக்கு தேவயே இல்ல.. தயவு செஞ்சி எல்லாரும் இங்கருந்து கிளம்புங்க..." என்று பிடியே கொடுக்காமல் பேசினார் லீனாவின் அப்பா..

"இங்க பாருங்க.. உங்க பொண்ண நீங்க மறுடியும் உங்க வீட்ல ஏத்துக்கணும்.. ஒரு நல்ல பையனா பாத்து அவருக்கு எல்லா உண்மையையும் சொல்லி புரிய வச்சு நாங்களே இவளுக்கு மறுபடியும் கல்யாணம் பண்ணி வைக்குறோம்.. எங்க பையன் இனிமே உங்க பொண்ணு கூட பேச மாட்டான்.. ரெண்டு பேருக்கு இடையிலும் எந்த தொடர்புமே இனிமே இருக்காது.. தயவு செஞ்சு உங்க பொண்ண நீங்க ஏத்துக்கோங்க.. ப்ளீஸ்.." என்றார் அப்பா..

"இவ்ளோ பேசுறீங்களே.. இந்த மாதிரி அரிப்பெடுத்து சுத்துற ஒரு பொண்ணுக்கு உங்க ரெண்டாவது பையன நீங்க கல்யாணம் பண்ணிக் குடுப்பீங்களா...?" லீனாவின் அண்ணா சீறினான்..

அதனைக் கேட்டதும் லீனா தலை குனிந்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.. அவள் இவ்வளவு நேரமும் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெடித்தது.. பாவம் அவள்.. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. அப்பா லீனாவை கவலையுடன் பார்த்தார்..

"உங்க பொண்ணையே நீங்க இப்புடியெல்லாம் சொல்லி காயப்படுத்தக்கூடாது.. பாவம்.. எப்புடி அழுறா பாருங்க.. நீங்களே இவ்ளோ சொன்னதுக்கு அப்புறமா இனி நாங்க இங்க இருந்து பேசி எதுவும் ஆகப்போறது இல்ல.. ஒரு கார்டியனா இருந்து நானே உங்க பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை அமைச்சி கொடுக்குறேன்.. அந்த நேரம் சொல்லி அனுப்புறேன்.. மனசிருந்தா வாங்க.."
என்றவாறு அப்பா எழுந்தார்.. நாங்களும் எழுந்தோம்.. அம்மா லீனாவை எழுப்பி அணைத்துக் கொண்டு அப்பாவுக்குப் பின்னால் காரை நோக்கி நடக்க நானும் அண்ணனும் பின் தொடர்ந்தோம்..
[+] 6 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 02-03-2024, 11:41 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 13 Guest(s)