Romance ?கலையாத❣️கனவுகள்?
#3
Heart 
பதிவு -2 (கடந்து வந்த பாதை - 2014)
பிப்ரவரி 13 இரவு 11.59 இன்னும் ஒரு நிமிடத்தில் காதலர் தினம் பிறக்கின்ற நேரம் வாழ்த்துக்கள் அனுப்பலாமா வேண்டாமா என்ற நினைப்புடன் எஸ்எம்எஸ் type செய்து வைத்துவிட்டு யோசித்துக்கொண்டே இருந்தேன். இன்னும் 10 விநாடிகள்...
சரியாக 12 மணிக்கு send கொடுத்தேன். என்ன ஆகுமோ எதுவும் பிரச்சினை வருமோ என்ற நினைவில்... ஆனால் thanks என்று பதில் sms வந்தது. கடவுளுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு good night மட்டும் அனுப்பிவிட்டு உறங்குவதற்கு தயார் ஆனேன். திடீர் என்று என் நினைவில் தோன்றிய என்று. இவ்வளவு நாட்கள் அவளுடைய phone number என்கிட்ட இருந்தது அனைவரும் அறிந்ததே. நள்ளிரவில் sms அனுப்பியும் அவள் யார் என்று தெரிந்துகொள்ள நினைக்காமல் thanks மட்டும் அனுப்புகிறாள் என்றால் என்னுடைய நம்பர் அவளிடம் இன்றும் உள்ளதா!!!
ஆச்சர்யத்தில் என் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. 2வருடங்கள் ஆகிறது. அவளிடம் பேசி இன்று வரை என்னுடைய எண் சேமித்து வைத்து இருக்கிறாள்.. பிளாக் கூட பண்ணாமல் இருக்கிறாளே உண்மையில் என்னைய பிடிக்கவில்லை என்று கூறியவள் இவ்வளவு நாட்கள் எப்படி என்னுடைய நம்பர் வைத்திருக்கிறார்கள். 
தூக்கம் மறந்து கல்லூரி கால நினைவுகள் என்னுடைய மனதில் வர ஆரம்பித்தன. என்னுடைய வாழ்க்கையில்  பள்ளி, கல்லூரி நினைவுகள் வரும் போதெல்லாம் அவள் பெயர் இல்லாமல் எதுவும் இல்லை அவள் இல்லாமலும் எதுவும் இல்லை. 

2011

அம்மா சீக்கிரம் பஸ் வந்துட போகுது லஞ்ச் பாக்ஸ் கொண்டு வாமா என்று வேகமாக கத்திகொண்டே என்னுடைய பேக்கினை எடுத்துகொண்டு கல்லூரி கிளம்ப தயார் ஆனேன்.  அம்மா திட்டி கொண்டே சாப்பாடு பாக்ஸினை கொண்டு வந்து கொடுத்தார்கள். 
எதுக்குடா இப்போ ரெக்கை கட்டி பறக்குற 8மணிக்கெல்லாம் யாருடா அங்கே கிளாஸ் எடுக்கிறது. Bikela தானே போற 10மின்ட்ல போயிடலாம். எதுக்கு அவசரம் உனக்கு என்று அம்மா சொல்லிகொண்டே வர என் அவசரம் உனக்கு புரியாது என்று அம்மாவிடம் போய்ட்டு வாரேன் என்று சொல்லிவிட்டு எனது bike எடுத்துக்கொண்டு வேகமாக  அபியோட வீட்டிற்க்கு சென்றேன். 

அபி கிளம்பிட்டியா

2மினிட் வந்துடுறேன் என்று சொல்லி அவளும் வேகமாக வந்தால், வந்தவள் 

தேவா எல்லாமே ரெடி தானே இன்னைக்கும் சோதப்பிடாத டா 5வருஷம் காத்திருந்தது வீணா ஆகிடும்

அபி நீ எதுக்கும் கவலை படாதே இன்னைக்கு propose கண்டிப்பா பண்றேன் நீ பார்க்குற 

இந்த நக்கலா பேசுறதெல்லம் நல்லாத்தான் இருக்கு ஆனா 5வருஷமா பேசுறா ஆன love மட்டும் சொல்ல என்னடா தயக்கம் உனக்கு

உனக்கு என்னமா ஈசியா சொல்லிட்ட love பத்தி நினைச்சாலே அவகிட்ட பேச வார்த்தையே வரமாட்டெங்கிது மத்தபடி நான் தைரியமா போறேன் ஜாலியா பேசுறேன் ஆன propose panna தைரியம் இல்லையே அபி

விடு சகோ இன்னைக்கு பொரோம் பண்றோம் ok சீக்கிரம் வண்டிய எடு வந்துட போறா நேர பஸ் ஸ்டாண்டு போ அங்கே தான் இருக்கா. அங்கே போனதும் நான் கடைக்கு போற மாதிரி போறேன். அதுக்கு அப்புறம் நீ பேசிக்க ஓகே வா

அபி சொல்லியதுகு சரி சொல்லிவிட்டு போனேன். பஸ் ஸ்டாண்டு வந்ததும் அபி சொன்ன மாதிரியே போய்விட்டாள். அங்கே என்னவள் எனக்காக பிறந்தவள் நின்றுகொண்டு இருந்தால். எங்கள் இருவரையும் பார்த்ததும் சிரித்து கை அசைத்துவிட்டு என்னிடம்

ஹாய் தேவா 

ஹாய் யாழ்

எப்டிடா இருக்க 
பார்க்கவும் முடியலை ரொம்ப பிசியா

கொஞ்சம் busy தான் 
என்னிடம் இருந்து வார்த்தைகள் வர தடுமாறியது. அதனை பார்த்த அவள்

என்னடா தடுமாருது பேச என்னாச்சி டா

யாழ் உன்கிட்ட கொஞ்சம் ஒன்னு சொல்லணும் 

சொல்லுடா (கொஞ்சம் சிரித்த முகத்துடன் கேட்டால்)
அவளின் சிரிப்பினை பார்த்ததும் என்னிடம் இருந்து வார்த்தைகள் வர தடுமாறியது.

சொல்ட்ரெனு சொல்லிட்டு அமைதியா என்னடா நிக்கிற

I love you கவியாழினி

அவளின் கண்களை பார்த்து கையில் ரோஜா பூவினை நீட்டி சொல்லிவிட்டேன். அவள் முகத்தில் இருந்த சிரிப்பு ஒரு வினாடியில் மொத்தமும் இல்லாமல் போனது. அமைதியாக நின்றவள் என் கண்களை பார்த்துக்கொண்டே நின்றால். அந்த நேரம் அபியும் வர யாழ் எதுவும் அபியிடம் சொல்லவில்லை. அவள் அமைதியாக மட்டும் நின்று கொண்டு இருந்தாள். முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. சிறிது நேரத்தில் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்தவுடன் அபியும் அவளும் கிளம்பினார்கள். பேருந்தில் சண்ணலோரதில் அமர்ந்து திரும்பி என்னை ஒரு முறை பார்த்தால். அந்த பார்வையில் அவளின் ஏமாற்றம் தான் தெரிந்தது. பதில் சொல்லாமல் போய்விட்டாள். வருத்தம் கொஞ்சம் இருந்தாலும் எனக்கும் கல்லூரிக்கு நேரம் ஆனதால் கிளம்பிவிட்டேன். மாலையில் சந்திக்கலாம் அபியினை பிக்கப் பண்ண வரும் போது என்று நினைத்து கொண்டே..

கல்லூரியில் என் மனம் முழுவதும் அவள் நினைவுகள் மட்டுமே. காதலை காதலியிடம் சொல்லிவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருக்கும் தருணம் exam எழுதிவிட்டு resultkku காத்திருக்கு
[+] 5 users Like Thamizhan98's post
Like Reply


Messages In This Thread
RE: ?கலையாத❣️கனவுகள்? - by Thamizhan98 - 02-03-2024, 06:49 PM



Users browsing this thread: 2 Guest(s)