02-03-2024, 01:54 AM
இப்படியே நாட்களும் நகர்ந்தன.. புதிதாய் காதலிக்க ஆரம்பித்தவர்கள் போல நாள் முழுவதும் சாட்டிங் பண்ணிக்கொண்டும் திருட்டுத்தனமாக போன் பேசிக்கொண்டும் காலத்தினை ஓட்டிக்கொண்டிருந்தோம்.. அவள் மீதான காதல் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது..
ஒரு நாள் நான் ஏற்கனவே இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணி இருந்த ஒரு கம்பெனியில் இருந்து எனக்கு ஜாப் கால் லெட்டர் வந்திருந்தது.. எனது படிப்பிற்கு ஏத்த, எனக்குப் பிடித்த மாதிரியான, நல்ல சம்பளத்துடன் வேலை.. நானும் சந்தோசமாக வேலையில் சேர்ந்தேன்..
எனக்கு வேலை கிடைத்தது எனது அப்பா அம்மாவை விட அபர்ணாவுக்குத் தான் மிகவும் சந்தோஷமாக இருந்தது.. வேலை நேரங்களில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவளுடன் சாட்டிங் பண்ணிக்கொண்டே இருப்பேன்.. அவளது காதல் மயக்கத்தில் இருந்த எனக்கு அங்கு என்னுடன் வேலை செய்யும் கவர்ச்சியான மேக்கப்புகளும் இறுக்கமான ஆடைகள் அணிந்த மாடர்ன் பெண்கள் கூட ஒரு பொருட்டாக இருக்கவில்லை..
இது இப்படி இருக்க.. ஒரு நாளைக்கு நான்கு ஐந்து தடவைகளாவது அம்மாவும் அபர்ணாவும் போனில் பேசிக் கொண்டனர்.. சீக்கிரமே ஏதாவது பண்ணி மறுபடியும் அபர்ணாவை வீட்டிற்கு கூட்டி வருமாறு அண்ணாவையும் அப்பாவையும் அம்மா நச்சரித்துக் கொண்டே இருந்தார்.. ஒரு ஞாயிற்றுக் கிழமை.. விடுமுறை நாள்.. அப்பா அண்ணாவிடம் லீனாவை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.. அவள் வந்ததும் அப்பாவும் அம்மாவும் அவளுடன் மனம் விட்டுப் பேசினார்கள்.. அவளது அழகும் குணமும் பண்பும் இருவருக்கும் ரொம்பவே பிடித்துப் போனது.. அவளை அழைத்துக் கொண்டு சென்று அவளது குடும்பத்தவர்களை சந்தித்துப் பேசி அவர்களை சமாளித்து லீனாவை அவளது குடும்பத்தவர்களுடன் சேர்த்து வைக்கலாம் என முடிவெடுத்தனர்..
அதே போல.. பகல் சாப்பாட்டின் பின்னர் ஐந்து பேரும் லீனாவின் வீட்டிற்குக் கிளம்பினோம்..
அவளது வீட்டில், லீனாவுடன் சேர்த்து எங்கள் அனைவரையும் கண்டதும் அவளது குடும்பத்தார்கள் எல்லோரும் கோபமடைந்தனர்.. ஆனாலும், ஒரு மரியாதைக்காக உள்ளே வந்து அமருமாறு கூறினார்கள்..
நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.. லீனாவின் குடும்பத்தார்கள் யாரும் லீனாவைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவள் அருகில் கூட யாரும் செல்லவில்லை.. ஒரு விருந்தாளியைப் போல் தான் அவள் அவளது சொந்த வீட்டில் அமர்ந்திருந்தாள்.. நான் அவர்கள் அவள் மேல் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.. வீடே அமைதியாக இருக்க அப்பா தான் ஒரு செருமலுடன் பேச்சினை ஆரம்பித்தார்..
"நாங்க இங்க எதுக்காக வந்திருக்கோம்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. உங்க பொண்ணால நீங்க என்ன கஷ்டப்பட்டீங்களோ.. அவமானப் பட்டீங்களோ.. அதே மாதிரி எங்க பையனால நாங்களும் கஷ்டப்பட்டிருக்கோம்.. அவமானப் பட்டிருக்கோம்.. அவனோட லைஃபும் இப்ப டைவர்ஸ் லெவல்ல தான் இருக்கு.. சோ.. நாம தான் பேசி ஒரு முடிவுக்கு வந்து நம்ம ரெண்டு குடும்பங்கள்லையும் இருக்குற பிரச்சனைகள தீர்த்து வைக்கணும்.."
யாருமே எதுவும் பேசாமல் இருக்க.. அப்பா தொடர்ந்தார்..
"நா என்ன சொல்ல வாரேன்னா.. நம்ம புள்ளைங்க ஏதோ சின்னஞ்சிறிசுங்க.. தெரிஞ்சோ தெரியாமலோ இந்த தப்ப பண்ணிட்டாங்க.. ஏற்கனவே நொந்து போய் இருக்குற அவங்கள நாமளும் சேர்ந்து தண்டிக்குறது சரி இல்ல.. அவங்கள மன்னிச்சு அந்த தவற இன்னொரு தடவ செய்யாம இருக்கற மாதிரி நாம தான் ஏதாச்சும் பண்ணனும்.."
"இப்போ அதுக்கு என்ன பண்ணனும்னு சொல்றீங்க சார்...?" லீனாவின் அண்ணா திமிராக அப்பாவைப் பார்த்துக் கேட்டான்..