Romance ?கலையாத❣️கனவுகள்?
#2
Heart 
காதல்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தை கொடுக்கும்...
சில பேருக்கு காமத்தினால் உண்டான காதலும் உண்டு, காமதுக்காகவே உண்டான காதலும் உண்டு. இன்னும் ஒரு சில பேருக்கு மட்டும் தான் கண்கள் பார்த்து அதன் பார்வையில் அர்த்தம் புரிந்து தோல் தசை போர்த்திய எலும்பு கூட்டிற்குள் இருக்கும் சிறிய இதயத்தை தட்டி எழுப்பி அதன் வேலையினை சரியாக செய்ய வைக்கும். காதல் செய்ய கண்கள் மட்டும் போதும் என்றோ படித்த கவிதைகளின் வரிகள் நினைவிற்கு வந்தது அவளின் கண்களினை முதன் முதலாக பார்த்த பொழுது....
நான் தேவா..
எனக்குள் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த என் இதயத்தை தன் பார்வையால் தட்டி எழுப்பி அதனுடைய வேலையினை செய்ய வைத்தவள்....
காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதினில் காதல் கொண்டேன் அவளுடைய பார்வை வீசிய அந்த நொடியில் கண்கள் மட்டும் பேசிய மொழியில் காதல் வந்ததால் கருமம் எனக்கே கவிதையா வருதே...
அவள் கண்கள் மட்டும் போதும் அவளுடைய மொத்த அழகையும் சொல்லிவிடும். அவளுக்காக நான் அவளுக்கு மட்டுமே நான்...
வாழ்க்கைல நாம நினைக்கிறது எல்லாமே அப்படியே நடந்துவிட்டால் கடவுளுக்கு என்ன மரியாதை. அவர் என்ன நமக்கான ஒன்று எழுதி வைத்திருப்பார். அது படி தானே எல்லாமே நடக்கும். இது தெரியாமல் நான் கண்களை கண்டதும் காதல் வந்து மயங்கி விழுந்தேன் அவள் பார்வையில்.... விழுந்தது என்னமோ அவள் பார்வையில் தான் ஆனால் எழுந்தது என்னுடைய வீட்டில்...

அபி: டேய் எரும மாடு எவ்ளோ நேரம் டா தூங்குற, ஆபிசுக்கு நேரம் ஆகுது சீக்கிரம் கிளம்புடா

அபி சத்தமாக கத்தும் சத்தம் மட்டும் கேட்டது. சென்னையில் ஒரு விளம்பர கம்பனி ஒன்றில் இயக்குநராக நான் வேலை பார்க்கிறேன். அபி என்னோட பெஸ்ட் தோழி ஒரு சகோதரி மாதிரி.
என்னோட வேலை பார்க்குற 3பேரு என்னோட சேர்ந்து 4பேரு தனியா வேளச்சேரியில் வாடகை வீட்டில் இருக்கிறோம். ஆபீஸ் நாவலூர் போகும் வழியில் ஒரு கட்டடத்தில் உள்ளது.  சரி அறிமுகம் எல்லாம் போக போக பார்த்துக்கொள்ளலாம்.

தேவா: அபி நான் கிளம்பிட்டேன். அவனுங்க எங்கே

அபி: அவனுங்க போயாச்சு. நீ வந்து வண்டி எடு டா நேரம் ஆகுது. மேனஜர் இன்னைக்கும் கத்த போறான்

தேவா: சரி சரி டென்ஷன் ஆகாத ஒரு 10மினிட் போயிடலாம்..

2பேரும் 10 நிமிடத்தில் வந்து சேர்ந்தோம். என்னுடைய பைக்கினை பார்க்கிங் ஏரியாவில் விட்டுவிட்டு லிஃப்ட் உள்ள போகும் போது தான் கண்டேன் அவளையும் அவளின் கண்களையும். அவளின் பார்வையினால் என் இதயத்தை திருடி சென்றவள் என்னவள் எனக்கானவள்...
கவியாழினி என் கண்கள் முன்னே.. என்னை பார்த்ததும் முகத்தினை திரும்பி நின்று கொண்டாள். அபி அதனை பார்த்து சிரித்து  "உனக்கு டெய்லி அசிங்க படலைனா தூக்கம் வராது போல" என்று நக்கலாக பதில் சொன்னால்.
நானும் அமைதியாக இருந்து விட்டேன். 
நமக்கு தோன்றியது போல அவளுக்கும் தோன்ற வேண்டும் அல்லவா.. அதற்க்காக அவளை மிரட்டவும் விரட்டவும் இல்லையே தினமும் அவளை இதுபோல பார்ப்பது மட்டும் தானே. அவளும் எங்களுடன் அதே நிறுவனத்தில் அக்கவுண்ட்டில் பணி புரிகிறாள். ஆபீஸில் அவளை மீறி ஒரு ரூபாய் கூட வெளியே செல்லாது. வேலையில் சரியாக நடந்து கொள்வாள் கூட வேலை செய்பவர்களிடம் எப்படி நடக்கமுமோ அப்படி நடந்து கொள்வாள். அளவுக்கு மீறிய பேச்சு அவளிடத்தில் இருந்தது இல்லை. தேவைக்கேற்ப மட்டும் பேசுவாள். அமைதியாக இருப்பாள், ஜாலியாக எல்லோரிடமும் பேசுவாள் சந்தோஷமாக இருப்பாள். ஆனால் என்னிடம் மட்டும் விலகியே இருப்பாள்.
எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்பாய் என் யாழினி.. நீ நான் என்று இல்லாமல் நாம் என்று எப்போ ஆக போகிறோம். சொல்லடி என் காதலியே....
[+] 5 users Like Thamizhan98's post
Like Reply


Messages In This Thread
RE: ?கலையாத❣️கனவுகள்? - by Thamizhan98 - 01-03-2024, 05:44 PM



Users browsing this thread: 1 Guest(s)