அபர்ணா அண்ணி
வீட்டில் பெரும் புயல் ஒன்றே அடித்து ஓய்ந்திருந்தது.. அப்பாவும் அம்மாவும் மிகவும் நொந்து போய் இருந்தனர்.. அண்ணாவுடன் அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அவனும் யாருடனும் பேசவில்லை.. பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்தாயிற்று.. அவனுக்கு இனிமேல் என்ன செய்யப் போகின்றோம் என்னும் குழப்பம்.. ஆனால் எனக்கோ.. இனிமேல் என்ன நடந்தால் என்ன.. எப்படியாவது அண்ணாவும் லீனாவும் சேர வேண்டும்.. குடும்பத்தின் வரட்டுக் கௌரவத்தினால் சேர முடியாமல் போன அவர்களது காதல் ஒன்று சேர வேண்டும்.. அபர்ணா எனக்குக் கிடைக்க வேண்டும்.. என்கின்ற மனநிலை.. இருந்தாலும் அவள் போன பின்னர் எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.. மனது வலித்தது.. அவளது அருகாமையை வேண்டி நின்றது.. கவலையுடனும் அன்றைய பொழுதினைக் கழித்தேன்.. அவளது ஒற்றை மெசேஜிற்காக மனது துடியாய் துடித்துக் காத்துக் கொண்டிருந்தது ..

இரவானது..
யாரும் சாப்பிடவில்லை.. யாருக்கும் சாப்பிடத் தோணவும் இல்லை.. அம்மாவும் அப்பாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.. நான் அண்ணனைக் கூட்டிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவனைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்.. அவனது இறுதி முடிவு என்ன என்பது பற்றி அவனது உள் மனதினை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்..

அப்பொழுது அப்பா என்னை கீழே நின்றபடி பதற்றமாக அழைத்தார்..

"அம்மாக்கு லேசா தல சுத்துற மாதிரி இருக்காம்.. மூச்சு விடவும் கஷ்டப்படுறா... நீ வண்டிய எடு.. டாக்டர் கிட்ட போகலாம்.."

உடனடியாக நான் வண்டியை எடுத்தேன்.. அப்பா கை தாங்கலாக அம்மாவை அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏற்றினார்.. ஏற்கனவே நொந்து போய் இருந்ததனால் அண்ணாவை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு நாங்கள் கிளம்பினோம்.. டாக்டரிடம் சென்று செக்கப் செய்து பார்த்த போது அம்மாவுக்கு பிளட் பிரசர் அதிகரித்து இருந்தது.. அதற்குரிய மருந்து மாத்திரைகளை கொடுத்து அம்மா சற்று நல்ல நிலைமைக்கு திரும்பிய பின்னர் தான் மனது நிம்மதியாக இருந்தது.. ஆனாலும் அவரது உடம்பு ரொம்பவே வீக்காக இருந்ததனால் டாக்டர் அவருக்கு சேலைன் ஏற்றினார்.. அது முடியும் வரை நானும் அப்பாவும் காத்திருந்தோம்.. அண்ணா மீண்டும் மீண்டும் போன் பண்ணிக்கொண்டே இருந்தான்..
"அம்மாக்கு ஒண்ணும் இல்ல.. சேலைன் போட்டிருக்காங்க.. கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்" ன்னு சொல்லி அவனை சமாளித்து விட்டு அப்பாவை நோக்கினேன்..

"அப்பா.."

"ஹ்ம்ம்.."

"இப்ப என்ன பண்றது...?"

"தெரியலப்பா.."

"அம்மாக்கு அண்ணிய ரொம்ப பிடிக்கும்.. இல்ல....?"

"ஹ்ம்ம்.."

"அண்ணிய திரும்ப போய் கூட்டிட்டு வந்துரலாம் பா..."

"அதெப்புடி முடியும்..? அவ பேமிலி தான் எல்லாமே தெளிவா சொல்லிட்டு போய்ட்டாங்களே..."

"இருந்தாலும் நாம ஒரு தடவ அங்க போயி அவங்க கூட பேசி பாத்தா என்ன...?"

"நாம பேசி என்ன யூஸ்...? எல்லாம் உங்க அண்ணன் கைல தான் இருக்கு.."

"அந்த பொண்ணு லீனா கூட பாவம் ல...? இவனால அவ லைஃப்பும் நாசம்.."

"அத தான் நானும் யோசிக்கிறேன்.. அந்த பொண்ணுக்கு இவன் என்ன பதில் சொல்லப் போறான்...? அபர்ணாக்கு என்ன பதில் சொல்லப் போறான்...? எதுவுமே புரியல.."

"ரெண்டு பேருக்குமே பதில் சொல்லணும்.. ஆனா.. இவனால கூடுதலா பாதிக்கப் பட்டது என்னமோ அந்த பொண்ணு லீனா தான் பா.. இவனால இப்ப அவ குடும்பத்தையும் இழந்து.. கட்டுன புருஷனையும் இழந்து தனியா இருக்கா.."

"அதானே.. அந்த பொண்ணு இவ்ளோ நாளைக்கு எந்த ஒரு தப்பான முடிவும் எடுக்காம இருக்குறது பெரிய விஷயம்.."

"இவன நம்பித்தான் அவ இப்ப இருக்கா.. என்ன கேட்டா.. இவன் அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறது தான் நல்லதுன்னு படுது..."

"அப்போ உங்க அண்ணியோட வாழ்க்க...?"

"அண்ணிக்கு வேற யாரையாவது பாத்து கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பா.. அவங்களுக்கு அவங்க பேமிலி இருக்காங்க.. லீனாக்கு யார் இருக்கா...?"
என்று பலவாறு பல கோணங்களில் பேசி அப்பாவுக்கு புரிய வைக்கவும் அவரின் மனதினை மாற்றவும் முயற்சி செய்தேன்..

"அவ அண்ணா காதலிச்ச பொண்ணுப்பா.. அவ கூட இருந்தா சந்தோசமா இருப்பான்.. இல்லன்னா மறுபடியும் அவ கூட பேச மாட்டான் னு என்ன நிச்சயம்...? மறுபடியும் பிரச்சன தான் வரும்.. அண்ணி கூட அவன புரிஞ்சிப்பாங்க.. ஆனா லீனா வாழ்க்கைய நினைச்சி பாருங்க.. அவ படுற கஷ்டங்களும் அவ குடும்ப சாபமும் இவன சும்மா விடுமா..?"

"உங்க அம்மா ஒரு நாளும் அத ஒத்துக்க மாட்டா..."

"அம்மாகிட்ட மெல்ல மெல்ல பேசி புரிய வைக்கலாம் பா.. நடந்தது நடந்திருச்சு.. ஏதாச்சும் ஒரு முடிவு எடுத்தே ஆகணும் ல.."

"ஹ்ம்ம்.. பாக்கலாம்.. ஆனாலும், நடந்த விஷயங்களுக்கெல்லாம் இந்த சொசைட்டிக்கும் நம்ம குடும்பங்களுக்கும் நா என்ன பதில் சொல்ல போறேன்னு தெரியலையே.."

"அவங்கள பத்தி யோசிக்காதீங்கப்பா.. அவங்க பத்தி யோசிச்சா நாம யாரும் நம்ம வாழ்க்கைய வாழ முடியாது.. நீங்க இந்த விஷயத்துல ஒழுங்கா யோசிச்சு சரியான ஒரு முடிவ எடுத்தா இந்த சொசைட்டியும் நம்ம குடும்பங்களும் உங்களுக்கு தலை வணங்கும்.."

அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.. தனது அரைவாசி நரைத்திருந்த தாடியினை சொறிந்து கொண்டு யோசனையில் மூழ்கினார்..

அம்மாவுக்கு சேலைன் ஏற்றி முடிந்ததும் மூவரும் வீடு வந்து சேர்ந்தோம்.. அண்ணா ஓடி வந்து அம்மாவை கட்டி அணைத்து அழ ஆரம்பித்தான்.. அம்மாவும் சேர்ந்து அழ ஆரம்பித்தார்..

"இங்க பாருண்ணா.. அழுதது போதும்.. நீயும் அழுது அம்மாவ இன்னும் கஷ்டப்படுத்தாத.."
என்றேன்..

"அம்மா.. நீங்க என்ன சொன்னாலும் நா அத பண்றேன்.. நா பண்ண தப்புக்கு என்ன மன்னிச்சிருங்க.. இனிமே நா எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. தயவு செஞ்சு இதையெல்லாம் பத்தி யோசிச்சு உங்க உடம்ப கெடுத்துக்காதீங்கம்மா.." கண்களை துடைத்துக் கொண்டு கூறினான் அண்ணா..

அம்மா எதுவும் கூறாமல் நீண்ட ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தார்..

சிறிது நேரத்தில் அப்பா சாப்பாட்டுத் தட்டுடன் அம்மா அருகில் வந்தார்.. இரவு எதுவும் சமைத்திருக்கவில்லை.. பகல் ஆக்கி மிஞ்சி இருந்த சோற்றையும் கறியையும் சூடாக்கி தட்டில் போட்டுக் கொண்டு வந்து பிசைந்து அம்மாவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார்..

முதலில் வேண்டாம் என்றாலும் அப்பாவின் செல்லமான அதட்டலில் அம்மா சாப்பிட ஆரம்பித்தார்..

சாப்பிட்டு முடித்ததும் அம்மா இயலாத நிலைமையிலும் எங்களுக்கு ஏதாவது சாப்பிடுவதற்கு சமைக்க ஆயத்தம் ஆக.. அம்மாவை வற்புறுத்தி ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு.. நான் வெளியே சென்று ஹோட்டலில் அப்பாவுக்கும் அண்ணாவுக்கும் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தேன்.. மூவரும் லேசாக சாப்பிட்டு விட்டு மெல்ல அவரவர் ரூம்களுக்குள் நுழைந்தோம்..

நேரம் 11 மணியினைத் தாண்டி விட்டது.. ஆனாலும், அபர்ணாவிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வந்திருக்கவில்லை.. ரொம்பவே கவலையாக இருந்தது.. வெளியே மழை லேசாக தூற ஆரம்பித்தது.. ஜன்னலினைத் திறந்து அந்த இரவு நேர மழையின் குளிர்ச்சியினை உள்வாங்கினேன்.. காதில் ஹெட்செட்டினை மாட்டினேன்.. பிளேலிஸ்டில் யுவனின் காதல் போதை மாத்திரைகளை ஏற்றி காதினால் பருக ஆரம்பித்தேன்..

மனது கனத்தது.. கண்ணீர் ததும்பியது.. அந்த இரவும், மழையும், அதன் குளிர்ச்சியும், போதை தரும் பாடல்களும் ஒரு நாள் மழை காலத்தில் எங்களுக்குள் நடந்த ஒரு கூடல் சம்பவத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தது..
[+] 7 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 29-02-2024, 09:49 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 23 Guest(s)