எனக்கு வாய்த்த தேவதைகள்
#3
எங்களது அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் அவள் மேல் ரொம்பவே வெறுப்பில் இருந்தனர். ஆனாலும், அவள் என்னிடம் மட்டும் ஓரளவு நல்ல முறையில் நடந்து கொள்ளுவாள். காரணம் அவளுக்கு தேவையான மற்றும் முக்கியமான பல வேலைகளையும் உதவிகளையும் நான் செய்து கொடுப்பேன். ஆனாலும், ஓரளவு தான் நல்ல முறையில் நடந்து கொள்ளுவாள்.

இது இப்படி இருக்க அந்த நேரத்தில் அரசாங்க அலுவலகங்களுக்கு என்று ஒரு புதிய கணினிமயப்படுத்தப்பட்ட ஒரு வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக அக்கௌன்டண்ட் மேடமும் யாராவது ஒரு கிளெர்க்கும் 5 நாட்கள் எங்களது தலைமைக் காரியாலயத்துக்கு ட்ரைனிங் செல்ல வேண்டி இருந்தது. எங்களது ஆபிசில் வேலை பார்ப்பவர்களில் 8 பேர் பெண்கள். திருமணம் ஆனவர்கள். அவர்கள் யாருமே அங்கு செல்வதற்க்கு முன் வரவில்லை. ஆண்களில் என்னைத் தவிர மற்றைய அனைவரும் திருமணம் ஆனவர்கள். வீட்டில் அந்த வேலை இருக்கு இந்த வேலை இருக்கு என்று நிறைய சாக்குப் போக்குகள் சொல்லி அவர்களும் யாருமே செல்வதற்க்கு முன் வரவில்லை. காரணம் அந்த ட்ரைனிங் சென்று வந்த பின்னர் அந்த வேலையையும் சேர்த்து தான் தான் பார்க்க வேண்டியது வரும் என்று எல்லோருமே பயந்தனர். இறுதியில் நான் தான் எதுவுமே சாக்குப் போக்கு சொல்ல முடியாமல் சிக்கினேன். வேறு வழியின்றி சரியென்று நான் அந்த ட்ரைனிங் செல்வதற்கு தயார் ஆனேன்.

அங்கு செல்வதற்கு அக்கௌன்டண்ட்களுக்கு என்று அரசாங்கத்தினால் அனுமதி வழங்கி இருந்த வாகன, சாரதி உதவிகளையும் வேண்டாம் என்று கூறி விட்டு அவள் அவளது காரிலேயே தனியாக போக தயாரானாள். என்னை பஸ்ஸிலோ ட்ரைனிலோ வருமாறு கூறினாள். என்னை தன்னுடன் காரில் வருமாறு அழைக்கவில்லை. அது எனக்கும் எங்கள் அலுவலக ஊழியர்கள் எல்லோருக்கும் அவள் மேல் மேலும் வெறுப்பினை உண்டு பண்ணியது. தனியாக செல்லும் அவள் என்னையும் கூட்டிச் சென்றாள் என்ன குறைந்து விடப் போகிறது என்று குறை பட்டுக் கொண்டனர்.

அங்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து எனக்கு கார் ஓட்ட தெரியுமா என்று கேட்டாள். நானும் ஆம் என்றேன். கொஞ்ச நேரம் யோசித்து விட்டு எனது டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் கேட்டு வாங்கி உறுதிப் படுத்திக் கொண்டு என்னையும் அவளுடன் காரில் வருமாறு கூறினாள். நானும் சரியென்று தலையாட்டினேன்.

காலை 9 மணிக்கு ட்ரைனிங் ஆரம்பிக்க இருப்பதனால் குறைந்தது அதிகாலை நான்கு மணிக்காவது இங்கிருந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் முதல் நாளே சென்று அங்கு தங்க வேண்டும். அவளும் நாளைக்கே நாம் அங்கு சென்று விடலாம் என்று கூறினாள். நான் அதற்கும் சரியென்று கூறி விட்டு வீடு வந்தேன்.
[+] 1 user Likes XmanX's post
Like Reply


Messages In This Thread
RE: கண்ணனும் கனவுக் கன்னிகளும் - by XmanX - 28-02-2024, 10:02 PM



Users browsing this thread: 2 Guest(s)