புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை
#1
வணக்கம் என் பெயர் வருண், எழுத்து உலகில் 'life is beautiful - varun' எனும் புனை பெயரில் நான் கதைகளை எழுதுபவன் .  



நான் பாலுணர்வு கதைகள் எழுதும் எழுத்தாளன். கொஞ்சம் இருங்கள் உங்கள் சலிப்பு புரிகிறது, ஓ அட போங்கடா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நீங்கள் நினைப்பது சரி தான், காம கதைகள் என்றாலே மொத்தமாய் அருவருப்பு மட்டும் வரும் வண்ணம் நிறைய கதைகள் உள்ளதால், மனதை தொடும், தென்றலாய் வருடும் கதைகள் நடைமுறையில் இல்லாததால் அதன் மேல் வெறுப்பு வருவது மிகவும் இயல்பானதே.


என் கதையில் முன்னுரையாய் பாலுணர்வு கதை பற்றிய என் கருத்து ஒன்றை எப்பொழுதும் எழுதுவேன், அதை இங்கே குறிப்பிடுகிறேன், அதை வைத்து என் பார்வை, மற்றும் என் ரசனை உங்களுக்கு புரிய வரும்.


அத்தகைய முன்னுரை இதோ 


 இந்த கதையை இந்த நிமிடம் நீங்கள் படித்து கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி. இந்த கால கட்டத்தில் திகட்ட திகட்ட காம காட்சிகள் வீடியோக்களாக பார்ன் சைட்களில் கிடைக்கும் போது நாம் ஏன் மாய்ந்து மாய்ந்து காம கதைகளை / பாலுணர்வு கதைகளை தேடி படிக்கிறோம்...? ஆம் வீடியோ தராத உணர்வை அழகான ஒரு கதை தரும். 


கதை என்பது ஒரு மிக சிறந்த களம், அதை முறையாய் பயன் படுத்தி, அழகான கதைக்களம், அருமையான கதா பாத்திரங்கள், இனிமையான உரையாடல்கள், உணர்வை கிள்ளும் சூழ்நிலை இவை அனைத்தும் கலந்த அருமையான கதை இருந்தால், அத்தைகைய கதையை படித்தால் அந்த கதையிலிருந்து வெளிவர சில நாட்களாவது ஆகும்.


அதனால் தான் பால குமாரன், பட்டுகோட்டை பிரபாகர், சுஜாதா போன்ற பல எழுத்தாளர்கள் சிலாகிக்க படுகிறார்கள். ஆனால் காம கதை என்று வரும்போது, அந்த மாதிரி உணர்வு பூர்வமாக எழுத தொழில் பூர்வமான (professional) எழுத்தாளர்கள் யாரும் முன்வரவுதில்லை. துரதிஷ்ட வசமாக மிக நேர்த்தியாக எழுதப்பட்ட பாலுணர்வு கதைகள் என்பது மிகவும் அபூர்வம்.


பெரும்பாலான காம கதைகள் ஒரு பக்கத்தில் ஆணையும் பெண்ணையும் வர்ணித்துவிட்டு அடுத்த பக்கத்தில் அவர்கள் கட்டிலில் என்ன செய்தார்கள் என்பதை பல பக்கத்திற்கு வக்கிரமாய் , விரசமான, மனதிற்கு ஒட்டாத வார்த்தைகளை வைத்து பக்கம் பக்கமாய் எழுதி தள்ளுவார்கள். இத்தகைய வறண்டு போன வரிகளை விட வீடியோக்களே மேல்.


அழகான பாலுணர்வை தூண்டும் கதைக்களம், கதை சூழ்நிலை, மனதை தொடும் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதா பாத்திரங்கள், அதிலும் குறிப்பாக, பெண்கள் பாத்திரங்கள், மற்றும் கதா பாத்திரங்களுக்கும் நடக்கும் உணர்வுபூர்மான உரையாடல்கள், கதைக்குள் கண்ணீர் துளிகள், தயக்கங்கள், மன போராட்டங்கள், தயக்கம், தாபம், சபலம், கோபம், கொஞ்சம் சதை, நிறைய கதை எல்லாம் கலந்து, அடுத்து என்ன என்ன என்று நகம் கடித்து படிக்க தூண்டும்படியான கதைகள் மிகவும் சொற்பம்


ஒரு பாலுணர்வு கதை ஒவ்வொரு பக்கம் முடிக்கும் போதும், நம் நாக்கில் ஒரு துளி தேனை வைத்தது போல் ஒரு தித்திப்பை, சிலிர்ப்பை, உடல் சூட்டை மென்மையாக ஏற்றவேண்டும். ஆர்வமாய் அடுத்த பக்கத்தை தேட வைக்க வேண்டும்.   


அழகான பாலுணர்வு கதைக்கான என் அளவுகோல், ஒரு பெண்ணால் அருவருப்பில்லாம, ஒரு புண் சிரிப்புடன் ஈடுபாட்டோடு ஒரு கதையை முழுதாக படிக்க முடிந்து, அதன் முடிவில் அவளுக்கு காம தாகம் ஏற்பட்டால் அது ஒரு சிறந்த கதை.


இந்த மாதிரி கதைகளுக்கு பெரிய வெற்றிடம் உண்டு. கதைகளில் மட்டும் அல்ல, காட்சிகளாக விரியும் B grade மற்றும் Adults only எனப்படும் Genre திரைப்படங்களில் கூட ஒரு பெரிய வெற்றிடம் உண்டு. 


தற்போது, அத்தகைய B Grade மற்றும் Adults only படங்களில், இரட்டை அர்த்த வசனம் மற்றும் நேரடியாக சதை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கக்கப்படுகிறது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற விஷயங்கள் இருப்பதில்லை, எத்தனை பெண்களை கவர்ச்சியாய் இந்த படத்தில் காட்டுகிறோம், எத்தனை spicy சீன் இருக்கு எனும் அளவில் தான் படங்களின் தரம் உள்ளது.


ஒரு எழுத்தாளனாக, மற்றும் ஒரு பாலுணர்வு ரசிகனாக, நான் மேல் குறிப்பிட்ட விஷயங்களுடன் கதைகளும், மிக முக்கியமாக திரைப்படங்களோ அல்லது வெப் சீரீஸ் வரவேண்டும் என்பது என் மிகப்பெரிய விருப்பம். ஒரு எழுத்தாளனாய் என் கதை படைப்புகளை, மற்றும் creative ஒத்துழைப்பை நான் தர தயாராக இருக்கிறேன். நான் உருவாக்கிய அந்த அழகிய கதா பாத்திரங்கள் காட்சி வடிவில் பார்க்க துடிக்கிறேன்.


அதற்காக தான் இந்த கடிதம். நீங்கள் ஒரு டைரக்டரோ அல்லது producer ஓ , அல்லது வளர்ந்து வரும் இளம் creator ஓ , யாராக இருந்தாலும் எனது வேண்டுகோள் இது.


“சரிப்பா நீ உன் டைரக்டருக்கு சொல்ல போற கதையை நான் ஏன்பா காசு கொடுத்து வாங்கி கொடுக்கணும்”   அப்படின்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. 


 யோசிச்சு பாருங்க ஒரு டைரக்டர் திருப்திபடுத்தும் அளவுக்கு அழுத்தமான கதையை நான் சொல்றேன் என்றால் அந்த கதை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.  நீங்க ரசிக்கும்படியான எல்லா விஷயங்களையும் இந்த கதைக்கு உள்ள அடக்கி இருக்கேன் அதனால கண்டிப்பா நீங்க வாங்கி படிக்கிறதுக்கு எந்தவிதமான தயக்கமும் தேவையில்லை. 


சரி பா, உன் படைப்பு என்ன? உன் கதை என்ன அதை காட்டு என்பது கேட்கிறது, கண்டிப்பாக காட்டுகிறேன், அதற்க்கு முன்பாக, அப்படி நாம் எடுக்க வேண்டிய படம் எப்படி இருக்க வேண்டும், மற்றும் அப்படி எடுத்தால் என்ன மாதிரி வரவேற்பு கிடைக்கும் என்பதை எனக்கு தெரிந்த முறையில் ஒரு கதையாகவே சொல்லுகிறேன், அந்த கதையினூடே உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவரும், அது நான் எழுதிய கதைகள் உட்பட .


இந்த கதையில் வரும் டைரக்டர் கதா பாத்திரம் நீங்கள் என்று நினைத்து கொண்டு, இந்த கதையை படியுங்கள். முக்கிய குறிப்பு, இது முழுக்க முழுக்க கற்பனை கதை, அணைத்து கதா பாத்திரங்களும் கற்பனையே.


சதுரங்க வேட்டை படத்தில் எனக்கு பிடித்த ஒரு வசனம் அதை சற்றே மாற்றி 


"உனக்கு அடுத்தவன் கிட்ட இருந்து ஒரு பலன் கிடைக்கணும் நா, அவன் கிட்ட இருந்து பரிதாபத்தை எதிர்பார்க்க கூடாது, அவன் ஆசைய தூண்டனும்"


அந்த மந்திரத்தை பின்பற்றி, இந்த கதையை சொல்கிறேன், நான் எழுதிய கதை திரைப்படமாக வேண்டும் என்ற என் ஆசையை இந்த கதை உங்களுக்கு (டைரக்டர் / producer ) தூண்டுகிறதா பாப்போம்.  


வாங்க கதைக்குள்ள போகலாம்.
என் கதை:
  இது தப்பா ?
  என்னை ஞாபகம் இருக்கா?

 [url=https://xossipy.com/thread-42454.html][/url]
[+] 1 user Likes lifeisbeautiful.varun's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
புதிய - கொஞ்சம் சதை மிச்சம் கதை - by lifeisbeautiful.varun - 27-02-2024, 12:21 AM



Users browsing this thread: 1 Guest(s)