18-06-2019, 10:21 AM
பாவம்.. இவளுடைய குடும்பத்தினர் இவளை புரிந்து கொள்ள தவறிவிட்டனர் போலும்.. அன்பை வெளிக்காட்டுகிற கலையை அவர்கள் அறியவில்லை போலும்.. எப்படி ஏங்கிப்போய் கிடக்கிறாள்..?? இவளுடைய முரட்டுத் தனத்துக்கெல்லாம் அதுதான் காரணமா..?? அன்பு கிடைக்காத ஏக்கம் எல்லாம் ஆத்திரமாய் வெளிப்படுகிறதோ..?? கலங்காதே கண்மணியே.. நானிருக்கிறேன் உனக்காக.. உன்னை நேசிக்க.. உன் குணங்களை பூஜிக்க..!! எனக்கென உன் சுயத்தை நீ இழக்க வேண்டாம்.. திட்டுவாய்.. வாங்கிக் கொள்கிறேன்.. அடிப்பாய்.. தாங்கிக் கொள்கிறேன்..!! உன் கோபம் பொறுக்கிறேன்.. உன் ஆத்திரத்தை அலட்சியம் செய்கிறேன்.. எனது அன்பை உனக்கு உணர்த்துகிறேன்.. என் அம்மா சொன்னது போல..!!'
"ஸார்.. தண்ணி..!!"
இயல்பாக சொல்லிக்கொண்டே அறைக்குள் நுழைந்த ரூம் சர்வீஸ் பையன், அசோக்கும் மீராவும் இருந்த கோலத்தை கண்டு, அப்படியே மிரண்டு போனான். அவனையும் அறியாமல் அவனுடைய வாய் 'ஓ'வென பிளந்து கொண்டது. அசோக்கிடமும் உடனடியாய் ஒரு பதற்றம். எந்தக் கவலையும் இல்லாமல் அவனை இறுக்கிக் கொண்டு கிடந்த மீராவின் பிடியில் இருந்து, அவசரமாய் விலகிக் கொள்ள முயன்றான்.
"ஹேய்.. மீரா.."
"ம்ஹூம்..!!" அவள் அவனை இன்னும் அதிகமாகவே இறுக்கினாள்.
"ப்ச்.. விடு..!!"
"ம்ஹூம்..!!"
"ப்ளீஸ் மீரா.. விடுன்றேல..??"
மீராவை வலுக்கட்டாயமாக உதறிக்கொண்டு அசோக் எழுந்தான். நடந்து சென்று பையனின் கையிலிருந்த தண்ணீர் ஜாடியை வாங்கிக் கொண்டான்.
"வே..வேற ஏதாவது..??" கேட்கும்போதே அவனின் பார்வை கட்டில் மீதிருந்த மீராவிடம் போய் வந்தது. அதை கவனித்து எரிச்சலான அசோக்,
"ப்ச்.. ஒன்னும் வேணாம்.. கதவை லாக் பண்ணிட்டு கெளம்பு.. காலைல வரை இந்தப் பக்கமே வராத..!!" என்றான் கடுப்பாக.
"ம்ம்.. புரியுது ஸார்.. வர்றேன்..!!" அவன் ஒரு நமுட்டு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர முயல,
"ஹேய்.." அசோக் அவனை நிறுத்தினான்.
"என்ன ஸார்..??"
"நீ.. நீ நெனைக்கிற மாதிரிலாம் இங்க ஒன்னும் இல்ல.. பு..புரியுதா..??"
"ஹிஹி.. சரி ஸார்.. புரியுது.. ஹிஹி..!!"
அவன் நக்கலாக சிரித்துவிட்டு கிளம்பியதிலேயே, நம்பவில்லை என்பது அசோக்கிற்கு புரிந்து போனது. 'ப்ச்..' என்று சலிப்பானவன் தலையை சொறிந்து கொண்டான். கதவு சரியாக லாக் ஆகியிருக்கிறதா என, ஒருமுறை சென்று உறுதி செய்து கொண்டான். கையிலிருந்த ஜாடியை கொண்டு போய் டேபிளில் வைத்தான். வைத்துவிட்டு திரும்பியவன், சற்றே ஷாக் ஆனான். மீரா அவனுக்கு வெகு நெருக்கமாக நின்று கொண்டிருந்தாள். அவளுடைய உடல் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்க, முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை..!!
"எ..என்ன மீரா..??"
"வா.." முடிக்கும் முன்பே 'உப்ஹ்' என்று அவளுக்கு எதுக்களிப்பு ஏற்பட, முகத்தை சுருக்கி கண்களை மூடிக் கொண்டாள்.
"வாட்டர் வேணுமா..??"
மீரா இப்போது பேசவில்லை. 'ம்ஹூம்' என்பது போல தலையை அசைத்தவள், முகத்துக்கு முன் கையை வைத்து சுழற்றி சைகையால் ஏதோ சொல்ல முயன்றாள். அசோக்குக்கு புரியவில்லை.
"பு.புரியல மீரா.. என்னன்னு வாயை தெறந்து சொன்னாத்தான புரியும்..??"
"வா..வாமிட்.."
சொல்லி முடிக்கும் முன்பே.. மீராவின் நெஞ்சுக்குள் இருந்து ஒரு உந்துதல்..!! மார்பின் மீது கைவைத்து பிடித்துக் கொண்டவள்.. 'ஓவ்..!!' என்று.. வாய் திறந்து வாந்தியே எடுத்துவிட்டாள்.. அப்படியே தன் முன் நின்ற அசோக்கின் மீது..!! அவன் வலுக்கட்டாயமாக அவளுடைய வாய்க்குள் திணித்த உணவெல்லாம்.. ஆல்கஹாலுடன் சேர்ந்து வாந்தியாக வெளிப்பட்டிருந்தது.. அசோக்கின் முகம்.. அவனுடைய டி-ஷர்ட்.. பேன்ட்.. எல்லாம்..!! செய்வதறியாது திகைத்த அசோக்.. முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு.. பரிதாபமாக நின்றிருந்தான்..!!
"ஸாரி அசோக்.. ஸாரி..!!"
குற்ற உணர்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீராவுக்கு மீண்டும் குடலை புரட்ட.. வாயை மூடிக்கொண்டு 'உப்ஹ்' என்று மீண்டும் ஒரு குமட்டல்..!! அவள் திரும்பவும் வாந்தி எடுக்கப் போகிறாள் என்பதை.. இந்தமுறை அசோக் முன்கூட்டியே புரிந்து கொண்டான்..!! ஆனால்.. நின்ற இடத்தை விட்டு அவன் அசையவில்லை.. கண்களை மட்டும் இறுக்கி மூடிக் கொண்டான்..!!
"ஓவ்வ்..!!!!" மீரா மறுபடியும் அவன் மீது வாமிட் செய்தாள்.
அடுத்த நாள் காலை..
மீராவுக்குத்தான் முதலில் விழிப்பு வந்தது. விழிகளை திறப்பதற்கு முன்பே 'வின்வின்'என்று தலை வலிப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. தலையை பிடித்துக்கொண்டு, கண்களை சுருக்கிப் பார்த்தாள். இடம் புதிதாக இருப்பதை அறிந்து ஒருகணம் துணுக்குற்றாள். இரவு மூன்று ரிப்பீட் வரை அவளுக்கு ஞாபகம் இருந்தது. மற்றவை எல்லாம் நினைவடுக்குகளில் சரியாக பதிந்திருக்கவில்லை.
'என்ன ஆயிற்று அதன் பிறகு..?? எப்படி இங்கே வந்தேன்..??'
மீரா குழப்பத்துடனே தலையை திருப்ப, கீழே தரையில் படுத்திருந்த அசோக் பார்வையில் பட்டான். இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான். மேலே போற்றியிருந்த போர்வை விலகியிருந்தது. இடுப்பில் ஒரு ஜட்டியை தவிர, வேறெதுவும் அவன் அணிந்திருக்கவில்லை. குளிரை தாங்க முடியவில்லை போலிருக்கிறது. கால்கள் இரண்டையும் மடக்கி வைத்து, கைகள் ரெண்டையும் ஒன்றாக்கி தொடைகளுக்குள் செருகி, குழந்தை போல படுத்திருந்தான்.
வெறும் ஜட்டியுடன் அவன் படுத்திருந்த கோலம்.. மீராவின் மூளையை சுரீர் என்று தாக்கியது.. சுருசுருவென ஒரு ஆத்திரம் அவளுக்குள்.. என்ன நடந்தது என்று நினைவில் இல்லாத குழப்பம்.. ஏதாவது நடந்திருக்குமோ என்று ஒரு பயம்.. தனது மயக்க நிலையை உபயோகப்படுத்தியிருப்பானோ என்று ஒரு சந்தேகம்.. எல்லாம் ஒன்று சேர்ந்து அவளை சூடாக்கி விட.. படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தாள்..!! கோல்கீப்பர் ஃபுட்பாலை ஓடிவந்து உதைப்பது போல.. அசோக்கின் புட்டத்திலேயே ஓங்கி ஒரு உதை விட்டாள்..!!
"எந்திரிடா..!!!"
"ஆஆஆஆ..!!"
அசோக் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். எழுந்ததுமே.. தன் எதிரில் மீரா நிற்பதையும்.. தன் உடலில் ஜட்டி தவிர வேறு ஆடை இல்லை என்பதையும்.. உடனடியாய் உணர்ந்து கொண்டான்..!! வெட்கத்தில் கூசிப்போய்.. தரையில் கிடந்த போர்வையை வாரி சுருட்டி எடுத்தான்.. தன் உடம்பில் அவசரமாய் சுற்றிக் கொண்டான்..!! மீராவின் பார்வைக்கு பயந்து.. சற்றே நகர்ந்து.. சுவரோரமாய் சென்று பம்மினான்..!!
"என்னடா பண்ணின என்னை..??" மீரா சீற்றமாக கேட்டாள்.
"என்ன பண்ணேன்னா..??"
"நைட் என்ன பண்ணின என்னை..??"
"நைட்டா..?? ஒ..ஒன்னும் பண்ணலையே..??"
"ஏய்..!! பொய் சொன்ன.. அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுருவேன்..!! உண்மையை சொல்லு..!!"
"ஐயோ.. சத்தியமா மீரா.. ஒன்னும் பண்ணல..!! நைட்டு உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு.. உன்னால நடக்க கூட முடியல.. அதான் இங்கயே ரூம் எடுத்து.. உன்னை அந்த கட்டில்ல படுக்க வச்சுட்டு.. நான் தரைல படுத்துக்கிட்டேன்.. அவ்வளவுதான்.. வேற எதுவும் பண்ணல..!!"
"அப்புறம் ஏன் ட்ரஸ் இல்லாம கெடக்குற..??"
"நான்தான ட்ரஸ் இல்லாம கெடக்குறேன்.. நீ ட்ரஸ் இல்லாம கெடந்தாத்தான் தப்பு..!!"
"ப்ச்.. கேட்டதுக்கு பதில் சொல்லு.. எங்க உன் ட்ரஸ்லாம்..??"
"அதோ.. அங்க.." சேரில் காய்ந்து கொண்டு கிடந்த உடைகளை நோக்கி, அசோக் கை நீட்டினான். மீராவும் திரும்பி பார்த்தாள்.
"அதை எதுக்கு அங்க அவுத்து போட்ருக்குற..??" மீரா இன்னுமே கோவம் குறையாமல் கேட்க,
"ம்ம்.. வேண்டுதலு..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.
"இப்போ அறை வாங்க போற நீ..!!"
"ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!"
"ஓ..!! வாமிட் பண்ணிட்டனா..??"
"ஆமாம்..!! அதோ.. அங்க பூரா..!! யப்பா.. எல்லாம் க்ளீன் பண்ணிட்டு படுக்குறதுக்குள்ள.. என்னால முடியல..!! பாத்ரூம்குள்ள போய் பாரு.. உனக்கே புரியும்.. உன் நர்ர்ர்றுமணம்..!!" அசோக் அந்த மாதிரி படபடப்பாக சொன்னதும்தான், மீராவின் கோபம் சற்று தணிந்தது.
"அ..அவ்வளவுதான..?? வேற எதுவும் பண்ணலைல..??"
"வேற.. உனக்கு வாய், மூஞ்சிலாம் கழுவிவிட்டு.. பெட்ல படுக்க வச்சேன்..!!"
"ப்ச்.. அதை கேக்கல..!!"
"அப்புறம்..??"
"வேற எதுவும்..??"
"வேற எதுவும்னா..??"
"ஹையோ..!! என்னை டச் பண்ணுனியான்னு கேட்டேன்..!!"
"டச்னா..?? ம்ம்ம்.. அ..அது.. ஒ..ஒரே ஒரு தடவை.."
"ஒரே ஒரு தடவை..??"
"உ..உன்னை ஹக் பண்ணினேன்..!!" அசோக் தயங்கியவாறே சொல்ல, மீரா உடனடியாய் உக்கிரமானாள்.
"என்னது..?? எவ்ளோ தைரியம் உனக்கு..??" என்று அசோக்கின் தலைமுடியை பிடித்து ஆய்ந்தாள்.
"ஆஆஆ..!!! ஐயோ.. ஹக்தான் மீரா.. ஹக்கு..!!"
"அதான்.. ஏன் பண்ணின..??"
"நீதான் பண்ண சொன்ன.. கெஞ்சின..!!"
"பொய் சொல்லாத...!!!"
"சத்தியமா.. ஆஆஆ..!!! சத்தியமா மீரா.. நம்பு.. ப்ளீஸ்..!!" அசோக் கதற, மீராவுக்கு இப்போது சற்று நம்பிக்கை வந்தது. அவனுடைய தலை முடியை விடுவித்தாள்.
"ஒழுங்கா உண்மையை சொல்லு.. நானா ஹக் பண்ண சொன்னேன்..??"
"நீதான் மீரா.. கையை நீட்டிக்கிட்டு ஏக்கமா சொன்ன..!!"
"ஓ.. வேற என்னலாம் சொன்னேன்..??"
"என்னன்னவோ சொன்ன.. அசோக் குட் பாய், மீரா பேட் கேர்ள்.. என் மேல அன்பு காட்ட யாருமே இல்ல அசோக்.. எப்போவும் என் கூடவே இரு அசோக்.. அப்டி இப்டின்னு..!! நைட் உன்னை பாக்கவே ரொம்ப பாவமா இருந்தது மீரா..!!"
அசோக் சொல்ல சொல்ல, மீராவுக்கு இரவு நடந்ததெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுக்கு வந்தது. நினைவு வர வர.. 'ப்ச்' என்றவாறு தலையை பிடித்துக் கொண்டாள்.
"ஓ.. காட்..!!!"
என்று சலிப்பாக சொன்னாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். 'ஓ மை காட்.. ஓ மை காட்..' என்று ஆதங்கமாக முனுமுனுத்தவாறே சென்று, தனது பேகை திறந்தாள். ஏதோ இரண்டு மாத்திரை பட்டைகளில் இருந்து, இரண்டு மாத்திரைகளை கிழித்து எடுத்தாள். வாய்க்குள் போட்டுக்கொண்டு, ஜாடி எடுத்து தண்ணீரை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள்.
"எ..எதுக்கு இப்போ டேப்லட்...??" அசோக் குழப்பமாக கேட்க,
"ம்ம்..?? எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கனுமா..??"
மீரா எரிந்து விழுந்தாள். கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியுமாய், சலிப்புடன் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஏதோ நினைத்தவளாய், அசோக்கிடம் சாந்தமான குரலில் சொன்னாள்.
"இங்க பாரு அசோக்.. அதுலாம்.. நேத்து ஏதோ போதைல சும்மா உளர்னது.. எதையும் சீரியஸா எடுத்துக்காத.. ஓகே..??" மீரா அவ்வாறு சொன்னதும், அசோக்கின் முகம் பொசுக்கென வாடிப் போனது.
"என்னது..?? உளர்னியா..??"
"ஆமாம்..!!"
"இ..இல்ல.. நம்ப மாட்டேன்.. நீ ஏதோ மறைக்கிற..!! நேத்து நீ கட்டிப் புடிச்சுக்கோன்னு சொன்னப்போ.. அப்படியே.."
"ப்ச்.. அதான் சும்மா உளர்னதுன்னு சொல்றேன்ல..?? தேவை இல்லாம அதையே நெனைச்சுட்டு இருக்காத..!! புரியுதா..??"
மீரா சீற்றமாக சொல்ல, அசோக் கடுப்பாகிப் போனான். அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தலையை குனிந்து கொண்டு, அவளுக்கு கேட்காமல் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.
'ம்க்கும்.. அதை நெனைக்காம வேற எதை நெனைக்கிறதாம்.. அம்பது நாள் லவ்ல நேத்துதான் ஒரு குட்டி ரொமான்ஸ்.. அதையும் நெனைக்காம.. இந்த சிடுமூஞ்சியை மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்கனுமாக்கும்..?? போதை தெளிஞ்ச உடனேயே மரம் ஏறிடுச்சு.. போக்கிரி வேதாளம்..!! கல்யாணத்துக்கு அப்புறம்லாம் குவார்ட்டரை ஊத்திவிட்டாத்தான் மேட்டரே போல..?? எல்லாம் என் தலையெழுத்து..!!'
"எய்.. என்ன மொனங்குற..??" மீரா முறைப்பாக கேட்க,
"ஒன்னுல்ல..!!" அசோக் சலிப்பாக சொன்னான்.
"சரி.. எனக்கு ஒரே தலை வலியா இருக்கு.. கீழ போய் ஒரு டீ வாங்கிட்டு வா..!!"
"ம்க்கும்.. ஆர்டர் போடுறதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல..!!"
"என்ன ஆச்சு இப்போ உனக்கு..?? சும்மா சும்மா மொனங்குற.. மொறைக்கிற..??"
"ஒன்னும் ஆகல..!! டீ வேணும்னா.. நீயே ரிஷப்ஷனுக்கு கால் பண்ணி சொல்லு.. கொண்டு வருவாங்க..!!"
"ஓ..!! சரி.. உனக்கு டீ வேணுமா..??"
"ஆமாம்..!!! ஸ்ட்ராங்கா..!!!!!"
அசோக் வெறுப்பாக சொன்னான். மீரா டெலிபோனை அணுகி ரிஷப்ஷனுக்கு கால் செய்தாள். இரண்டு டீ கொண்டு வருமாறு சொன்னாள். சாவி பார்த்து அறை எண் குறிப்பிட்டாள். பிறகு ரிசீவரை வைத்து விட்டு அசோக்கிடம் திரும்பினாள்.
"சொல்லிருக்கேன்.. அஞ்சு நிமிஷத்துல கொண்டு வருவாங்க..!!"
"சரி.. என் ட்ரஸ்லாம் இந்தப்பக்கம் தூக்கி போடு.. அந்தப் பையன் வந்துடப் போறான்..!!"
"எந்தப் பையன்..??"
"ரூம் சர்வீஸ் பையன்.. ஏற்கனவே அவனுக்கு ஒரு சந்தேகம்..!!"
"என்ன சந்தேகம்..??"
"நாம வேற எதுக்கோ ரூம் போட்டு தங்கிருக்கோமோனு..!!"
"ஓ..!! அவனுக்கு சந்தேகம் வர்ற மாதிரி நீ என்ன பண்ணின..??" மீரா கூலாக கேட்க, அசோக் நிஜமாகவே டென்ஷன் ஆகிப் போனான்.
"நான் என்ன பண்ணினேன்..?? எல்ல்ல்லாம் நீதான் பண்ணின..!! ச்சை.. என் ட்ரஸ் எடுத்து போடு..!! நான் வேற.. தமிழ் சினிமால ரேப் பண்ண தங்கச்சி கேரக்டர் மாதிரி உக்காந்திருக்கேன்.. இந்த நெலமைல என்னை பாத்தான்னா அவ்வளவுதான்.. கன்ஃபார்மே பண்ணிருவான்..!!"
"ஹாஹாஹாஹா..!!!"
மீராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேரில் காய்ந்த அசோக்கின் உடைகளை எடுத்து, அவனிடம் வீசினாள். மீரா எதுவும் தன் வெற்றுடலை பார்த்துவிடப் போகிறாளோ என்ற வெட்கத்துடன்.. பயந்து பயந்து.. மூடிய போர்வைக்குள்ளேயே ஆடை அணிந்து கொண்டான் அசோக்..!! அவனுடைய செய்கைகளை ஓரக்கண்ணால் பார்த்த மீரா.. தன் மனதுக்குள்ளேயே ரகசியமாக சிரித்துக் கொண்டாள்..!!
சிறிது நேரத்தில் அந்தப் பையன், ஒரு ப்ளாஸ்டிக் ப்ளேட்டில் இரண்டு டீ கப்புகளுடன் வந்தான். மீராவும் அசோக்கும் ஆளுக்கொரு கப் எடுத்துக் கொண்டார்கள். அவனுடைய முகத்தை ஏறிட கூட விருப்பம் இன்றி அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக் கொண்டான். மீராதான் 'இவன்தான் அவனா..?' என்பது போல அந்தப் பையனை ஏற இறங்க பார்த்தாள். இவள் பார்த்ததும் அந்தப் பையன் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தான். மீரா உடனே கடுப்பானாள்.
"ஏய்.. என்ன சிரிப்பு..??" என எரிச்சலாக கேட்டாள்.
"ஒ..ஒன்னுல்ல மேடம்..!!"
"என்ன ஒன்னுல்ல..?? இங்க பாரு.. நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல..!! அவன் கீழ படுத்துக்கிட்டான்.. நான் மேல..!! புரியுதா..??"
"ஹிஹி.. ஹிஹி.. ம்ம்.. புரியுது..!!"
அவன் அதற்கும் ஒரு இளிப்பை வெளிப்படுத்திவிட்டு வெளியேறினான். எதற்காக அவன் சிரிக்கிறான் என்று குழம்பிய மீரா, அவன் போகும் வரை அவனது முதுகையே எரிச்சலாக பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அசோக்கிடம் திரும்பி,
"இந்தப் பையன் என்ன லூஸா..?? சும்மா சும்மா சிரிக்கிறான்..??" என்று கேட்டாள்.
அசோக் ஏற்கனவே தலையில் கைவைத்தவாறு நொந்து போய் அமர்ந்திருந்தான். இப்போது மீராவிடம் சலிப்பாக சொன்னான்.
"ம்ம்.. ஏன் சிரிக்க மாட்டான்..?? நான்தான் தத்தின்னா.. நீ என்னை விட பெரிய தத்தியா இருக்குற மீரா..!!"
"எ..என்ன சொல்ற..??"
"நான் என்னத்த சொல்றது..?? நீ அவன்கிட்ட என்ன சொன்னன்னு.. கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு..!!"
அசோக் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, 'அப்படி என்ன நான் தப்பா சொன்னேன்..?' என்று, மீரா இப்போது தலையை சொறிய ஆரம்பித்தாள்.

first 5 lakhs viewed thread tamil