screw driver ஸ்டோரீஸ்
"ஏன் மீரா.. நெ..நெஜமாவே.. நீ முன்னப்பின்ன குடிச்சிருக்கியா.. இல்ல.."

"ஏன் கேக்குற..??"

"எ..எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு..!!"

"சந்தேகந்தான..?? தீத்துட்டா போச்சு..!! டோன்ட் வொர்ரி.. ஐ வில் கிளியர் ஆ....ல் யுவர் டவுட்ஸ்..!! நவ்.. ரைட் நவ்..!!"

மீராவுக்கு நன்றாக போதை ஏறிவிட்டது என்பதை அசோக்கால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. குழறுகிற வாயுடன், அவள் ஆங்கிலத்துக்கு தாவியதிலேயே அதனை அறிந்து கொள்ள முடிந்தது. மீராவும் அதை உறுதி செய்தாள். மூன்றாவது லார்ஜை பேரர் கொண்டு வர.. 'உன் டவுட்டை இப்போ கிளியர் பண்றேன் பார்..' என்றவள், மிக்ஸிங் கலக்காத விஸ்கியை எடுத்து, அப்படியே ராவாக வாய்க்குள் ஊற்றினாள்..!! அசோக் 'ஆ'வென்று வாயை பிளந்து பதறிப் போனான்..!!

"ஐயோ.. என்ன பண்ற நீ..?? அப்படியே ராவா.."

"ஏ..ஏன்.. குடிச்சா என்ன..??" அடர்த்தியான ஆல்கஹாலுக்கு முகத்தை சுளித்தவாறே மீரா கேட்டாள்.

"ஹாட்டா இருக்கும்..!!"

"ஹாஹா.. இந்த மிர்ச்சிக்கே ஹாட்டா..???"

என்று கெத்தாக கேட்டவள்.. தட்டில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த.. அந்த தடித்த முழுநீள பச்சை மிளகாயை எடுத்து.. அப்படியே கடித்து நறநறவென மெள்ள ஆரம்பித்தாள்..!! அசோக் டென்ஷனாகிப் போனான்.. 'யோசனை இல்லாமல் இவளை இங்கே அழைத்து வந்துவிட்டோமோ' என்று முதன்முறையாக அவனுக்கு ஒரு கிலி கிளம்பியது..!!

"ஹேய்.. உனக்கு என்ன லூஸா..?? விஸ்கியை ராவா குடிச்ச.. இப்போ பச்சை மிளகாயை அப்படியே.."

"ஹ்ஹ.. இதுலாம் என்னை ஒன்னும் செய்யாது மச்சி.. ஐம் மிர்ச்சி மச்சி.. மிர்ச்சி..!!"

"அறிவில்லாம பேசாத..!! இந்தா.. இந்த தண்ணியை கொஞ்சம் குடி.. வயிறை ஏதாவது பண்ண போகுது..!!"

"ம்ஹூம்.. எனக்கு இந்த தண்ணி வேணாம்..!! பேரர்.."

"அப்படியே அறைஞ்சிடுவேன் மீரா..!!"

"ஹ்ஹ.. நீ என்னை அறைய போறியா..?? அவ்ளோ தைரியமா உனக்கு..??"

"ஆமாம்.. இப்போ இதை குடிக்கல.. அதான் நடக்கப் போகுது..!! குடி.. குடின்றேன்ல..??" 

அசோக் மீராவின் வாயைப் பிடித்து வலுக்கட்டாயமாக அவளுக்கு குளிர்ந்த நீர் புகட்டினான். 

"கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு..?? இப்படிலாம் சாப்பிட்டா குடல் வெந்து போயிடும்..!!" 

அவளை திட்டிக்கொண்டே நீர் புகட்டினான். மீராவும் ஒரு க்ளாஸ் நிறைய இருந்த தண்ணீர் மொத்தத்தையும் மடக் மடக்கென குடித்துவிட்டாள். குடித்து முடித்ததும், 'ஏவ்..' என்று எதுக்களிப்பை வெளிப்படுத்தியவள், பிறகு உதடுகளை சப்பிக்கொண்டே.. 

"ச்சோ.. ச்ச்வீட்..!!" என்றாள் திடீரென.

அவள் எதை சொல்கிறாள் என்று ஒருகணம் குழம்பிய அசோக், ஒருவேளை தண்ணீரில் சக்கரை விழுந்துவிட்டதோ என காலி க்ளாஸை பார்க்க, மீரா இப்போது ஒரு கெக்கலிப்புடன் சொன்னாள்.

"ஹ்ஹ.. தண்ணிய சொல்லலடா லூசுப்பயலே.. உன்னைய சொன்னேன்..!!" 

சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன், 

"ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. 'ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்'ன்னு..!!" என்றான்.

"ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!" 

இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள். 

"யூ'ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ'ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. சம்திங்.. ஹெலோ ஹனிபனி.. ஹனிபனி.. டோகோ டோகோ..!!" 

இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமென.. மாறி மாறி வைத்துக்கொண்டு.. தனது பின்புறத்தை இப்படியும் அப்படியுமாய் அழகாக அசைத்து அசைத்து.. இமைகளை படக் படக்கென வெட்டியவாறே.. அசோக்கை பார்த்து பாடிக்கொண்டே அவள் ஆட.. இப்போது பாரில் இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்.. 'உய்ய்ய்..' என்று கத்தியவாறே உற்சாகமாக கைதட்டினார்கள்..!! அசோக்கிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது..!!

"ஹேய்.. என்ன பண்ற நீ..?? எல்லாரும் பாக்குறாங்க.. உக்காரு மீரா.. ப்ளீஸ்.. உக்காரு..!!"

அவளுடைய தோள்களை பற்றி அழுத்தி, அரும்பாடு பட்டு அவளை அமரவைக்க வேண்டியதிருந்தது அசோக்குக்கு..!!

[Image: RA+20.jpg]

அப்புறம் சிறிது நேரம் மீரா அடித்த கூத்துக்கும், செய்த ரகளைக்கும் அளவே இல்லை. அசோக்தான் நொந்து போனான். அவளை கண்ட்ரோல் செய்வதே கடினமான காரியமாக இருந்தது. ஏற்றிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கிப்போனது. நான்காவது லார்ஜ் கொண்டு வந்து ஊற்றிய பேரர்,

"என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்ற மாமூலான டயலாக்கை உதிர்க்க, மீரா 

"ரிப்பீட்..!!" என்றாள். இன்னொரு லார்ஜ் கேட்கிறாளோ என்று அந்த ஆள் குழம்ப,

"இல்ல.. இப்போ நீங்க 'என்ஜாய் யுவர் டிரிங்'னு ஸ்டைலா சிச்சுக்கிட்டே சொன்னீங்கள்ல.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இட்ஸ் ச்சோ.. ச்ச்வீட்..!! ரிப்பீட் ப்ளீஸ்..!! இன்னொரு மொறை சொல்லுங்க..!!" என்று மீரா இளித்தாள். அந்த பேரர் ஓரிரு வினாடிகள் திருதிருவென விழித்தான். அப்புறம்.. 

"எ..என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!" என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

"வாவ்... ச்சோ.. ச்ச்வீட்..!! இன்னொரு மொறை இன்னொரு மொறை.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ரிப்பீட்..!!"

அந்த ஆள் இப்போது அசோக்கை பரிதாபமாக பார்த்தான். 'எப்படியாவது இந்த இம்சைட்ட இருந்து என்னை எஸ்கேப் பண்ணி வுடு ராசா..' என்பது போல இருந்தது அவன் பார்வை..!!

"ஹேய்.. விடு மீரா அவரை..!! ஸார்.. நீங்க போங்க ஸார்..!!" என்று அசோக்தான் அந்த பேரரை காப்பாற்றினான்.

ஐந்தாவது லார்ஜ் வந்தபோது..

"ஜானிப்பயல சும்மா சொல்லக்கூடாது.. ஜம்முனு இருக்குறான்..!!" என்று திடீரென சொல்லி, அசோக்கை குழம்ப வைத்தாள்.

"யாரு ஜானிப்பய..??"

"இதோ இவன்தான்..!!" விஸ்கியை தட்டிக்காட்டிய மீரா,

"வாக்கர்னு பேரை வச்சுக்கிட்டு.. உள்ளபோய் என்னமா தடதடன்னு ஓடுறான்..!!" கருவிழிகளை சுழற்றிக்கொண்டே சொல்ல,

"ஷ்ஷ்.. ப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே..!!" சலிப்பானான் அசோக். 

விஸ்கியை உள்ளே ஊற்றிவிட்டு.. கடித்துக்கொள்ள ஷீக் கபாபை கையில் எடுத்தவள்.. வாயென்று நினைத்து மூக்கில் திணித்துக் கொண்டாள்..!! அசோக் பதறிப் போனான்..!!

"ஹேய்.. மூக்கு அது..!!"

"ஓ.. மூக்கா இது..?? அப்போ வாய் எங்க..?? வேர் இஸ் மை வாய்.. வேர் இஸ் மை வாய்..??"

என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்.. இடது கையால் தன் முகத்தை தடவி.. வாயை கண்டுபிடித்து.. இரண்டு விரல்களால் வாயை திறந்து.. மூடி விடாமல் பிடித்துக்கொண்டு.. வலது கையிலிருந்த ஷீக் கபாபை வாய்க்குள் லபக்கென்று போட்டாள்..!! போட்டுவிட்டு..

"எப்பூடி..??" என்றாள் பெருமையாக. 

"கிழிஞ்சது..!!" தலையில் அடித்துக்கொண்டான் அசோக்.

ஆறாவது லார்ஜ் குடிக்கும்போது வேறொரு பிரச்சினை..!! சற்று தூரத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த நான்கு கல்லூரி மாணவர்களில் ஒருவன்.. எதேச்சையாக இவளை திரும்பி பார்த்துவிட்டான் போலிருக்கிறது.. மீரா கொதித்து போய் விருட்டென எழுந்தாள்..!!

"ஒய்.. என்னடா இங்க லுக்கு..?? இங்க என்ன படமா காட்றாங்க..??" என்று காலி க்ளாஸை கையில் எடுத்தாள்.

அந்தப் பையன் மிரண்டு போய் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். மீராவுடைய செய்கையில் அசோக்கும் அதிர்ந்து போயிருக்க, பேரர் அவசரமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

"ஸார்.. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ஸார்.. இது டீசன்டான பார்.. ரொம்ப இன்டீசண்டா போறாங்க..!!"

"ஹேய்.. உக்காரு மீரா.. சொல்றேன்ல.. உக்காரு..!!" மீராவை அதட்டிய அசோக்,

"ஸாரி பாஸ்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போங்க..!! நான் பாத்துக்குறேன் பாஸ்.. இனிமே இப்படி நடக்காது..!!"

பேரரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான். அப்புறம் எழுந்து எதிரே இருந்த மீராவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றியவன், சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்.

"எ..என்ன மீரா இது.. எல்லாரும் நம்மை பத்தி என்ன நெனைப்பாங்க..?? ச்ச..!!"

"என்ன வேணா நெனச்சுக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!"

"ப்ச்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிலாம் பண்ற..??" அசோக் இப்போது சலிப்பாக கேட்க,

"எனக்கு மனசே சரி இல்ல அசோக்.. அதான்..!!" மீரா பாவமாக சொன்னாள்.

"அதுக்காக..??"

"யாரையாவது புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு..!!"

"ஹ்ம்ம்.. அவ்வளவுதான..?? சரி.. என்னை அடி.. எவ்ளோ வேணா என்னை அடிச்சுக்கோ.. உன் கோவத்தை என் மேல காட்டு..!! ம்ம்.. கமான்..!!" அசோக் சீரியஸாக சொல்ல, மீரா இப்போது சிரித்தாள்.

"ஹ்ஹ.. உன்னை எதுக்கு அடிக்கணும்..?? நீ... என் செல்...ல ஹனிபனி..!!" என்று கண்சிமிட்டியவள், உடனே அந்த கல்லூரி பையனை நோக்கி கைநீட்டி.. 

"எனக்கு அவனைத்தான் அடிக்கனும்.. அவன் ஃபேஸ்-கட்டே எனக்கு சுத்தமா பிடிக்கல..!! ப்ளீஸ் அசோக்.. ரெண்டே ரெண்டு அறை.. அவனை போய் அறைஞ்சுட்டு வந்துர்றேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!" என்று கெஞ்சலாக கேட்டவாறே எழ முயல, அசோக் அவளை பிடித்து அமுக்கினான்.

"என்ன வெளையாடுறியா.. உக்காரு மீரா..!!"

"ப்ளீஸ் அசோக்..!!"

"ப்ச்.. சொல்றேன்ல..?? வேணுன்னா என்னை அறைஞ்சுக்கோ..!!"

"உன்னை அறைய மாட்டேன் போ.. யு ஆர் எ குட்பாய்..!!"

"ஹாஹா.. யாரு.. நானா..??" அசோக் சிரிப்புடன் கேட்டான்.

"யெஸ்ஸ்ஸ்..!! அசோக் இஸ் எ குட்பாய்..!! மீரா இஸ் எ பேட் கேர்ள்.. வெரி வெரி பேட் கேர்ள்..!!!" மீரா திடீரென அவ்வாறு சீரியஸான குரலில் சொல்ல, அசோக் அப்படியே உருகிப் போனான்.

"ஹேய்.. ஏன் இப்படிலாம் சொல்ற..??"

"யெஸ்.. இட்ஸ் ட்ரூ..!!"

"ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல.. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு நல்லா தெரியும்..!!"

மீராவின் கலைந்திருந்த கூந்தல் கற்றையை சரி செய்தவாறே, அசோக் காதலாக சொன்னான். மீரா இப்போது எதுவும் பேசாமல், அசோக்கையே அமைதியாக பார்த்தாள். இமைகளை அசைக்காமல்.. ஒருவித சலனமற்ற பார்வை..!! பிறகு..

"உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன்ல..?? ஸாரி..!!" என்றாள் இரக்கமாக. 

"ஹேய்.. மீரா.. எ..என்ன இது..??"

"தப்பான நம்பர் குடுத்து பிரச்னைல மாட்டிவிட்டு.. டிக்கெட் விக்க சொல்லி தெருதெருவா அலையவிட்டு.. கடலை கூடைலாம் உன் தலைல தூக்க வச்சு..!! எல்லாம் உனக்கு தேவை இல்லாத கஷ்டம்ல.. ஸாரிடா.. ஸாரி..!!"

"ப்ச்.. என்ன மீரா நீ..?? உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?? உனக்காக இது கூட பண்ண மாட்டேனா..?? அதில்லாம.. அர்பனேஜ்ல அந்த கொழந்தைங்க.. ட்ரெயின்ல அந்த தாத்தா.. அந்த ப்ரக்னன்ட் லேடி.. எல்லாரும் அவங்க மனசார எனக்கு தேங்க்ஸ் சொன்னப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..?? அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. அதெல்லாம் உன்னாலதான..?? இ..இன்னும் சொல்லப் போனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.. நீ இந்த மாதிரி பண்ற இம்சைதான்.. தெரியுமா..?? உன்கிட்ட சொன்னதில்ல.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் தட்..!!" மீராவுக்கு இதமளிக்குமாறு அசோக் அவ்வாறு சொல்ல, அவள் இப்போது பட்டென முகம் மலர்ந்து போனாள். 

"ரியல்லி..????" என்றாள் கண்களில் ஒரு மின்னலுடன்.

"யெஸ்..!!!"

"வாவ்..!! ஐ'ம் ஸோ ஹேப்பி நவ்..!!!" மீராவின் குழந்தைத்தனமான குதுகலம் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது.

"ஹாஹா..!!"

"ஓகே.. இந்த சந்தோஷத்தை கொண்டாட.. எனக்கு ஒரு ஜானி ரிப்பீட் சொல்லேன்..!!"

"ப்ச்.. போதும்.. ஏற்கனவே உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு..!! சாப்பிட்டுட்டு கெளம்பலாம்.. நீ வேற வீட்டுக்கு போகணும்ல..??"

"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!"

"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??"

"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"

"ஓ.. எங்க போயிருக்காங்க..??"

"ம்ம்ம்ம்.. ஊர்ல திருவிழா..!!"

"நீ போகலையா..??"

"போனேன்.. புடிக்கலன்னு நான் மட்டும் வந்துட்டேன்..!!"

"ஓஹோ.. திருவிழா போயிட்டுத்தான்.. மூணு நாளா மேடம் எனக்கு கால் பண்ணலையா..??"

"ம்ம்.. ஆமாம்..!!"

"ஹ்ம்ம்.. வீட்ல யாரும் இல்லன்னதும் தண்ணியடிக்க ஆசை வந்துடுச்சாக்கும்..??"

"ஹாஹா.. ஆமாம் ஆமாம்..!!" மீரா பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டினாள். 

"பரவால.. வீட்ல யாரும் இல்லனாலும் பரவால.. நான் கொண்டு போய் ட்ராப் பண்ணிர்றேன்..!! நீயாச்சு.. உன் வீடாச்சு..!!"

"ஏன்.. உன்கூட தங்க வச்சுக்க மாட்டியா..?? உன் ஆபீஸ்லதான் யாரும் இருக்க மாட்டாங்களே..??" மீரா ஒருவித குறும்பு சிரிப்புடன் கேட்டாள். 

"ஹ்ஹ.. நீ எதுக்கு இந்த கேள்வி கேக்குறேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! உனக்கு சந்தேகமே வேணாம்.. நான் ஒன்னும் அலைஞ்சான் இல்ல.. எனக்கு அப்படிலாம் எதும் ஆசை இல்ல.. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் நடந்தா போதும்..!!"

"ச்சோ.. ச்ச்வீட்..!!"

"ஹாஹா.. போதும் போதும்.. இன்னைக்கு நெறைய 'ச்சோ ச்ச்வீட்' சொல்லிட்ட..!!"

சொல்லிவிட்டு அசோக் புன்னகைத்தான். மீராவும் போதை ஏறிய கண்களுடன், பற்கள் தெரிய பளீரென்று சிரித்தாள். அப்புறம் திடீரென முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டு, 

"அ..அசோக்.." என்றாள். 

"ம்ம்..!!"

"நா..நான்.. நான்.. உன்கிட்ட.."

"என்கிட்ட..??"

"ஒ..ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஸாரி..!!" மீரா சொல்ல, அசோக் இப்போது குழப்பமாக அவளை ஏறிட்டான்.

"எ..என்ன.. எதை மறைச்சுட்ட..??"

"ஆக்சுவலா.. நான் மறைக்கனும்னு மறைக்கல..!!"

"எ..என்னன்னு சொல்லு..!!"

"சொ..சொன்னா உனக்கு ஷாக்கா இருக்கும்.. நம்பவே மாட்ட..!!"

"ப்ச்.. ப்ளீஸ் மீரா.. வெ..வெளையாடாத.. என்னன்னு சீக்கிரமா சொல்லு..!!"

"ம்ம்ம்ம்... நா..நான்.. அல்ரெடி ட்ரிங்க்ஸ்லாம் சாப்பிட்ருக்கேன்னு சொன்னேன்ல.. அது பொய்.. இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்..!!" மீரா அவ்வாறு சொல்ல, அசோக்குக்கு பொசுக்கென்று போனது.

"ம்க்கும்.. இவ்வளவுதானா..?? இதுல ஷாக் ஆகுறதுக்கு என்ன இருக்கு.. 'இங்க பட்டை சாராயம் கெடைக்குமா'ன்னு நீ கேட்டப்போவே எனக்கு அது தெரிஞ்சு போச்சு..!!"

"ஓ..!!"

"ஃபர்ஸ்ட் டைம் அதுவுமா.. சொல்ல சொல்ல கேட்காம, கன்னாபின்னான்னு குடிச்சிருக்க.. ஹ்ம்ம்... என்ன ஆகப் போகுதோ..??" 

அசோக் இருவருக்கும் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான். ஆர்டர் செய்தபோது 'அப்படி இருக்க வேண்டும்.. இப்படி இருக்க வேண்டும்..' என்று பேரருக்கு ஆயிரம் நிபந்தனைகளும், குறிப்புகளும் கொடுத்த மீரா, ஃப்ரைட் ரைஸ் வந்தபோது கூட ஆர்வமாகவே சாப்பிட ஆரம்பித்தாள். ஆனால்.. இரண்டு வாய் எடுத்து வைத்ததுமே..

"எனக்கு போதும்.. பசிக்கல..!!" என்று முகத்தை சுளித்தாள்.. முரண்டு பிடித்தாள்..!!

"ப்ச்.. ட்ரிங்ஸ் அடிச்சா நல்லா சாப்பிடனும்... இல்லனா வயிறு கெட்டு போயிடும்..!! இந்தா.. சாப்பிடு.. சாப்பிடுன்றேன்ல..??" அசோக்கே அவளுக்கு ஊட்டி விட வேண்டியது இருந்தது.

ஒருவழியாக சிணுங்கிக் கொண்டே மீரா சாப்பிட்டு முடித்தாள்.. அசோக்கும் சாப்பிட்டு முடித்து, பில் கொண்டு வர சொன்னான்..!! சாப்பாடு உள்ளே சென்றதில் இருந்தே.. மீராவிடம் சாமியாட்டமும் அதிகமாகவே இருந்தது..!! மொத்தமாய் உள்ளே தள்ளிய விஸ்கி எல்லாம்.. இப்போது ஒன்றுகூடி முழு வீரியத்தில் வேலையை காட்டின..!! அவளுடைய கூந்தல் எப்போதோ கலைந்து போயிருந்தது.. முடிக்கற்றைகள் எல்லாம் அதது இஷ்டத்திற்கு அலைபாய்ந்தன..!! கண்கள் முக்கால்வாசி செருகிப் போயிருக்க.. தலை ஒரு இடத்தில் நில்லாமல், அங்கும் இங்கும் அல்லாடியது..!! கீழுதட்டை வேறு அவ்வப்போது வாய்க்குள் மடித்து வைத்து.. 'பச்சக்.. பச்சக்..' என சுவைத்துக் கொண்டாள்..!!

பில் கொடுத்த பேரருக்கு, அசோக் கார்ட் கொடுத்தான். தேய்த்து முடித்த கார்டை மீண்டும் பில்புக்குக்குள் இட்டு, பேரர் டேபிளில் வைத்து சென்றான். கார்டை கலெக்ட் செய்து கொண்ட அசோக், டிப்ஸ் பணத்தை புக்குக்குள் செருகிக் கொண்டிருக்கும்போதுதான்.. 

"டமார்..!!" என்று டேபிள் சப்தம் எழுப்பியது.

இந்தமுறை காலிக்ளாஸ் வைக்கப்பட்டதால் வந்த சப்தம் அல்ல.. மீராவின் கபாலம் சென்று மோதியதால் எழுந்த சப்தம்..!! போதை மிகுந்து போய்.. டேபிளிலேயே தலைகுப்புற மட்டை ஆகியிருந்தாள் மீரா..!! அசோக் பதறிப் போனான்.. உடனடியாய் அவளை அள்ளி கையிலெடுத்தான்.. அவளுடைய கன்னத்தில் பட் பட்டென தட்டியவாறே கேட்டான்..!!

"மீரா..!! ஹேய் மீரா.. ஹேய்.. என்னாச்சுமா..??" 

அவன் கேட்பதை புரிந்து கொண்டு பதில் சொல்கிற சுவாதீனம் எல்லாம் மீராவுக்கு இல்லை. விழிகளை திறந்து மலங்க மலங்க பார்த்தாள். உதட்டை உள்ளே மடித்து சப்பு கொட்டினாள். பிறகு மீண்டும் இமைகள் செருகிக் கொள்ள, மயக்கத்திலோ நித்திரையிலோ மூழ்க ஆரம்பித்தாள்.

"ஹேய் மீரா.. ஹேய்.. கண்ணை தொறந்து பாரு..!!"

அசோக் திரும்ப திரும்ப அவளுடைய கன்னத்தை தட்டி, அவளுக்கு விழிப்பு கொணர முயன்றான். ம்ஹூம்..!! ஒரு புண்ணியமும் இல்லை..!! அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. அவளுடைய நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை..!! நடுவில் ஒருமுறை வாய்திறந்து 'ரிப்பீட்..!!' என்று உளறியதோடு மட்டும் சரி..!!

அசோக்குக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவஸ்தையாய் நெற்றியை பற்றி பிசைந்தான். 'இப்படி ஃப்ளாட் ஆகி கிடக்கிறாளே.. இவளை எப்படி வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கப் போகிறேன்..?? அட்லீஸ்ட் அட்ரஸ் தெரிந்தாலாவது.. ஆட்டோவில் அள்ளிக்கொண்டு போய் போடலாம்..?? அதுவும் தெரியாதே..?? என்ன செய்யலாம் இப்போது..??'

அப்போதுதான் திடீரென அசோக்குக்கு அந்த ஐடியா மூளையில் உதித்தது. உடனே மீராவுடைய பேகை எடுத்தான். உள்ளே இருந்த செல்போனை எடுத்தான். கான்டாக்ட் லிஸ்ட் திறந்தான். 'இவளுடைய ஃப்ரண்ட்ஸ் யாருக்காவது ஃபோன் செய்து உதவி கேட்கலாம்.. அட்ரஸ் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம்..!!' என்பது மாதிரியான ஐடியா. 

கான்டாக்ட் லிஸ்ட் திறந்து பார்த்தவன்.. ஒருகணம் குழம்பிப் போனான்.. அப்படியே 'பே' என்று செல்ஃபோனையே பார்த்தான்..!! 'மட்டி, மடையன், முட்டாள், மூடன்' என.. பதிவு செய்யப்பட்டிருந்த கான்டாக்ட்கள் எல்லாமுமே.. பரமார்த்த குரு சீடர்களின் பெயர்கள் ரேஞ்சுக்கு இருந்தன..!! அசோக் இப்போது பக்கவாட்டில் திரும்பி, மீராவை பார்த்து முறைத்தான்..!!

"ஆனாலும் உனக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாதுடி..!!" என்று வாய்விட்டே சொன்னான்.

'சரி.. இத்தனை பேரில் இப்போது யாருக்கு கால் செய்வது..??' ஓரிரு வினாடிகள் யோசித்த அசோக், பிறகு 'ஓகே.. கேனைப்பயலிடம் ஹெல்ப் கேட்கலாம்..' என்று முடிவுக்கு வந்தான். கேனைப்பயல் என்ற பெயரில் இருந்த கான்டாக்டுக்கு கால் செய்தான்.. ரிங் சென்றது.. அதே நேரம்..

"Sexy lady on the floor.. Keep you coming back for more..!!" என அசோக்கின் செல்போனும் அலறியது. 

'அடிங் கொய்யால..' என்பது போல அசோக் நொந்து போனான்..!! 'நான்தான் அந்த கேனைப்பயலா..??' என்று மீராவின் பக்கமாய் திரும்பி, முன்பை விட அதிகமாக அவளை முறைத்தான். 'அன்-கான்சியஸாதான கெடக்குறா.. அப்படியே கொமட்டுல நாலு குத்து குத்தினா என்ன..??' என்று கூட தோன்றியது. அப்புறம் எழுந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு, லிஸ்டில் அடுத்ததாக இருந்த மஞ்சமாக்கானுக்கு கால் செய்தான். மீண்டும் அசோக்கின் செல்போனில் இருந்து பாட்டு சப்தம்..!!

அப்புறந்தான் அசோக்கின் மூளையில் ஒரு பொறி தட்டியது. உடனே கான்டாக்ட் லிஸ்ட் மொத்தத்தையும் கவனமாக ஆராய்ந்தான். சீக்கிரமே அந்த உண்மையை கண்டறிந்தான். எல்லா கான்டாக்டுகளுமே ஒரே எண்ணைத்தான் கை காட்டின.. அசோக்கின் எண்..!! ஒரே நம்பரையே விதவிதமான பெயர்கள் கொண்டு ஸேவ் செய்திருந்தாள். குட் பாய்.. ஸ்வீட் பாய்.. ஹனிபனி.. என ஒருசில பெயர்கள் தவிர்த்து.. மற்ற எல்லாமே.. அரை லூஸு.. அடுப்பு வாயன்.. ஆஃப்ரிக்கா கொரங்கு.. என்பது மாதிரிதான் இருந்தன..!!

அசோக்குக்கு சிரிப்பதா, தலையில் அடித்துக் கொள்வதா என ஒன்றும் புரியவில்லை. 'என்ன பெண் இவள்..?? இந்த மாதிரி லூஸுத்தனமான வேலை எல்லாம் செய்து கொண்டு.. என்னை கேனையன் என்கிறாள்..??' 

என்ன செய்வது என்ற குழப்பத்துடன், அசோக் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.

"இங்கயே ரூம் எடுத்துக்கங்க ஸார்.. எந்த ப்ராப்ளமும் வராது..!!"

"நீ..நீங்க.. எங்களை தப்பா புரிஞ்சுக்கலைல..??"

"சேச்சே.. எனக்கு உங்க சிச்சுவேஷன் நல்லா புரியுது ஸார்.. அதான் சொல்றேன்.. இந்த நெலமைல இவங்களை வெளில கூட்டிட்டு போறது நல்லது இல்ல.. நைட் இங்கயே ஸ்டே பண்ணிட்டு காலைல கெளம்புங்க..!! இது டீசண்டான ஹோட்டல்.. நீங்க எதும் பயப்பட தேவை இல்லன்னு சொன்னேன்..!!"

பேரர் தந்த நம்பிக்கையில், அன்று இரவு அங்கேயே தங்கிக் கொள்வது என்று அசோக் முடிவு செய்தான். வீட்டுக்கு ஃபோன் செய்து, 'கொஞ்சம் வேலை இருக்கு மம்மி.. நைட் ஆபீஸ்லயே தங்கிக்கிறேன்..' என்றான். மீராவுடைய பேகை தோளில் மாட்டிக் கொண்டான். அவளை பூப்போல அள்ளி, கைகளில் ஏந்திக் கொண்டான். ரூம் சர்வீஸ் பையன் வழி நடத்த, மீராவை தூக்கிக் கொண்டே மாடிப்படிகள் ஏறினான்.

"ஏ..ஏன்.. படிக்கட்டுல.. பைக் ஓட்டுற..??"

மீரா உளறிக்கொண்டே வந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அசோக் அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான். பருவச்செழிப்புடன் படுக்கையில் மல்லாந்திருந்த மீராவிடமிருந்து.. பார்வையை அகற்ற முடியாமல்.. ஏக்கமாய் பார்த்த ரூம் சர்வீஸ் பையனை.. 'ஏய்..' என்று அதட்டினான்..!!

"வே..வேற.. வேற எதும் வேணுமா ஸார்..??" அவன் சமாளித்துக் கொண்டு கேட்டான்.

"கொஞ்சம் தண்ணி மட்டும் குடு..!!"

"ஓகே ஸார்..!!" 

அந்தப்பையன் கதவு திறந்து வெளியேறும் வரை, அசோக் அவனையே முறைத்துக் கொண்டிருந்தான். அப்புறம் கதவை லாக் செய்யலாம் என்று வாசல் நோக்கி நடந்தான். திடீரென அவனுடைய முதுகுப்புறம் இருந்து..

"அ..அசோக்..!!"

என்று சத்தம் கேட்டதும், அப்படியே நின்றான். திரும்பி பார்த்தான். மீரா இப்போது படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்தாள். இமைகளை பிரிக்க முடியாமல் பிரித்து, அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். பிறகு தலையை பரபரவென சொறிந்து கொண்டே..

"எ..எங்க இருக்கோம்..??" என்றாள்.

"ஹோட்டல் ரூம்..!!"

"அப்போ.. வீடு..??"

"அதான் உன் வீட்டுல யாரும் இல்லன்னு சொன்னேல.. நைட்டு இங்க தங்கிட்டு காலைல போலாம்..!!"

அசோக் அவ்வாறு சொன்னதுமே மீராவின் முகம் பட்டென மாறியது. ஒருமாதிரி பரிதாபமாக முகத்தை மாற்றிக் கொண்டாள். அவளுடைய மூக்கு திடீரென விசும்பியது. கண்கள் பட்டென கலங்கிப்போக, அழ ஆரம்பித்தாள். 

"ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.. ம்ஹ்ம்.."

"ஹேய்.. மீரா.. எ..என்னாச்சு.. ஏன் அழற..??" அசோக் சற்றே பதறிப்போய் அவளிடம் ஓடினான்.

"அழனும் போல இருக்கு..!!"

"ஏன்..??" இரு கைகளாலும் அவளுடைய முகத்தை மென்மையாக தாங்கி பிடித்தவாறு அசோக் கேட்க, 

"எ..எனக்கு.. எனக்கு யாரும் இல்ல அசோக்..!!" மீரா கேவலுடன் பரிதாபமாக சொன்னாள்.

"ஹையோ.. என்ன பேசுற நீ..?? அதான்.. உனக்கு.."

"எ..எனக்கு அழுகை அழுகையா வருது.. போ..!!"

"ப்ச்.. என்னமா நீ.. அழாத ப்ளீஸ்.. கண்ணை தொடைச்சுக்கோ..!! எ..என்ன பிரச்னை இப்போ..??"

"என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!" 

"ச்சே.. என்ன பேச்சு இது..?? வீ..வீட்ல எதாவது பிரச்னையா..??"

"ம்ம்..!!"

"அதுக்காக இப்படிலாம் பேசுறதா..?? நா..நான்.. நான் ஒருத்தன் இருக்குறப்போ.. இப்படிலாம் பேசாத மீரா..!! உன் மேல நான் எவ்வளவு ப்ரியம் வச்சிருக்கேன்னு உனக்கு புரியலையா..?? நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!" அசோக் சொல்ல, மீரா இப்போது அவனை சற்று வித்தியாசமாக பார்த்தாள். 

"நெஜமா..??"

"ம்ம்..!!"

"என் மேல ப்ரியமா இருப்பியா..??"

"இருப்பேன்..!!"

"எப்போவும் என் கூடவே இருப்பியா..??"

"இருப்பேன்டா..!!"

அசோக் உறுதியாக சொல்ல, முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளியுடன் மீரா அவனையே பார்த்தாள். ஒரு சில வினாடிகள்..!! பிறகு மீண்டும் அவளுடைய முகம் பட்டென இருண்டது. கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க.. 

"இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!" என்று விசும்பலாக சொன்னாள்.

"ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??" 

அசோக் தன் தலைமீது கைவைத்து சத்தியம் செய்தான். மீரா இப்போது அழுகையை நிறுத்தினாள். மூக்கு மட்டும் விசும்ப, அசோக்கின் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பிறகு என்ன நினைத்தாளோ.. உதடுகள் பிரித்து.. மெல்ல..

"அசோக்..!!" என்றாள் ஏக்கமாக.

"ம்ம்.."

"என்னை கட்டிப் புடிச்சுக்கோ..!!"

கைகள் ரெண்டையும் அசோக்கை நோக்கி நீட்டி.. 'என்னை தூக்கிக்கோ மம்மி..' என்று சிறுகுழந்தை ஒன்று தாயிடம் கெஞ்சுவது போல.. ஏக்கமாக சொன்னாள் மீரா..!! அசோக்கின் மனதுக்குள் இப்போது காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட.. கனிவாக அவளை ஒரு பார்வை பார்த்தான்..!! இதுவரை மீராவை அவன் கட்டியணைத்ததே இல்லை. அவன் மனதுக்குள் ஆசையிருந்தும், மீராவின் குணமறிந்து அந்த ஆசையை அவன் வெளிப்படுத்தியதே இல்லை. வீதியில் நடந்து செல்கையில் விரல்களை கோர்த்துக் கொள்ள கூட, அவளும் அனுமதித்தே இல்லை. இப்போது அவளே தன்னை அணைத்துக்கொள் என்று அழைப்பு விடுக்க, ஆரம்பத்தில் சிறிது தயங்கிய அசோக், பிறகு அவளை ஆரத் தழுவிக் கொண்டான். அவளும் அதற்காகத்தான் காத்திருந்தது மாதிரி அவனை அப்படியே இறுக்கிக் கொண்டாள். தனது மூக்கினை அவனுடைய மார்பில் வைத்து சரக் சரக்கென தேய்த்தவள், பிறகு அந்த மார்பிலேயே முகம் சாய்த்து படுத்துக் கொண்டாள்.

"என் மேல உனக்கு கோவம் இல்லைல..??"

"ம்ஹூம்..!!"

"என்னை விட்டு போயிட மாட்டேல..??"

"ம்ஹூம்..!!"

"நான் என்ன பண்ணாலும்..??"

"ஹஹ.. நீ என்ன பண்ணாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.. போதுமா..??"

"ம்ம்ம்ம்..!!"

மீரா இப்போது இன்னும் இறுக்கமாக அசோக்கை அணைத்துக் கொண்டாள். மழையில் நனைந்திட்ட ஆட்டுக்குட்டியென, அவள் தன் மார்போடு அண்டியிருப்பது, அசோக்கிற்கு ஆனந்தமாகவே இருந்தது. அவளுடைய கூந்தலை மென்மையாக வருடி கொடுத்தான். அவனுடைய மனதில் ஒருவித ஆச்சரியம்..!! எந்த நேரமும் முகத்தில் முறைப்பும், பேச்சில் திமிருமாக தெரிகிற மீராவுக்குள்.. இப்படி அன்புக்கு ஏங்குகிற ஒரு குழந்தை இருக்கிறாள் என்பது.. முதன் முறையாக அவனுக்கு தெரிய வந்ததுதான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம்..!! 

'
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 18-06-2019, 10:19 AM



Users browsing this thread: 5 Guest(s)