Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினி உடன் நடிகர் விஜய் நேரடியாக மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

[Image: rajini-vijay.jpg]அஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
சமீபத்தில் ரஜினியின் ’பேட்ட’ படமும், அஜித்தின் ’விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இது சினிமா உலகில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்பட்டது. இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் வசூல் கணக்கில் சண்டை போட்டுக் கொண்டனர். 

தமிழகத்தில் விஸ்வாசமும், வெளிநாடுகளில் பேட்டையும், அதிக வசூலைக் குவித்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் ரஜினிவிஜய் படங்கள் அடுத்து மோதுவதாக தகவல் வந்துள்ளது. 

ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ’தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வரும் 2020 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் தற்போது அட்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மாநகரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் ரஜினியுடன் விஜய் மோதும் நிலை உண்டாகியுள்ளது. இந்த விஷயம் இப்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே இதற்குமுன் ஒருமுறை ரஜினி, விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டியை சந்தித்துள்ளன. ’சந்திரமுகி’ வெளியான அதே நாளில், விஜய் நடித்த ’சச்சின்’ படம் வெளியானது. சந்திரமுகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த முறை யாருடைய படம் ஜெயிக்கப் போகிறது. ரசிகர்கள் இதை எவ்வாறு அணுகுவார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது அரிதாகி விட்டது. வியாபார காரணங்களுக்காக பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதை விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் விரும்புவதில்லை.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 18-06-2019, 09:12 AM



Users browsing this thread: 4 Guest(s)