Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
[color=var(--title-color)]'ஆமாங்க, எனக்கு கல்யாணம் ஆகிருச்சு': பிக்பாஸ் வைஷ்ணவி!
[color=var(--content-color)]பிர்தோஸ் . அ[/color]
[color=var(--title-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான வைஷ்ணவிக்கு திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்துள்ளது.[/color]
[/color]
[Image: vikatan%2F2019-06%2F9c5cd7b8-7db5-4b38-b...2Ccompress][color=var(--meta-color)]பிக் பாஸ் வைஷ்ணவி[/color]
[color=var(--content-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. எழுத்தாளர் சாவியின் பேத்தியான இவர் இந்த நிகழ்ச்சியின் பாதியிலியே எலிமென்ட் ஆனாலும் நிகழ்ச்சியின் வாயிலாக இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்நிலையில் இவர் தற்போது தனது காதலரை கணவராக கரம்பிடித்துள்ளார். இவரது திருமணம் குறித்து வைஷ்ணவியிடம் பேசினேன்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-06%2Fa0cf1f16-4424-4fdc-9...2Ccompress]வைஷ்ணவி[/color]
[color=var(--content-color)]'' என்னோட நண்பர்கள் அனைவரும் போன் பண்ணி 'உனக்கு திருமணம் நடந்திருச்சாமே'னு கேட்குறாங்க. ஆமாங்க நான் திருமணம் பண்ணிக்கிட்டேன். என்னோட கணவர் பெயர் அஞ்சன். பைலட்டா இருக்கார். எனக்கு இவரை மூன்று வருடங்களாகத் தெரியும். எங்க ரெண்டு பேருக்கும் இடையே நிறைய மியூச்சுவல் நண்பர்கள் இருந்தாங்க. அவங்க மூலமாகத்தான் இவரை ஒரு பார்ட்டியில் சந்திச்சேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. வீட்டுல சொன்னோம் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. அதனால கோவிலில் எங்க இரண்டு வீட்டார் பெற்றோர்கள் முன்னிலையில் எங்க திருமணம் நடந்தது. அதிகமான நண்பர்கள் யாருக்கும் சொல்லல. பிக் பாஸ் ரம்யா என்னோட திருமண நிகழ்வுகளில் கலந்துக்கிட்டாங்க. சந்தோஷமா வாழ்க்கை இருக்கு.'' என்றவரிடம் விரைவில் ஆரம்பமாக போகும் 'பிக் பாஸ்' குறித்து கேட்டால்,[/color]
[color=var(--content-color)]'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தொடர்ந்து இதுவரைக்கும் பார்த்தது இல்லை. நான் கலந்துக்கிட்ட சீசன் 2கூட நான் பார்க்கல. இப்போ ஆரம்பமாக போற சீசனும் பார்க்க மாட்டேன். ஆனா, ட்விட்டரில் 'பிக் பாஸ்' பற்றி யாரெல்லாம் என்ன பேசுறாங்க, கருத்து சொல்றாங்கனு கண்டிப்பா பார்ப்பேன்.'' என்று சிரிக்கிறார் வைஷ்ணவி.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 18-06-2019, 09:08 AM



Users browsing this thread: 5 Guest(s)