அபர்ணா அண்ணி
அண்ணியும் அம்மாவும் மிகவும் ஆச்சரியத்துடன் அவர்களை வரவேற்று உட்கார வைத்தனர்.. அவர்கள் யாரும் எங்கள் யாருடனும் முகம் பார்த்து ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அண்ணா எனது அருகில் வந்து நின்று கொண்டான்.. அவனின் முகம் பதற்றத்தில் வியர்திருந்தது.. உள்ளே மிகவும் படபடப்புடன் காணப்பட்டான்.. நான் அபர்ணாவைப் பார்த்தேன்.. அவளும் என்னைப் பார்த்து என்ன என்பது போல சாடையில் கேட்க.. நான் எல்லாமே முடிந்து விட்டது என்பது போல சைகை செய்தேன்.. அவளது முகம் சட்டென சுருங்கியது..

அப்பாவும் வந்து அமர்ந்ததும் அம்மாவைப் பார்த்தவாரு பேச்சினை ஆரம்பித்தார்..

"இவங்க எல்லாரும் எதுக்காக இங்க வந்திருக்காங்கன்னு உனக்கு தெரியுமா...?"

"இல்லங்க.. என்னாச்சி...?"

"எல்லாம் உன் பையன் பண்ணி இருக்குற காரியம் தான்.."

"என்னங்க சொல்றீங்க...? என்னாச்சி...?"

அப்பா நடந்த விடையங்களை விலாவாரியாக சொல்ல சொல்ல.. அம்மா மிகுந்த அதிர்ச்சியுடன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டு சிலை போல அமர்ந்திருந்தார்..

அப்பா தொடர்ந்தார்..
"இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.. இது எல்லாமே உன் மருமகளுக்கும் தெரியும்.."

"என்னங்க சொல்றீங்க..? என்னால இதையெல்லாம் நம்பவே முடியல.. இவன் அப்புடியெல்லாம் பண்ணி இருக்க மாட்டான்.."

"நம்பலன்னா நீ அவனையே கேளு.. இவ்ளோ நேரம் அவன வச்சி பேசி உண்மை எல்லாத்தையும் அவன் வாயாலையே எடுத்தாச்சி.."

அண்ணனை முறைத்துப் பார்த்து விட்டு அவனை வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் போட்டு திட்டித் தீர்த்தார் அம்மா.. அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.. பின்னர் அபர்ணாவைப் பார்த்து..

"ஏன்மா...? நீயாச்சும் ஒரு சத்தம் என்கிட்ட சொல்லி இருக்கலாமே.. இவ்வளவு நடந்தும் எதுக்குமா நீ எதுவும் சொல்லாம மறச்சி வச்சிருந்த...?"

"இதையெல்லாம் சொல்லி உங்க யார் மனசையும் புண்படுத்த விரும்பல அத்த.. அது மட்டுமில்லாம.. அவரு அந்த பொண்ணு பத்தின எல்லா ப்ராப்ளத்தையும் சீக்கிரமே சால்வ் பண்றேன்னு சொன்னாரு.. அதனால எல்லாம் கூடிய சீக்கிரமே ஓகே ஆகும் ன்னு நினைச்சி உங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன்.." அவள் அழுதபடி கூறி முடித்தாள்..

எல்லாவற்றையும் தலை கவிழ்ந்து கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அபர்ணாவின் அப்பா பேச ஆரம்பித்தார்..

"நீங்களே சொல்லுங்க சம்பந்தி.. இப்ப நாங்க என்ன பண்ணட்டும்..? என் பொண்ணோட நல்ல மனசுக்கு உங்க பையன் பண்ணி வச்சி இருக்குற வேலைய பாருங்க.."

"எங்கள மன்னிச்சிருங்க சம்பந்தி.. எங்க யாருக்குமே நீங்க சொல்ற வரைக்கும் இந்த விஷயம் எல்லாம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாளைக்கு ஏதாச்சும் பண்ணி இருந்திருப்போம்.." என்றார் அப்பா பாவமாக...

"இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு எதுவுமே இல்ல.. இது என் பொண்ணோட வாழ்க்க.. எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி எங்க கண்ணு முன்னாடியே எங்க பொண்ணு வாழ்க்க சீரழிஞ்சு போக நாங்க விரும்பல..."

"என்ன சொல்றீங்க சம்பந்தி...?"

"இன்னும் என்ன சார் சம்மந்தி கம்பந்தின்னுகிட்டு.....? இனிமே உங்க உறவே வேணாம் எங்களுக்கு.. எங்க பொண்ண நாங்க அழைச்சிட்டு போறோம்.. நாளைக்கே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறோம்.. சைன் பண்ணி குடுத்துட்டு உங்க பையன அந்த பொண்ணு கூடவே சேர்த்து வச்சி அழகு பாருங்க.." என்று ஆவேசமாக கத்தினார் அபர்ணாவின் சித்தப்பா..

"ஆம்பளைங்களுக்கு எந்த ப்ரோப்ளமும் இல்ல.. நினைக்கிற நேரத்துல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பாங்க.. டைவர்ஸ் குடுத்ததுக்கு அப்புறமா வாழாவெட்டியா இருக்குற என் பொண்ணுக்கு இனிமே யாரு வாழ்க்க தருவாங்க..? அவ வாழ்க்க இனிமே என்ன ஆகும்...?" என்று கூறி அழ ஆரம்பித்தார் அபர்ணாவின் அம்மா..

"இதுவே புள்ள குட்டின்னு ஆனதுக்கு அப்புறமா நடந்திருந்தா இன்னும் ப்ரோப்ளம் ஆகி இருக்கும்.. நல்ல வேள.. அப்புடி எதுவும் இல்ல.." என்றார் அபர்ணாவின் அண்ணா..

இப்படி ஆளாளுக்கு ஒன்று சொல்லி அண்ணனை அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர்.. பேச வார்த்தைகள் இன்றி அண்ணன் செய்த தவறுக்காக நாங்கள் அனைவரும் கூனிக் குறுகிப் போய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தோம்.. அபர்ணா எதுவும் பேசவில்லை.. அழுதுகொண்டே இருந்தாள்..

அப்பா அம்மா எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களது கோபம் அடங்கவில்லை.. அவர்களது முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை.. அபர்ணாவின் அண்ணாவும் சித்தப்பாவும் அவளை புறப்படுமாறு பல முறை வலியுறுத்திக் கூறிய போதும் அவள் எழுந்து செல்லாமல் அழுதுகொண்டே இருந்தாள்..

அம்மா எழுந்து சென்று அபர்ணாவை கட்டி அணைத்து அவளது தலையினை தடவி அவளை சமாதானப்படுத்தினார்..

"எங்க பையன் பண்ண தப்புக்கு நாங்க எல்லாரும் உங்ககிட்டயும் அபர்ணாகிட்டயும் மன்னிப்பு கேட்டுக்குறோம்.. எல்லாரும் எங்கள மன்னிச்சிடுங்க.. இவள மாதிரி ஒரு மருமகள் கிடைக்க நானும் இவரும் குடுத்து வச்சிருக்கணும்.. நா இவள மருமகளா பாக்கல.. என்னோட சொந்த பொண்ணு மாதிரித்தான் பாத்துக்கிட்டேன்.. அவளும் அப்புடி தான் என்கூட நடந்துகிட்டா.. இப்புடி திடீர்னு வந்து இவள கூட்டி போறேன்னு சொன்னா நாங்க என்னங்க பண்றது..? இந்த ப்ரோப்ளம் எல்லாத்தையும் பேசி தீர்த்துக்கலாம்.. தயவு செய்து எங்களுக்கு ஒரு சின்ன அவகாசம் தாங்க.. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம்.. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்திருச்சு.. ஆனாலும் தப்பு தப்பு தான்.. ஆனா.. எங்க பையன் இனிமே அந்த பொண்ணு கூட பேசவோ பழகவோ மாட்டான்.. அபர்ணா கூட சந்தோசமா இருப்பான்.. இனிமே எந்த பிரச்சனையும் வராம பாத்துக்குறோம்.. அதுக்கு நா பொறுப்பு.." கண்ணீர் மல்க கூறி முடித்தார் அம்மா...

யாருமே கன்வின்ஸ் ஆன மாதிரி தெரியவில்லை.. பலவாறாக பேசிப் பார்த்தும் எதுவுமே சரிவரவில்லை..

இறுதியாக அவர்கள் அனைவரும் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் கலந்தாலோசித்து விட்டு வந்து..

"இங்க பாருங்க.. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளுக்கு இப்புடி ஒண்ணு நடந்தா நீங்கல்லாம் என்ன பண்ணுவீங்க....? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. எங்களுக்கு எங்க பொண்ண இன்னும் இங்க விட்டு வச்சிருக்க பயமா இருக்கு.. நீங்க இவ்ளோ கேக்குறதனால கடைசியா ஒரு சந்தர்ப்பம் தாறோம்.. ஒரே ஒரு மாசம் தான்... நாங்க இப்ப இவள அழைச்சிட்டு போறோம்.. சீக்கிரமே அந்த பொண்ணு சம்பந்தமான எல்லா பிரச்சனையையும் முடிச்சிட்டு வந்து குல தெய்வம் முன்னால அவ கூட இனிமே எந்த தொடர்புமே வச்சிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு எங்க பொண்ண கூட்டி வாங்க.."
என்றார் அபர்ணாவின் அப்பா..

அம்மா அழுது கொண்டே இருந்தார்.. நானும் கவலையுடன் நின்று கொண்டிருக்க மிகுந்த சிரமப்பட்டு கண்ணீர் மல்க அபர்ணா விடை பெற்றாள்.. அவள் போகும் போது என்னைப் பார்த்த அந்த ஒரு பார்வை என் இதயத்தினைக் கிழித்தது போன்று இருந்தது.. அவள் செல்லும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது.. இருந்தாலும் இந்த ஒரு முடிவு இன்னொரு ஆரம்பத்திற்குத் தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.. பாய்ந்து வந்த அழுகையை அடக்கினேன்.. கண்களை மெல்ல துடைத்துக் கொண்டு திரும்பினேன்..

அப்பா எதுவுமே பேசாமல் ஜடம் போல அமர்ந்திருந்தார்.. அம்மா அழுது வடித்துக் கொண்டிருந்தார்.. அண்ணா அப்படியே நிலத்தில் அமர்ந்துவிட்டான்.. கனத்த என் இதயத்தினை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு அம்மாவையும் அப்பாவையும் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்..

அண்ணா இப்பொழுது பேச ஆரம்பித்தான்.. நடந்த முழு வரலாற்றையும் கூறி முடித்தான்.. செய்தது தப்பு என்றாலும் அவனது பக்கத்தில் இருக்கும் நியாயங்களையும் அவர்களுக்கு விளக்கினான்..

ஆனாலும், அப்பாவோ அம்மாவோ அவற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை..

பல மணி நேரமாக நடந்த விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தது..

"நீ ஆயிரம் சொன்னாலும் நீ பண்ணது தப்பு.. ரெண்டு பொண்ணுங்க உன்னால வாழாவெட்டியா நிக்கிறாங்க இப்ப.. உனக்கு ஒரு மாசம் தான் டைம்.. யாரு வேணும் னு நீயே முடிவு பண்ணிக்கோ.. ஒண்ணு.. அந்த பொண்ணுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணு.. இல்ல.. அவ தான் வேணும்னா அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.. ஆனா அதுக்கப்புறமா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது.. எங்கயாச்சும் போய் கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழு.. ஏன்னா.. அதுக்கப்புறமா நாங்க இந்த சொசைட்டிக்கு முகம் குடுக்கணும்.."
என்று கூறி விட்டு அப்பா காரினை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.. அம்மாவும் கோபமாக உள்ளே சென்று விட்டார்..

"நீ ஒண்ணும் யோசிக்காத.. ஒழுங்கா யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு.. எல்லாம் சரியாகும்.. டோன்ட் வர்ரி.."
நான் அண்ணனைத் தேற்றிவிட்டு ரூமுக்குள் சென்றேன்..

எல்லாம் என்னால்த் தான் என்ற போதும்.. இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிந்திருந்தாலும்.. அவளது பிரிவினை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. உடம்பினைக் கிழித்து உயிரை மாத்திரம் உருவிக் கொண்டு சென்று விட்டிருந்தாள் அவள்.. அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும்... நினைக்கும் போதே இதயம் கனத்தது.. அழுகை அழுகையாக வந்தது.. பாத்ரூமுக்குள் புகுந்தேன்.. அழுகை அதுவாகவே என்னை ஆட்கொண்டது..

(தொடரும்..)
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 23-02-2024, 01:27 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 5 Guest(s)