Adultery ➰ அண்ணி •❖• கீத்து
#5
【03】

வேலை முடிந்து ஹாஸ்டல் சென்றவள் எண்ணம் எல்லாம் அவள் காதல், ரகு, கல்யாணம் என பல சிந்தனைகளில் மூழ்கியது. அவள் தூங்குவதற்கு அதிகாலை ஆகிவிட்டது.

மறுநாள், அவளது ஃபோன் ரிங் ஆன போது தான் விழித்து தன்னுடைய செல்போன் எடுத்துப் பார்த்தாள்.  அவளை அழைத்தது அவளின் காதலன் ரகு..

அய்யோ சாரி டா, இன்னும் கொஞ்ச நேரம் என சொல்லி அந்த ஃபோன் கால் கட் செய்தாள். நேரத்தை பார்க்கும் போது,  காலை மணி 8 தாண்டிவிட்டது.

அவசர அவசரமாக குளித்து முடித்து, சிறிது மேக்கப் போட்டுக் கொண்டாள். தன்னிடம் இருந்த ஒரு எளிமையான சேலையை அணிந்து கொண்டாள்.

கீத்து மற்றும் ரகு இருவரும் கோவிலுக்கு வந்து சேரும் போது, ரகுவின் தங்கை ஷிவானி மற்றும் அவனது நண்பர்கள் ஜெய் மற்றும் ஜான் இருவரும் அங்கே இருந்தார்கள்.

ஷிவானி : ஏண்டா இவ்ளோ லேட்?

ரகு : மேடம்க்கு ராத்திரி நிறைய கனவு, அப்படியே ரொம்ப நேரம் தூங்கிட்டாங்க. கால் பண்ணி எழுப்பி ரெடியாகி கூட்டிட்டு வர வேண்டாமா.

நீ இங்க வா என கீத்துவை அழைத்த ஷிவானி, கலைந்து கிடந்த கீத்து முடிகளை சரி செய்தாள்.

கீத்து : எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷிவானி..

ஷிவானி : யாரு அண்ணன நினைச்சா?

கீத்து : ஆமா..

ஷிவானி : என்ன பயம்? அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டாம். ஆல் குட்.

கீத்து : அப்படியிருந்தால் சந்தோஷம்.. ஆனா..

ஷிவானி : என்ன ஆனா.. வேணும்னா பாருங்க அண்ணன் இப்ப வருவான்.

கீத்து : எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?

ஷிவானி : கல்யாணத்துக்கு வரலைன்னா, நான் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன். சோ எனக்காக கண்டிப்பா வருவான்...

ரகுவை கோபம் வந்தால் வார்த்தைகளால் ஒரு வழி பண்ணும் குமார் தன் தங்கையை வார்த்தைகளால் இதுவரை பெரிதாக கடிந்து கொண்டதில்லை. இதுவரை தன் தங்கை கேட்டு அவளை பாதிக்காத எந்த விஷயமும் குமார் இதுவரை மறுத்ததும் கிடையாது. அதனால் தான் ஷிவானி உறுதியாக சொல்கிறாள்.

ஷிவானி அண்ணன் கண்டிப்பாக வருவான் என சொல்லி முடித்த அதே வினாடி கோவில் வாசலில் குமார் மற்றும் அவன் காதலி திவ்யா இருவரும் காரில் வந்து இறங்கினர்...

ரகுவின் அருகில் வந்ததும், திவ்யா அவள் காதலன் குமாரை போலவே வார்த்தைக்கு வார்த்தை அனாதை, நீ எப்படி உன் அண்ணனுக்கு இப்படி துரோகம் செய்யலாம் என பேச ஆரம்பித்தாள்.

உங்களுக்கு அவளைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என ரகு மற்றும் ஷிவானி இருவரும் ஒருசேர திவ்யாவிடம் சொன்னார்கள்.

ஏற்கனவே தம்பியின் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இறுகிய முகத்துடன் இருந்த குமாரின் முகம் தன் தம்பி மற்றும் தங்கை தன்னுடைய காதலியை எதிர்த்து கேள்வி கேட்பதை கேட்டதும் மேலும் இறுகியது.

தேவையில்லாமல் பேசி வாங்கிக் கட்டிக்கொண்டது போல திவ்யா உணர்ந்தாள்.

எல்லாரும் வந்தாச்சா எ‌ன்று‌ கேட்டார் கோவில் அர்ச்சகர். ஆம் என ஷிவானி சொல்ல, மாலைகளை எடுத்துக் கொடுத்தார்.

மணக்கோலத்தில் ரகு மற்றும் கீத்து மாலைகள் அணிந்திருக்க..

மணப்பெண் கீத்து தன் இரு கைகளையும் கூப்பி கும்பிட்ட படி நின்றாள்..

தன் தம்பி ரகு, இந்த மோசமான பெண்ணை மணப்பதை தன்னால் தடுக்க முடியவில்லையே என்று தன் காதலி திவ்யாவிடம் சொல்லி விட்டு வெறுப்பு மிகுந்த மனநிலையில் குமார் அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஷிவானி தன் இரண்டாவது அண்ணன் கல்யாணம் நடைபெறும் சந்தோஷத்தில் இருந்தாள். தான் கேட்டுக் கொண்டதால் தனக்காக மட்டுமே இங்கே வந்திருக்கும் மூத்த அண்ணன் குமாரை நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது.

இங்கே வாங்கோ  என சொல்லி மாலைகள் அணிய சொல்லி, தாலியை எடுத்து கட்டுங்கோ என அர்ச்சகர் சொல்ல. கீத்துவின் காதலனை கீழே தள்ளிவிட்டு அவன் அண்ணன் குமார் தாலியை கட்டிவிட்டான். அவன் தாலி கட்டுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி...

கீத்து அதிர்ச்சியுடன் கீழே கிடந்த ரகுவை பார்க்க, அதே அதிர்ச்சி நிறைய தன் அண்ணன் குமாரை பார்த்துக் கொண்டிருந்தான் ரகு. குமார் மூன்றாவது முடிச்சை போட்டு விட்டு கீத்துவை
பார்த்தான்.

கீத்து கண்கள் கண்ணீரால் பெருகி இன்னும் ரகுவை பார்த்துக் கொண்டிருந்தது.

யூ பாஸ்ட்டர்ட் என திவ்யாவின் குரல்.

ரகுவிடம் இருந்த தன் முகத்தை விலக்கி என்னடா இப்படி பண்ணிட்ட என்பதைப்‌ போல குமாரை பார்த்தாள் கீத்து.

நீ என்ன காரியம் பண்ணிட்ட குமார் எ‌ன்று‌ திவ்யா கேட்க, குமார் முகத்தில் அவன் காரில் இருந்து இறங்கி வந்த போது இருந்த அதே இறுக்கம். அவன் என்ன நினைக்கிறான் எ‌ன்று‌ யாராலும் முகத்தை பார்த்து கண்டுபிடிக்க முடியாது.

ரகு, ஷிவானி மற்றும் திவ்யா மூவரும் குமாரை பார்த்து சீறினர். ஆனால் குமார் முகத்தில் துளியும் மாற்றமில்லை.

அர்ச்சகர் மற்றும் ரகுவின் நண்பர்கள் அங்கே நடக்கும் விஷயங்களை வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...

கல்யாணம் பற்றி ஆயிரம் கனவுகள் கண்டிருந்தாள் கீத்து. நேற்று ரகு கல்யாணம் என்று சொல்லும் போதே அவளுக்கு அதிர்ச்சி.

ஹாஸ்டல் சென்ற பிறகு, ஓரளவுக்கு தன் மனநிலையில் இந்த திடீர் கல்யாணத்துக்கு ஓகே என்னும் அளவுக்கு மாற்றம். அவள் மனது இரவு தூங்கும் போது கல்யாணம் எப்படி நடக்கும் என்ற ஒத்திகை பார்த்தது, அந்த ஒத்திகையில் தனக்கு தாலி கட்டியவது தன் காதலன் ரகு.

இப்போது கீத்து கண்களில் கண்ணீர் பொல பொலவென வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என அவளுக்கு புரியவில்லை. அவள் எதுவும் சொல்வதால் குமார் கட்டிய தாலி இல்லையென ஆகிவிடுமா?
Like Reply


Messages In This Thread
RE: ➰ அண்ணி •❖• கீத்து【03】 - by நிழலின்நிழல் - 21-02-2024, 08:03 AM



Users browsing this thread: 1 Guest(s)