21-02-2024, 08:03 AM
【02】
தாலியை எடுத்து கட்டுங்கோ என அர்ச்சகர் சொல்ல.
கைகளை கூப்பியபடி நின்ற கீத்து, தன் கண்களை மூடி எதுவும் தப்பாக நடக்கக் கூடாது என வேண்ட ஆரம்பித்தாள்..
கீத்துவின் காதலன் அந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்ட தயாரானான்.
அடுத்த சில விநாடிகளில் கீத்துவால் தன் நெஞ்சில் தாலி உரசுவதை அவளால் உணர முடிந்தது.
அதே வினாடி "அய்யோ", "ஏய் ஏய்", "என்ன பண்றடா" என ஆளாளுக்கு சத்தம் போட.
தன் கண்களை திறந்தாள் கீத்து. அவள் எதிரில் நின்று கொண்டிருப்பது குமார்.
குமார் வேறு யாருமல்ல, கீத்துவின் காதலன் ரகுவின் அண்ணன்.
தாலியை எடுக்க கை நீட்டிய தன் தம்பியை கீழே தள்ளி விட்டுவிட்டு, அந்த தாலியை எடுத்து முதல் முடிச்சை போட்டுவிட்டு இரண்டாவது முடிச்சை போட்டுக் கொண்டிருந்தான் குமார்...
குமார் தன் தம்பியின் காதலி கீத்து கழுத்தில் தாலி கட்டுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி...
- - நேற்று - -
கீத்து வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை செய்கிறார்களோ இல்லையோ ஆனால் எப்போதும் போல இன்று காலையும் அந்த அலுவலகம் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் காரணம் அவர்கள் முதலாளியின் மீதிருக்கும் பயம் தான்.
ஆனால் சங்கீர்த்தனாவுக்கு வேலை சுத்தமாக ஓடவில்லை. அவள் தன் காதலனையும் காதலையும் பற்றி யோசித்தாள்.
கீத்துவுக்கு ரத்த சொந்தங்கள் யாரேனும் இன்னும் இருக்கலாம். ஆனால் அவள் சொல்லிக் கொள்வதற்க்கென யாரும் இல்லை. வேலை பார்க்கும் மகளிருக்கான விடுதியில் இப்போது வாழ்கிறாள்.
உழைத்து தன் சொந்த காலில் நிற்க ஆரம்பித்த பிறகு அவள் வாழ்வில் சந்தோஷம் நிறைந்து இருந்தது அவளுடைய காதலனாக ரகு அவள் வாழ்வில் வரும்வரை அவளுக்கு இப்போது இருக்கும் பெரிய உறுதுணை மற்றும் கவலை இரண்டுமே அந்த ரகு தான்.
ரகுவை அந்த அலுவலகத்தில் சிலர் பிளே பாய் என்று சொல்லி கேட்டிருக்கிறாள். ஆனால் அவன் பெண்களிடம் வழிந்து பார்த்ததில்லை. ஆனால் அங்கு வேலை செய்யும் சில பெண்கள் எல்லாவற்றையும் குடுக்க தயாராக இருப்பது போல இருக்கு பேசுவதை பார்த்திருக்கிறாள்.
ரகு விளையாட்டு புத்தி உள்ளவன் என்பதை நன்கு அறிவாள். சிலமுறை அவனுடன் ஹோட்டலில் தங்கியதும் உண்டு. உடலுறவை தவிர வேறு எல்லாம் செய்துவிட்டார்கள்.
தான் அனாதை, எல்லாம் கொடுத்தால் ஒருவேளை தன்னை கழட்டி விட்டுவிட்டு போய் விடுவான் என்ற எண்ணம் அவளிடம் இல்லாமல் இல்லை. இருந்தாலும் அந்த வயதிற்கு வரும் ஆசை, அவளும் காதலிக்கிறாள்.
குட் மார்னிங் டியர் என்று சொல்லிய தன் காதலன் ரகுவை இடது புறம் திரும்பி நிமிர்ந்து பார்த்து புன்னகை புரிந்தாள்.
ஒரு முக்கியமான விஷயம், என்கூட வா என்று சொல்லி அவள் கையை பிடித்தான்.
அவளும் கையை தட்டி விடாமல் அவன் பின்னால் சென்றாள்.
ரகு நுழைந்தது அந்த நிறுவனத்தில் மேனேஜிங் டைரக்டர் அறை. அந்த எம்டி வேறு யாருமல்ல ரகுவின் அண்ணன் குமார் என்கிற ரவிக்குமார் தான்.
அண்ணா..
நிமிர்ந்து பார்த்தான் குமார்.
என்னடா எனக் கேட்டவன் தன் தம்பியின் அருகில் நிற்கும் சங்கீர்த்தனாவை கண்களால் மேய்ந்தான்.
குமாரின் அந்த பார்வை எப்போதும் போல அவளை அசௌகரியமாக உணர வைத்தது. அவள் தன் தலையை குனிந்து கொண்டாள்.
ரகு : அண்ணா, நானும் கீத்து(சங்கீர்த்தனா)வும் நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறோம்.
குமார், கீத்து இருவருக்கும் அதிர்ச்சி.
"வாட் " என்றான் குமார். கீத்து தன் கைகளை ரகுவிடமிருந்து விடுவிக்க முயற்சி செய்தாள்.
உனக்கு என்ன வசதி இல்லைன்னு இப்படி ஒரு அனாதையை கல்யாணம் பண்ணனும்னு நினைக்குற?
அனாதை என்ற வார்த்தையை கேட்ட கீத்துவின் மனம் வலித்தது. அவள் கண்களில் நீர் தேங்கியது. குமார் இப்படி அவள் மனதை காயப்படுத்துவது ஒன்றும் முதல் முறையல்ல..
ரகு : எதுக்கு நீ அவளை பார்த்து அப்படி பேசுற, நாம எல்லாரும் தான் அவளுக்கு சொந்தம்.
மண்ணாங்கட்டி.. நீ லவ் பண்ணுனா உடனே அவளுக்கு நாங்க சொந்தம் ஆகிடுவோமா..
ரகு : எதுக்கு இப்படி பேசுற..?
நீ எவள வேணும்னாலும் லவ் பண்ணு, ஆனா கல்யாணம் பண்ணுற பொண்ணுக்கு அந்தஸ்து இருக்கனும். இப்படி யாரும் இல்லாத. அனாதையாக இருக்க கூடாது..
கீத்து கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் அவள் கன்னங்களை தொட்டு, கீழே வழிந்து கொண்டிருந்தது. என்ன செய்ய முடியும்? எம்டியை திட்டவா முடியும்?
ரகு : நான் உனக்கு தகவல்தான் கொடுக்க வந்தேன், உன் அனுமதி கேட்க வரவில்லை என்று சொல்லி அந்த அறையை விட்டு வெளியேறினான்.
இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்குறேன் என கத்திக் கொண்டே, அந்த அறையை விட்டு வெளியேறிய இருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.
தன்னுடைய இருக்கைக்கு வந்த கீத்து அவளது டெஸ்க்கில் தலை கவிழ்ந்த படி மிச்ச மீதி கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
கீத்து தோள்களை தொட்டு, ரிலாக்ஸ் டியர் என்றான்.
ஏண்டா இப்படி பண்ற என கொஞ்சம் கோபமாக கேட்டாள்.
எதுவா இருந்தாலும் நான் காரணம் இல்லாமல் செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியும்.
ஆமா, அது என்னவோ உண்மை தான். ரகு எல்லா விஷயங்களையும் நன்கு யோசித்து முடிவுகளை எடுப்பவன். இருந்தாலும்..
உங்க அண்ணன் பேசுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..
நான் உன்கூட இருக்கும் போது என்னடி பயம் என்று ஆரம்பித்தான், அவள் மனது ரிலாக்ஸ் ஆகி ஓரளவுக்கு நார்மல் ஆகும் வரை அங்கேயே அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
நடந்த விஷயங்களை நினைக்க நினைக்க அவளுக்கு வேலையும் ஓடவில்லை. அதற்க்கு பிறகு வேறு எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் அந்த நாள் முடிந்தது....