Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
        லக்ஷ்மி ஆண்டி எங்களை அழைக்க, நாங்கள் உள்ளே சென்றோம். நான் எல்லோரையும் அறிமுகப்படுத்த, அவர் எங்களுக்கு காஃபி போட சென்றார். எப்போதும் லக்ஷ்மி ஆண்டியுடன் இருக்கும் குழந்தை சினுங்க அவனை அம்மா எடுத்து கொண்டார். குழந்தை அம்மாவுடன் நன்றாக ஒட்டி கொண்டான், அவர் அருகில் அக்கா அவள் குழந்தையை மடியில் வைத்திருக்க அவளை கண்டதும் அம்மாவுடைய மடியில் இருந்து துள்ளி குதித்தான். இரு குழந்தைகளுக்கும் ஒரே சந்தோசம் தான், குழந்தை இரண்டும் கைக்கோர்த்து கொண்டது. அதை அக்கா மற்றும் அத்தான் என்னிடம் கண்காட்டி கேலி செய்தனர்.

        அப்போது தான் எழுந்திருப்பாள் போல என் தேவதை குழந்தையுடன் வந்தாள். அவள் அறையின் எதிரே நான் இருக்க என்னை கண்ட ஆனந்த அதிர்ச்சி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. சுற்றி இருந்தவர்களை பார்த்துவிட்ட பின் அவள் முகத்தில் சந்தேகம் கண்டிப்பாக எழுந்திருக்கும், பெயருக்கு சிரித்து வைத்துவிட்டு கிச்சனுள்ளே சென்றுவிட்டாள். அவள் போகும் போது குழந்தை என்னிடம் வர கைகாட்ட, அதை கண்டு கொள்ளாமல் சென்றுவிட எனக்கு சங்கடமாகி போனது.

‘ஹ்ம், அம்மா இப்போதான் உன் மருமக எழுந்து வரா போல, சும்மா சொல்ல கூடாது மேக்கப் ஏதும் இல்லாமலே லட்சணமாத்தான் இருக்கா…’ என் அக்கா அம்மாவிடம் கிசுகிசுக்க
‘ஆமாம்…’ என அதை ஒட்டு கேட்ட அத்தானும் சேர்ந்து கொண்டார்
‘பொம்பளைங்க பேசுரத ஒட்டு கேக்குரீங்களா…’ என வயிற்றில் இடித்தாள்

        கிச்சனுள் அக்ஷரா சென்ற கொஞ்சநேரத்தில் லக்ஷ்மி ஆண்டி கையில் காஃபி தட்டுடன் வந்தார். அனைவரும் காஃபி குடித்தபடி பொதுவாக பேசினோம், ஆனால் எப்படி கல்யாண்பேச்சை தொடங்குவது என குழப்பம். காஃப் குடித்து கப்பை வைக்கும் சாக்கில் அப்பா தான் தொடங்கினார்,

‘நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல, என் பையனுக்கு உங்க பொண்ண கட்டி தர விருப்பமா?’ என போட்டு உடைத்தார், கொஞ்சநேரம் அதிர்ச்சியிலிருந்தார் லக்ஷ்மி ஆண்டி, பின்பு
‘என்ன கேக்குறீங்கனு யோசிச்சி தான் பேசுரீங்களா?’ என கேட்டார்
‘ஆமா… உங்களுக்கு அதுல விருப்பமா?’ என மீண்டும் கேட்டார்
‘உங்களுக்கு என் பொண்ண பத்தி ஏதும் தெரியாதுனு நெனைக்குறேன், கதிர் உண்மைய சொல்லிருக்கமாட்டான்…‘ என்க
‘அவன் எல்லாம் சொல்லிட்டான்…’
‘என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தையும் இருக்கு…’ என்றார்
‘டைவர்ஸும் ஆயிருச்சே…’ என்றார்
‘எல்லாம் தெரிஞ்சும்…’
‘இங்க பாருங்க சம்மந்தி அவனுக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சி போச்சி, உங்க பொண்ணோட பசங்கள எங்களுக்கு புடிச்சி போச்சி இங்க பாருங்க…’ என அம்மா தன் மடியில் இருக்கும் குழந்தையை காட்ட அது ஆனந்தமாய் விளையாடியது
‘என் பையன பத்தி என்ன நெனைக்குறீங்க?’ என கேட்க
‘நல்ல பையன், எனக்கும் என் பொண்ணுக்கும் நல்லா உதவியா இருப்பான், என் இன்னொரு பேர கொழந்த அவன தவிர வேர யார்ட்டயும் போகமாட்டுரான்…’
‘அப்போ குழந்தைங்க கூட அப்பாவா நெனைச்சிருச்சிங்கள்ல?’
‘ஆனா… அவனுக்கு வயசு இருக்கு, என் என் பொண்ண ரெண்டாதாரமா கட்டி…’ என அவர் இழுக்கும் போது
‘ஏதோ உங்க பொண்ணோட வாழ்கையில நடந்தது நடந்து போச்சி, எல்லா கஷ்ட்டத்துக்க அப்புறமும் ஒரு நல்ல நேரம் வரும் சம்மந்தி அது தான் இதுனு நெனைச்சிகோங்க…’
‘………..’
‘சம்மந்திக்கு தெய்வநம்பிக்கை இருக்கா?’ என்க
‘……ம்…’ என தலையாட்டினார்

        அதன் பின்பு அம்மா, அப்பா, அக்கா என ஒருவர் மாற்றி ஒருவர் ல்க்ஷ்மி ஆண்டியின் மனதை மாற்ற முயற்சித்து கொண்டிருந்தனர். ஆனால் எனது மனதோ அகஷரா என்ன நினைத்து கொண்டிருப்பாள் என்று தான் யோசித்து கொண்டிருந்தது. அவர்கள் பேச்சை நிறுத்தும் விதமாக கிச்சனுள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்க, பதரி அடித்து கொண்டு ஓடினேன். கண்களில் நீர் முட்ட தோளில் கிடத்தி தன் குழந்தையை சமாதான படுத்த முயற்சித்தாள் அக்ஷரா. உள்ளே சென்ற நான் குழந்தையை வாங்கி கொண்டேன், வாங்கும் பொழுது அவள் கண்களை பார்க்க அவளது கோபம், அன்பு, காதல், குழப்பம் எல்லாம் தெரிந்தது. அக்ஷரா-வை காட்டிலும் குழந்தை தான் முக்கியமாகபட, குழந்தையை தூக்கி கொண்டு வெளியில் நடந்தேன்.

        இது எல்லாவற்றையும் அனைவரும் பார்த்து கொண்டிருக்க, நான் பாட்டுக்கு குழந்தையுடன் பேசி சமாதான படுத்தினேன். வராண்டாவில் அங்கும் இங்கும் நடந்தேன், குழந்தையுடன் பேசினேன், அவனை கொஞ்சினேன் சற்று நேரத்தில் அழுகையை மறந்த அவன்  என் தோளிலே சாய்ந்து தூங்கினான். அங்கும் இங்கும் அழந்தவாறு வீட்டு வாசலை கடக்கும் போது அக்ஷரா அவள் அறைக்குள் புகுந்து கொண்டாள். அப்பா, அம்மா, அக்கா மற்றும் அக்காவின் கணவர் வெளியில் வந்து என்னை அழைந்த்து சென்றனர்.

‘என்னம்மா சொன்னாங்க?’ என குழந்தையை வருடி விட்டபடி கேட்க
‘யோசிக்குறேனு சொல்லிருக்காங்கடா…’
‘நீ ஒன்னும் கவலைப்படாத அந்த பொண்ணு உனக்கு தான், அவங்களுக்கு அந்த ப்பொண்ண விடவும் உன் மேல தான் அக்கறை…’
‘………….’
‘எப்டி உன்ன அந்த பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்குரதுனு தான் யோசிக்குராங்க…’ என்றாள் அக்கா
‘ஹ்ம்….’

        என் தோளில் தூங்கிய குழந்தை இப்போது அம்மாவின் மடியில் தூங்கி கொண்டிருக்க, எங்ககு பார்வதி ஆண்டியிடம் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் நான் அனைவரையும் அழைத்து கொண்டு கீழே சென்றேன்.

[Image: shwetakonnurmenon-20230723-0122.jpg]

‘ஹ்ம்… எப்டி இருக்க கதிர்…’
‘நான் நல்லா இருக்கேன் ஆண்டி..’
‘ஹ்ம் பார்த்தாலே தெரியுது…’ என அவள் கேலி செய்ய், நான் அவர்களை அறிமுகப்படுத்தினேன், பின்பு அவர் தொடர்ந்தார்
‘நான் பார்வதியோட ஃப்ரண்ட், எனக்கு அவங்கள வயசு கம்மி தான்…’
‘……’
‘அவங்க கொஞ்சம் INTROVERT அதனால தான் நான் அவங்களுக்கு பதிலா பேசுரேன் Please என்ன தப்பா நெனைக்காதீங்க…’ என்றாள்
‘ஹ்ம், புரியுது… நல்ல பேசிட்டு இருந்தவங்க திடீர்னு பொண்ணு கேட்டு வந்தா இப்டி தான் feel பண்ணுவாங்க, எங்களுக்கு புரியுது… இருந்தாலும் எங்க பையனோட வாழ்கை சம்மந்தபட்டதால நாங்க இத தாமப்படுத்த விரும்பல..’ என அம்மா சொன்னாள்
‘தேங்க்ஸ் அக்கா… அவங்களுக்கு கதிர பிடிக்காம இல்ல, infact இங்க எல்லாருக்கும் கதிர பிடிச்சிருக்கு. இருந்தாலும்….’
‘இருந்தாலும் என்னம்மா…’
‘இதே அவனுக்கு கல்யாணமாகி ரெண்டாந்தாரமா கேட்டிருந்தா கூட இவ்ளோ கஷ்ட்டமா இருந்திருக்காது, ஆனா….’
‘ஆனா என்னம்மா?, எங்க யாருக்கும் அதுல எந்த ப்ராப்ளமும் இல்லயே…’ என்றார்
‘இருந்தாலும்…’
‘ஹ்ம்… நீங்களும் தயங்குறீங்க….’
‘இல்ல, அவ மட்டும் தனியா இருந்திருந்தா கூட சிக்கல் இருந்திருக்காது ஆனா அவளுக்கு இப்போ ரெண்டு கொழந்தைங்க இருக்கு…. அதான் எங்க கலக்கமே…’ என்றாள்
‘ஏன்மா?, புள்ளைங்கள நாங்க பாத்துக்கமாட்டோம்னு பயப்படுறீங்களா?’ என அப்பா சட்டென கேட்டார்
‘…………’ அதற்கு பார்வதியிடமிருந்து பதில் இல்லை
‘கொழந்தைங்க எங்க கூட ரொம்பவே ஒட்டிட்டாங்க, இதுகப்றமுமா சந்தேகம்?’ என்றார்
‘இல்ல…’
‘நான் கேக்குரதுக்கு மட்டும் அவங்கள பதில் சொல்ல சொல்றீங்களா?’ என அம்மா கேட்டாள்
‘ஹ்ம்..’ என லக்ஷ்மியை அழைத்தாள்
‘உங்களூக்கு என் பையன பத்தி தப்பான அபிப்ராயம் ஏதும் உண்டா?’ என கேட்க
‘இல்லை…’ என தலையசைத்தாள்
‘உங்க பொண்ணையும், பேர புள்ளைங்களையும் அவன் பாத்துப்பான்னு நம்பிக்கை இருக்கா?’ என கேட்க
‘ஹ்ம்…’ என ஆமா என்பது போல் தலையசைத்தாள்
‘அப்போ உங்களுக்கு ஓகே…’
‘ஹ்ம்…’ என சொல்லும் போது அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர்
‘அக்ஷராவ கூப்பிடுரீங்களா?’ என சொல்ல
‘அக்ஷரா…’ என அழைத்தாள் பார்வதி, அவள் கூப்பிட்டும் வராததால் எழுந்து செல்ல முற்பட்டாள்,
‘அவரிடம் நான் போய் பார்கிறேன்….’ என சொல்ல, எங்கள் விஷயம் ஏற்கனவே தெரிந்த பார்வதி அறைகதவை திறந்துவிட்டாள், நான் உள்ளே சென்று தாளிட்டேன்.

தொடரும்…
[+] 6 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 19-02-2024, 10:11 PM



Users browsing this thread: 19 Guest(s)