♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(08-08-2023, 12:11 PM)Geneliarasigan Wrote: Episode -18

கருத்து தெரிவித்த
Mahesht75
Omprakash_71
Prrichat85
Bigil
அனைவருக்கும் நன்றி Namaskar

காலையில் ராஜா சஞ்சனா மொபைலுக்கு  ஃபோன் செய்ய, சங்கீதா ஃபோன் எடுத்தாள்.காரணம் சஞ்சனா ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஆபீஸில் ரங்கோலி போடுவதில் மும்முரமாக இருந்தாள்.அதனால் சஞ்சனாவின் நம்பர் சங்கீதாவிடம் இருந்தது.

என்ன இது hubby என்று save பண்ணி இருக்கு,என்று சங்கீதா போனை எடுக்க,..

ஹலோ சஞ்சனா,நான் ராஜா பேசறேன்.

யாரு ராஜாவா,நான் சங்கீதா பேசறேன்..

கொஞ்சம் சஞ்சனா கிட்ட ஃபோன் கொடு சங்கீதா,

சாரி ராஜா,சஞ்சனா உன் மேல செம கோபத்தில் இருக்கா,அவ உன்கிட்ட பேசவே கூடாது என்று என்கிட்ட போனை கொடுத்து,இதுக்கு மேல இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணவோ இல்லை நேரில் சந்திக்கவோ வேண்டாம் என்று சொல்ல சொன்னா.

ஏன் நான் என்ன பண்ணனேன் சங்கீதா?

நீ என்ன பண்ணல ராஜா,அவ பரிசு வாங்கும் போது எவ்வளவு ஆசையா உன்னை தேடினா தெரியுமா?நீ அப்படியே விட்டுட்டு போய்ட்டே.அவ ஜெயிச்சிட்டா என்ற காண்டு அவ மேல உனக்கு. அது தான் உன் மேல செம கோபமா இருக்கா என்று பேசிக்கொண்டே போனை துண்டித்து விட்டாள்.

ராஜா மீண்டும் ஃபோன் செய்ய,அழைப்பு எடுக்கப்படமாலே துண்டிக்கப்பட்டது.

"என்ன இவ,இந்த மாதிரி பண்ண மாட்டாளே"என்று ராஜா குழம்பினான்.

"என்னடா ஆச்சு" ராஜேஷ் ராஜாவிடம் கேட்க,

தெரியல ராஜேஷ்,சஞ்சனா என் மேல கோபமா இருக்கா என்று சங்கீதா சொல்றா.இதுக்கு மேல ஃபோன் பண்ணவோ , சந்திக்கவோ வேண்டாம் என்று சஞ்சனா சொன்னதா சொல்றா.

ராஜா ,இப்போ உன்கிட்ட சஞ்சனா பேசல,சங்கீதா தான் பேசி இருக்கா.எதுவாக இருந்தாலும் நேராக போய் பார்த்துக்கலாம்.இன்னிக்கு தான் உன் காதலை தெரியப்படுத்த வேண்டிய நாள்.வா உடனே கிளம்பு.

அது தான் சரி ராஜேஷ்.என் பைக் நேற்று ஆபீஸில் தான் இருக்கு.நீ கொஞ்சம் என்னை ஆபீஸில் விட்டு விடு.

விட்டு விடறதா,நான் நீங்க ரெண்டு பேர் ஒன்னு சேருவதை என் கண் கூடாக பார்த்திட்டு தான் போவேன்.அதுக்கு தான் இவ்வளவு நாள் காத்திட்டு இருக்கேன்.

சரி ராஜேஷ்,போகும் போது கோவிலுக்கு போய்ட்டு போவோம்.

சரி வா

ராஜா கோவிலில்,
    என் வாழ்வில் இதற்கு மேல் காதலும் வேண்டாம்,கல்யாணமும் வேண்டாம் என்று இருந்தேன்.சஞ்சனா என் வாழ்வில் வந்து பாலைவனமாக இருந்த மனதை சோலைவனமாக மாற்றினாள்.என்னை நம்பி வந்தவளிடம் முதல் முறையாக என் காதலை சொல்ல போகிறேன்.அவளை என் வாழ்வில் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முருகா என்று வேண்டி கொண்டான்.

ராஜாவும் ராஜேஷூம் ஆபீஸில் நுழையும் பொழுது,சஞ்சனா இன்னமும் ரங்கோலி வரைந்து கொண்டு இருந்தாள். கேரள நாட்டு ஸ்டைலில் அவள் புடவை அணிந்து இருந்தாள்.ராஜா அவளை பார்த்து கொண்டே  கையில் ரோஜா மற்றும் greetings card சகிதம் பக்கவாட்டில் வரும் பொழுது ஜார்ஜ் தன் இரு சகாக்கள் புடை சூழ சஞ்சனா நேர் எதிரே வந்தான்.ஜார்ஜ் கையிலும் ரோஜா மற்றும் greetings card.
அவன் சஞ்சனாவின் முன் ஒரு கால் மடித்து சஞ்சனாவிடம் லவ் புரோபோசல் செய்ய,ராஜாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

"வாவ் லவ்லி புரோப்பொசல்.வாங்கிக்கோ சஞ்சனா"என்று சங்கீதா கத்த,

சஞ்சனா புன்னகையோடு அவன் கொடுத்த ரோஜாவை வாங்க,

ராஜா காலுக்கு கீழே பூமியே பிளந்தது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வர,உடனே அங்கு இருந்து வேகமாக வெளியேறினான்.

ராஜேஷ் உடனே ஓடி போய் ராஜாவை நிறுத்தி,"இருடா.உன்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசி பழகி லவ் பண்ணிட்டு அவன் கொடுக்கிற ரோஜா பூவை வாங்குறா.அவளை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டுட்டு வரலாம்."

வேண்டாம் ராஜேஷ்,ஏமாற்றம் ஒன்னும் எனக்கு புதுசு இல்லயே. நான் தான் முதலிலேயே சொன்னேனே.option என்று ஒன்று வருகிற வரை தான் நான் better ஆக தெரிவேன்.option என்று வந்து விட்டால் நான் குப்பை மாறி  தூக்கி எறியப்படுவேன்.என்னோட வாழக்கை எப்பவுமே ஒரு மெழுகுவர்த்தி மாறி தான் ராஜேஷ்.என் தங்கை வாழ்வின் இருட்டுக்கு மட்டும் தான் ஒளி வீச படைக்கபட்டவன் நான்.ஆனால் கடைசி வரை நான் தனியா தான் உருகனும்.இந்த காதல் கல்யாணம் எல்லாம் என் வாழ்வில் வந்தால் இப்படி தான் நடக்கும்.சஞ்சனா சந்தோசமாக இருக்க வேண்டிய தருணம் இது.நாம எதுவும் தொந்தரவு பண்ண வேணாம்.வா போய் விடலாம்.

டேய் நீ சும்மா விட்டாலும், நான் சும்மா விட மாட்டேன்டா.என் நண்பனுக்கு ஒன்று என்றால் என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.போய் ரெண்டில் ஒன்று பார்த்திட்டு வரேன் இரு.

டேய் ராஜேஷ்,நம்ம நட்புக்கு நீ மரியாதை கொடுக்க விரும்பினால் நாம இங்கே இருக்க வேண்டாம். வா கிளம்பி போலாம்.எனக்கு நீங்க போதும்டா.நம்மளோட நட்பை எவன்டா பிரிக்க முடியும்.

ராஜா எனக்கு மனசு கேக்கலடா.

ராஜேஷ் எனக்கு ஒரு உதவி பண்ணுடா,

சொல்லுடா நான் என்ன செய்யனும்.

எனக்கு இப்போ ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.கொஞ்சம் வாங்கி கொடுக்கறீயா

டேய் நீயாடா ட்ரிங்க்ஸ் சாப்பிடணும் என்று சொல்றே.சுஜிதா உன்னை விட்டு பிரிந்த பொழுது கூட அவளை மறக்க நான் வற்புறுத்தி சாப்பிடு என்று கெஞ்சியபொழுது வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துட்ட.இப்ப மட்டும் கேக்கற.

தெரியல ராஜேஷ், ஆனா இப்போ மனசு ரொம்ப வலிக்குது.பிளீஸ் ராஜேஷ் எனக்கு வாங்கி கொடு.

சரிடா வா, முதலில் உன் ரூமுக்கு போகலாம்.

ராஜேஷ் உடனே வாசுவுக்கு ஃபோன் செய்தான்.

வாசு உன் மொபைலுக்கு 2000 ரூபா அனுப்பி இருக்கேன்.உடனே நீ சரக்கு வாங்கிட்டு ராஜா ரூமுக்கு வா.

என்னடா விசேஷம்?

போனில் சொல்ல முடியாது.நேரில் வா சொல்றேன்.

சரக்கு ஓசியில் கிடைக்கிறது என்றதுமே வாசு குஷி ஆகி விட்டான்.சரக்கு மற்றும் சைடிஷ் வாங்கி கொண்டு ராஜா ரூம் நோக்கி பறந்தான்.

ராஜா போகும் போது தான் வேண்டி கொண்ட கோவில் கோபுரத்தை பார்த்து,"காதலிக்க எனக்கு ஒரு யோகம் இல்லையே,ஆண்டவனே உனக்கும் அனுதாபம் இல்லையே"என்று கண்ணீரோடு கடந்து சென்றான்.

ரூமில் மூவரும் உட்கார்ந்து சரக்கு அடித்து கொண்டு போதையில் இருக்கும் பொழுது ராஜா மொபைல் ஒலித்தது.

ராஜா அதை பார்த்து  "டேய் சஞ்சனா எனக்கு ஃபோன் பண்றாடா"

வாசு ராஜா மொபைலை அவன் கையில் இருந்து பிடுங்க தவறுதலாக on ஆகி விட்டது.அது தெரியாமல் வாசு போதையில் "என்ன சொல்ல போறா அவ,ராஜா என்னை மன்னிச்சிடு.என்னை விட அழகான பொண்ணு உன் வாழ்வில் கிடைப்பா,என்னை மறந்து விடு என சொல்ல போறா"என்று சொல்லிவிட்டு மொபைலை தூக்கி எறிந்தான்.

அடுத்து ராஜேஷ் மொபைல் ஒலிக்க ,அவன் அதை கட் பண்ணுவதற்கு பதில் ஆன் செய்து விட்டான்.

அப்பொழுது ராஜா போதையில்  பேசியது எதிர்முனையில் இருந்த சஞ்சனாவிற்கு தெளிவாக கேட்டது.

"ராஜேஷ்,என்னோட வாழ்க்கைய பாரேன்.கடிகார முள் போல ஏன் ஓடுது,எதுக்கு ஓடுது என்றே தெரியல.சஞ்சனா எதுக்கு என் வாழ்வில் வந்தா,எதுக்கு விலகி போனா,எதுவுமே எனக்கு புரியல.வந்தா சந்தோசம் தந்தா,கொடுத்த சந்தோஷத்தை பறிச்சிட்டு போய்ட்டா".

அதற்கு வாசு,"மச்சான் நீ  வாங்கி கொடுக்கிற சரக்குக்காக நான் சொல்லல.நீ கவலைபடாதே மச்சான்.சஞ்சனா என்னடா சஞ்சனா அவளை விட நூறு மடங்கு இல்லை ஆயிரம் மடங்கு அழகு உள்ள பொண்ணை நான் லைனில் வந்து நிப்பாட்டறேன்.உனக்கு அதில் எது விருப்பமோ அதில் ஒண்ணை செலக்ட் பண்ணிக்க மச்சான்."
என்று  வாசு உளறியதை கேட்டு எதிர்முனையில் இருந்த
சஞ்சனா கேட்டு போனை வைத்து விட்டாள்‌.

சஞ்சனா ஏன் ஜார்ஜ் காதலை ஏற்றாள்.?ராஜாவின் காதல் என்ன ஆனது.?விறுவிறுப்பான அடுத்த பதிவுக்கு காத்து இருங்கள்.

             horseride  இடைவேளை horseride

[Image: images-52.jpg]
upload photo to forum

Sema intresting story
[+] 3 users Like Priya99's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Priya99 - 19-02-2024, 12:25 PM



Users browsing this thread: 30 Guest(s)