Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
        அன்று நான் அடைந்த இன்பங்களுக்கு அளவே கிடையாது. பலநாள் கழித்து அக்ஷராவோடு கூடியது ஒருபக்கம் என்றால், கூடலின் முடிவில் அவள் தன் காதலை கூறியது ஒருபக்கம். இரு சந்தோஷத்திலும் நான் திளைத்தேன், அதே நேரம் அடுத்தநாள் நான் ஊருக்கு போவதாக இருந்தது தான் கொஞ்சம் சோகம்.

[Image: 9f452281415817a7f084a8b6e6aa1752.jpg]

அடுத்தநாள்,

        பலநாள் கழித்து என் குடும்பத்தை பார்க்க சென்றேன், குடும்பத்தை பார்க்கும் சந்தோஷம் இருந்தாலும் ஒரு சோகமும் கூடவே ஒட்டி கொண்டிருந்தது. ஏதோ புதுமனைவியை விட்டு வெளிநாடு செல்லும் கணவனின் உணர்வு, ஆனால் இங்கு எங்களுக்கு இன்னும் திருமணம் நிகழவில்லை என்பது தான் வித்தியாசம் மற்றபடி உணர்வுகள் ஒன்று தான்.

        இரவு train-ல் ஏறியதும் தூங்கிவிட்டேன், அதிகாலையில் 3 மணிவாக்கில் எனது stop-ல் train நின்றது, அரக்கபரக்க எழுந்து இறங்குவதற்காக ஓடினேன். என் ஊருக்கு செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்தேன், what’s app பார்த்த போது அக்ஷரா-விடம் இருந்து மெசேஜ்கள் வந்திருப்பதை கண்டேன். அவள் அளித்த மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்யாததற்கு Sorry அனுப்பினேன். இரவு வெகுநேரம் எனக்காக காத்திருந்திருக்கிறாள், Last Seen 1:15 am காமித்தது. இப்போது நன்கு தூங்கி கொண்டிருப்பாள் என எண்ணி கொண்டே வெளியே பார்த்து கொண்டே சென்றேன்.

        வெளியில் இருட்டாக தான் இருந்தது, நான் எதை பார்க்கிறேன் என தெரியாமலே சென்று கொண்டிருந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த என் ஊருக்கு செல்ல அரை மணிநேரம் பிடித்தது. ஊர் எல்லைக்குள் நுழைய, வீட்டிற்கு வழி சொல்லி கொடுத்தேன். வீட்டில் இறங்கி கேட்டை திறந்து கொண்டு சென்று கதவை தட்டினேன். உள்ளே ஏதோ சத்தம் கேட்டது, கதவு மூடப்பட்டிருந்ததால் தெளிவாக எதுவும் கேட்க்கவில்லை
.
        அம்மா வந்து கதவை திறக்க, உள்ளே ஏதோ ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அப்போது தான் ஆரம்பித்திருப்பார்கள் போலும், வேள்வியின் ஒருபுறம் ஐயர் அமர்ந்திருக்க மற்றொருபுறம் அப்பா, அக்கா, அக்காவின் கணவர், அக்காவின் மடியில் எனது மருமகள் என்னை பார்த்து துள்ளி குதித்து கொண்டிருந்தாள்.

‘என்ன பூஜை நடக்குது?, ஏன் என் கிட்ட சொல்லல?’ என அம்மாவிடம் கேட்க
‘சீக்கிரம் ரெடியாகி வந்து பூஜைல உக்காரு…’ என அப்பா திரும்பாமலே சொன்னார்

        அதற்கு மேலும் என்னால் நிற்க முடியவில்லை, அம்மா என்னை அறைக்குள் தள்ளிவிட்டாள். நானும் சென்று குளித்துவிட்டு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டேன். அக்காவின் குழந்தை அவளிடமிருந்து என்னிடம் தாவி கொண்டது. பூஜை முடியும் முன் அவள் என் மடியில் தூங்கியிருந்தாள்.

        பூஜை முடிந்து அனைவரும் சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்று கொண்டோம்… அவர்களும் கிழம்பி சென்றனர், செல்லும் முன் அப்பாவிடமும் அம்மாவிடமும் ஏதோ சொல்லி கொண்டு செல்ல இருவரும் முகத்திலும் சின்ன வாட்டம் தெரிந்தது. அவர்கள் சென்றபின் அம்மாவிடம் நான் முதலில் கேட்ட அதே கேள்வியை கேட்க,

‘ஏன்னா அந்த சாமியார் நீ டைம்க்கு தானா வருவேனு சொன்னாரு…’ என்றார்
‘……..’ அவர் முன் நான் அமைதியானேன்
‘ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்க, களைப்பா இருப்ப போ…. போய் தூங்கு…’ என சொல்ல, நானும் என்னறைக்கு சென்றேன்

        அன்று முழுவதும் குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்தேண், அவள் தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரம் எல்லாம் என்னுடனே இருந்தாள். மதியம் குழந்தையை தூங்க வைத்துவிட்டு அக்கா டீவி பார்த்து கொண்டிருந்த அக்கா என்னிடம் வந்தாள். நான் ஷோஃபாவில் கால் நீட்டி படுத்திருக்க, அம்மாவோ தரையில் அமர்ந்து கால் நீட்டியபடி பூ கட்டி கொண்டிருந்தாள்.

‘ஹ்ம்… இன்னும் எத்தன நாள் தாண்டா இப்படியே இருப்ப, உனக்கு வயசாகுது அது தெரியுதா?’ என்றாள்
‘எல்லாருக்கும் தான் வயசாகும், இதுல என்ன இருக்கு?’ என்றேன்
‘இந்த வியாக்கியாணத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல, நான் என்ன சொல்ல வரேனு உனக்கு தெரியாத மாதிரி நடிக்காத…’ என்றாள்
‘……….’ நான் அமைதியானேன்
‘இன்னும் பழசயே நெனைச்சிட்டுருக்கியா?’ என்றாள்
‘………’
‘பழச நெனைச்சி ஒன்னும் ஆகப்போறதில்லடா, உன் வாழ்க்கையில இருந்த அந்த பொண்ணு இப்போ இன்னொருத்தனோட மனைவி…’
‘அது யாரால?’
‘அது எங்க தப்பு தான், அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு எல்லாரும் நொந்துகிட்டுருக்கோம்…’
‘…………….’
‘நடந்தது நடந்திருச்சி, ப்ளீஸ் நீ கல்யாணம் பண்ணிக்கோ…’ என்றாள்
‘…………….’

        எனக்கு அவள் அப்படி போச பேச கோபம் தான் அதிகமானது, ஆனால் குடும்பத்திடம் கோபத்தை காட்டிவிட்டு என்னவாக போகிறது என அமைதியாய் இருந்தேன். நடந்த அத்தனையும் ஆறாத ரணம், அதை அனைத்தையும் மறக்கடித்தவள் அக்ஷரா அவளை பற்றி எப்படி சொல்லுவது. அவள் ஏற்கனவே மணமுறிவடைந்தவள் என தெரிய வந்தாள் என்னவென நினைப்பார்கள் என்ற நினைப்பே இன்னும் கஷ்ட்டமாக இருந்தது.

‘யாரயாச்சும் பிடிச்சிருந்தா சொல்லுடா…’ என அவள் என்னருகில் வந்தமர்ந்து கேட்டாள்
‘…………’ என்னுள் அக்ஷரா-வை பற்றி சொல்லலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் வேறு, ஆனால் என்றைக்காய் இருந்தாலும் சொல்லி தான் ஆக வேண்டும் என சொல்லிவிட்டேன்
‘சொல்லுடா?‘ என கேட்க
‘ஆமா, அவ பேரு அக்ஷரா…’ என தொடங்கி அவளை பற்றி அத்தனையையும் சொல்லிவிட்டேன்
‘………….‘ அம்மாவுக்கும் அக்காவுக்கும் கொஞ்சம் வருத்தம், நான் சொல்லி கொண்டிருக்கும் போதே நடுவில் அப்பாவும் வந்து அமர்ந்து கொண்டிருந்தார், சற்று அமைதிக்கு பின்
‘ஹ்ம்… எல்லாம் நமக்கு தெரிஞ்சது தான இதுல என்ன ஆச்சர்யம் வேண்டி கிடக்கு,..’ என்றார், அவர் அப்படி சொன்ன போது எனக்கு அதிர்ச்சி
‘எல்லாம் அந்த சாமியார் தான் சொன்னாரு, நீ இங்க வருவேனும், உன் வாழ்கையில இருக்குர அந்த பொண்ணு தான் சரின்னும் சொன்னாரு… ஆனா….’
‘…..ஆனா…. என்ன?’
‘அந்த பொண்ணுக்கு உன்ன ரெண்டாந்தாரமா கட்டி கொடுக்கனுமாங்குரது தான் யோசனை….’ என சொல்ல, நான் எழுந்து சென்ற என் கைகளை பிடித்து கொண்டார்
‘நாங்க பண்ண தப்பால உன் வாழ்க்கை ரொம்ப சூன்யமாயிருச்சினு தெரியும், ஆனா இந்தமுறை அந்த தப்ப நாங்க பண்ண விரும்பல…’ என்றார்
‘அப்பா…’
‘அந்த பொண்ணையே உனக்கு பேசிரலாம்…’ என்க
‘தேங்க்ஸ்ப்பா…’ என கட்டி கொண்டேன், எனது கண்களில் இருந்து தானாக கண்ணீர் அரும்பியது
‘ஹ்ம்… கடைசில என் மகன் என் கிட்ட பேசிட்டான்…’ என அவரும் என்னை தழுவி கொண்டார்
‘என்ன மாப்ளை இப்போ தான்யா நீ கலையா இருக்க…’ என்றார் அக்காவின் கணவர்
‘என் தம்பி எப்பயும் அழகன் தான், நீங்க சும்மா கண்ணு வைக்காதீங்க…’ என அக்கா எனக்கு சப்போர்ட்க்கு வந்தாள்
‘அப்போ நாம சென்னை போவோமா? கையோட பேசி முடிச்சிரலாம்…’ என்க
‘சரிங்க…’ என்றார் அம்மா
‘அப்பா… அது…’
‘இன்னும் என்னப்பா?’ என்றார்
‘இந்த  விஷயம் அவங்க அம்மாக்கு தெரியாது, அவங்களுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்களோனு ஒரே கலக்கமா இருக்கு…’ என்றேன்
‘அத நாங்க பாத்துக்குறோம், நீ கவலைப்படாத…’ என்றார்
‘மருமொவன…’
‘சொல்லுங்க மாமா…’
‘உன் சென்னையில இருக்க உன் சித்தப்பாவுக்கு ஃபோன போடு…’
‘சரி மாமா…‘ என அவரும் அப்பாவும் வெளியில் சென்றனர்

        இரண்டு நாள்கள் எனக்கு வீட்டில் ராஜ மரியாதை தான், அதன் பின் அனைவரும் சென்னை கிளம்பினோம். மூன்று நாள்கள் நானும் அக்ஷராவும் இரவில் பேசிக்கொண்டோம், இருப்பினும் நான் வீட்டில் விஷயத்தை கூறியதை சொல்லவில்லை.

        அது ஒரு ஞாயிற்று கிழமை, நாங்கள் ஒன்றாக போய் சென்னையில் இறங்கினோம். நேராக நான் தங்கியிருக்கும் அக்ஷரா வீட்டிற்கு அனைவரையும் கூட்டி சென்றேன். வீட்டின் பெயர் பலகையை அப்பா படித்தார் “அக்ஷரா இல்லம்”, அனைவரையும் மேலே கூட்டி சென்றேன். எல்லோரும் ஃப்ரஷாகி நல்ல நேரத்திற்காக காத்திருந்தோம்.

‘சரி, நல்ல நேரம் ஆரம்பிச்சிருச்சி வாங்க போலாம்…’ என அப்பா சொல்ல, கீழே லக்ஷ்மி ஆண்டியின் வீட்டை தட்டினோம். ஆண்டி தான் கதவை திறந்தார்.


தொடரும்….
[+] 5 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 18-02-2024, 06:07 PM



Users browsing this thread: 6 Guest(s)