10-02-2024, 10:59 AM
அடுத்த பதினைந்து நிமிடத்தில் கையில் தனது laptop மற்றும் இன்னொரு கையில் குழந்தையுடன் வந்தாள். சற்றுநேரத்திற்கு முன்னால் சாதாரண உடையில் இருந்தவள் இப்போது ஆடையை மாற்றியிருந்தாள், அந்த நீலநிற சல்வாரில் தேவதையை தோற்கடித்திருந்தாள் என்னவள். அவள் உள்ளே நுழையவும் நான் எழுந்து சென்று குழந்தையை வாங்கி கொண்டேன்.
‘என்னாச்சி?, கொழந்தைய தூக்கிட்டு வந்திருக்க?’ என கேட்க்க
‘அத ஏன் கேக்குர, நான் உள்ள போகும் போது ஒரே அழுக… அம்மா வேர நல்லா தூங்கிட்டாங்க, பாவம் அவங்களும் செம Tierd-டா தூங்குராங்களேனு தூக்கிட்டு வந்துட்டேன். ஏன்? உனக்கு ஏதும் பிரச்சனையா?’
‘இல்ல… என் செல்லம் என் கூட இருக்குரது சந்தோஷம் தான்…’ என முத்தமிட்டேன்
‘உனக்குடா?’ என அவன் கண்ணங்களில் முத்தம் வைக்க அவனும் பதில் முத்தம் கொடுத்தான்
‘ஹ்ம்… சரிடா கண்ணா?, இப்ப என் செல்லம் சமத்தா தூங்குவியாம், அப்றமா தூங்கி எழுந்ததும் நான் உன் கூட வெளையாடுவனாம், என்ன சரியா?’
‘ஹ்ம்…ஆ…’ என தோளில் சாய்ந்து கொண்டான்
நான் அவனிடம் பேசி கொண்டிருந்ததை பார்த்து அவள் சிரித்து ரசித்து கொண்டிருந்தாள். நானும் அவளை பார்த்து கண்ணடித்து சின்ன முத்தத்தை பறக்க விட, அவளும் பதில் முத்தம் பறக்கவிட்டாள். முதுகினில் சற்று தட்டி கொடுக்க குழந்தை தூங்கிவிட்டது, மெத்தையில் அவனை கிடத்தினேன். அவன் cute-டாக தூங்கி கொண்டிருக்க அதையே பார்த்து கொண்டிருந்தேன், எனக்கு என் அக்கா குழந்தையின் நினைவு வந்தது.
‘என்னாச்சி கதிர்…’ என பின்னிருந்து கட்டி கொண்டாள்
‘அக்கா குழந்தை ஞாயாபகம் வந்திருச்சி…’ என்றேன்
‘நாங்க இல்லாதப்போ நீயும் ஊருக்கு போயிருக்கலாம்ல…’ என்றாள் கரிசனையுடன்
‘போயிருக்கனும் தான்….’ என்றேன்
‘சரி நான் போய் Tatkal-ல ticket போடுறேன், நீ ஊருக்கு கெளம்பு…’ என திரும்பினாள்
‘………’ அவள் கை பிடித்து இழுத்தேன்
‘என்ன கதிர்?’
‘நீயும் வா….’
‘நான் எதுக்கு?’
‘என்னைக்கா இருந்தாலும் நீ அங்க வந்து தான ஆகனும்?’
‘என்ன பேசுர?’
‘நடிக்காத அக்ஷரா, இன்னும் உனக்கு என் மேல ஃபீல் இல்லனு சொல்ல போரியா?’ என கேட்க
‘…..’ அமைதியாக இருந்தாள்
‘எங்க ஊரு நல்லா இருக்கும், உன் மனசுல இருக்க கவலைக்கெல்லாம் அது கண்டிப்பா மருந்தா இருக்கும்…’ என்றேன்
‘…………’ அவள் உள்ளங்கையில் பிடித்து கொண்டு மிருதுவாக தடவி கொடுத்தேன், அவள் மனதில் இன்னும் ஏதோ தடை இருப்பதை அறிவேன். இவள் மட்டும் என் வீட்டிற்கு வந்தால் கண்டிப்பாக அந்த தடையையும் உடைந்து போகும் என நம்பிக்கை இருந்தது.
‘சொல்லு அக்ஷரா?’
‘ஹ்ம்…’
‘உனக்கு ஓகேயா?’
‘ஹ்ம்… ஆனா இப்போ இல்ல அப்றமா…’
‘அப்போ சரி, அதுவரைக்கும் நானும் போகல…’
‘ப்ளீஸ், நீ ஊருக்கு போயிட்டு வா கதிர்… வீட்டுல இருக்கவங்கள பாக்காம உன் மனசுல இருக்க கலக்கம் உன் கண்ணுல தெரியது…’
‘……….‘
‘என் செல்லம்ல…’ என கட்டி கொண்டாள்
‘…..’ நான் அமைதியாக இருக்க அவளே Ticket Book செய்தாள்
‘ஹ்ம்… நாளைக்கு Evening உனக்கு train…’ என்றாள்
‘ஹ்ம்…’
‘இப்ப என்ன கொஞ்சம் கவனியேன்….’
‘என்ன கவனிக்கனும்?’ என கேட்க
‘ஆமா உனக்கு ஒன்னுமே தெரியாது பாரு…’ என என்னுதட்டை கவ்வி கொண்டாள்…
தொடரும்…