09-02-2024, 01:28 PM
(09-02-2024, 02:33 AM)Geneliarasigan Wrote: அன்பே சிவம் என்ற தரமான படத்தை இயக்கிய சுந்தர்.C அவர்களுக்கு வரவேற்போ,இல்லை பாராட்டோ கொஞ்சமும் கிடைக்கவில்லை.அதற்கு பிறகு மிகவும் தாமதமாக தான் அந்த படத்தை ஆகா...ஓஹோ என்று பாராட்டினார்கள்..பிறகு ஒரு நிருபர் மீண்டும் அது போன்ற ஒரு படத்தை எப்பொழுது இயக்குவீர்கள் என்று சுந்தர் c அவர்களிடம் கேட்டார்.அதற்கு அவர் ,கண்டிப்பாக அது போன்ற ஒரு படத்தை இயக்க மாட்டேன் என்று கூறினார்.மேலும் அந்த படத்தால் நான் கொடுத்த விலை மிகப்பெரியது,ஒரு வருடம் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் வெட்டியாக பொழுதை கழிக்க வேண்டியதாகி விட்டது என்றும் சொன்னார்.ஏறக்குறைய அவர் சினிமா வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும் என்று சொன்னார்.நானும் அதனால்தான் கதை எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் செய்தது தவறே. சிலருக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும், சிலருக்கு போராடினால் மட்டுமே வெற்றி. வெற்றி என்பது நம் கையில் இல்லை. முயற்சி மட்டுமே நம் கையில் உள்ளது. நான் செய்த தவறை நீங்களும் செய்யாதிற்கள். உங்களுக்கு எழுத தோணும் போது எழுதுங்கள். ஆதரவு தரும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருகிறோம்.
அதே நிலை தான் இங்கே எனக்கும்.அதற்காக அவர் படைப்புகளுக்கு இணையான தரம் என் கதைகள் என்று கூறவில்லை.
கஷ்டபட்டு யோசித்து ஒரு பாகம் எழுத 5 முதல் 6 மணி நேரம் செலவு செய்து ரெகுலராக பதிவு போட்டாலும் என் கதைகளுக்கு நான் எதிர்பார்க்கும் வரவேற்பு இல்லை.ஒரு நாளைக்கு 1000 views பெற மிகவும் போராட வேண்டி உள்ளது.
நான் எப்பொழுதோ கதை எழுதுவதை நிறுத்தி இருக்க வேண்டியது.ஆனால் என்னை தொடர்ந்து எழுத வைத்து கொண்டு இருப்பது @krishkj @arun_zuneh,@rameshsurya84 @siva.s @omprakash_71 போன்ற ஒரு சில நண்பர்களின் comment கள் மட்டுமே..தவறாக எழுதினால் கூட விமர்சனங்களை தாராளமாக முன் வையுங்கள்.அவை தான் படைப்புகளை அழகாக்கும்.அவ்வகையில் krishkj அவர்கள் நான் கதையில் பிழை செய்தாலும் விமர்சிக்க தவறியது இல்லை.அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.சில நண்பர்கள் pvt message இல் கருத்து தெரிவிக்கிறார்கள்.அவர்களும் இங்கே comment பதிவிட்டால் கொஞ்சம் என் கதையும் மேலே வரும்.அதன் மூலம் இன்னும் சில வாசகர்கள் படித்து comment போட கூடும்