07-02-2024, 12:36 AM
பகுதி - 19
நான் தண்ணீர் குடித்துவிட்டு அவளை எழுப்பினேன், எழுந்திருக்கவில்லை. அவளை திருப்பிபார்த்தேன். அதிர்ந்துபோனேன். அங்கேயிருந்தது என் மனைவி செல்வி அல்ல, அங்கே காணாமற்போன என் நண்பன் புருஜித்தின் முகத்தை கண்டேன். என்னால் நம்பவேமுடியவில்லை, கண்களை கசக்கிபார்த்தாலும் அவனேயிருந்தான். ஆனால் மூர்ச்சையாக. குழப்பங்களின் உச்சத்திற்கே சென்றேன். எவ்வளவு அசைத்தாலும் எழுந்திருக்கவில்லை. கீழே ஓடிச்சென்று நீர் தெளித்து எழுப்பினாலும் எழுந்திருக்கவில்லை. மூக்கின் கீழ் விரல் வைத்துபார்த்தேன் மூச்சில்லை. பதற்றமும் பயமும் அதிகரித்தது. இங்கே எப்படி இவன் வந்தான் ஏன் வந்தான் இப்படி என் மனைவி வேடத்தில் ஏன் வந்தான் என்றெல்லாம் கேள்விகள் ஓடின. உடனே என் மனைவி எண்ணை அழைத்து பார்த்தேன், இந்த அறையிலிருந்து தான் ஒலித்துது, என் மனைவியின் கைப்பைக்குள்ளிருந்துதான் ஒலித்தது. புருஜித்தின் இடக்கை மணிக்கட்டை பிடித்து நாடி பார்த்தேன் நாடி இல்லை. இது போன்ற சமயங்களில் பதறாமல் இதய நுரையயீரல் புத்துயிர் முறை செய்தேன். 20 நிமிடங்களாக செய்தாலும் மூர்ச்சை தெளிவது போல் தெரியவில்லை. நேரமாக ஆக என் கைகள் பதறின. உடல் நடுங்கியது. அவன் இப்போது உண்மையிலேயே இறந்துவிட்டான். கட்டிலிலிருந்து கீழே இறங்கினேன். தரையில் அமர்ந்து ஆசுவாசபடுத்திகொண்டு சிந்தித்தேன். மிகவும் இக்கட்டான சூழலில் மாட்டியிருக்கிறோம். சிந்தனை அலைகள் பண்மடங்கு கூடிற்று. யோசிக்காமலேயே அடுத்தடுத்த நடவடிக்கைகள் எனக்குள் தோன்றின. செல்வியின் அலைபேசியை எடுத்துபார்த்தேன். அழைப்புபதிவில் தேவிதான் இன்று பேசியுள்ளாள் என்பதால் தேவியையும் என்னையும் தவிர்த்து செல்வி வரும் விஷயம் யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் இது செல்வியே அல்ல என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். புருஜித் தான் ஏதோ ஏடாகூடமாக என்னைபோல் இப்படி ஒரு கும்பலில் மாட்டி இப்படி ஆகிருக்கிறான் என புரிந்தது. மேலும் பல வருடங்களாக காணாணற்போயிருந்த காரணத்தால் புருஜித் இறந்து போயிருப்பான் என எண்ணி அவனின் பெய்றோர் அவனுக்கு திவசம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆகையால் அடுத்த நடவடிக்கைக்கு தயாரானேன். உடலில் கட்டைதன்மை வருவதற்குள் புருஜித் உடலிலிருந்து பெண் உடைகளை களைந்தேன்.
என்னுடைய பழைய ஆண் உடைகளை அவன் உடலுக்கு மாட்டிவிட்டு அவன் உடலை தூக்கி கொண்டு கீழே சென்றேன். தோட்டக்காரனும் ஓட்டுனனும் முன்னதாகவே கிளம்பி வீடுசென்றுவிட்டனர் ஆகையால் இந்நிகழ்வுகளை காண யாருமில்லை. என் காரின் பின்னிடத்தில் அவன் உடலை எடுத்து போட்டு பூட்டினேன். மேலே என் அறைக்கு சென்று ஒரு பெட்டியில் என் ஆடைகள் சிலவற்றை கட்டிகொண்டு சிறிது பணம் எடுத்துகொண்டு வீட்டை பூட்டி காரில் கிளம்பினேன். கொட்டிதீர்க்கும் கணமழையையும் பொருட்படுத்தாமல் நேராக வண்டியை ஓட்டி நகரத்தை தாண்டினேன். என்னுடைய மலை தோட்டத்திற்கு நேராக சென்றேன். 10 மணி நேர பயணம், வழியில் காவலர்கள் இருந்தாலும் நான் குடியின் பிடியில் இல்லாததால் என்னை முழுமையாக சோதனை செய்யவில்லை. காலை 10 மணியளவில் என் தோட்ட வீட்டிற்கு சென்றேன். பணியாளர்கள் என்னை அதிர்ச்சியுடன் பார்த்தனர். தோட்ட நிர்வாகி அவசர அவசரமாக ஓடி வந்து என்னை வரவேற்றான். "வணக்கம் Sir திடீர்னு சொல்லாம கொல்லாம வண்டீங்களே, நீங்க வர்றது முன்னாடியே தெரிஞ்சிருந்ததுனா எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிருப்பேன்". "ஏன் நா இல்லாதப்போ இங்க எதுனா கோல்மால் பண்ணிண்டு இருப்பீங்களோ நா வந்ததால எதுனா கெட்டுபோய்டுச்சா?" என கேட்டுபார்த்தேன். "அப்படியெல்லாம் ஒன்னுமில்ல Sir உங்களுக்கு Joke timingஏ வேறதான் போங்க" என அசடு வழிந்தான். சகிக்காத அவன் அசட்டை சட்டை செய்யாமல் "சின்ன Retreat காக வந்திருக்கேன், இன்னிக்கி யாரும் என்ன disturb பண்ணவேணாம், எது வேணும்னாலும் நானே கேட்குறேன்" என கூறினேன். அவன் "Sir Madam வர்லீங்களா நீங்க மட்டும் வந்திருக்கீங்க" என கேட்டான். "அவளுக்கு கொஞ்சம் மேல வேல அதிகம் அதுனால அவ வரல இப்போ இதெல்லாம் தேவையா என்ன கொஞ்சம் rest எடுக்க விடுங்க" என சொல்லிவிட்டு காரை அறைக்குள் வைத்து பையை மட்டும் எடுத்துகொண்டு அறையை பூட்டிவிட்டு வீட்டினுள் நுளைந்து கதவை பூட்டினேன்.
இது எனக்கு புதுமையான அனுபவமன்று என்பதால் சந்தேகம் வரக்கூடாது என்பதால் ஜன்னல் கண்ணாடிகளை மூடாமல் என் அறைக்கு சென்று மெத்தையில் அமர்ந்தேன். வீடிருந்த அலங்கோலத்தையெல்லாம் பொருட்படுத்தும் நோக்கில் இல்லை. அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அசதியில் நன்றாக தூங்கினேன்.