04-02-2024, 11:15 PM
(This post was last modified: 18-02-2024, 01:01 AM by YoungAdonis. Edited 2 times in total. Edited 2 times in total.)
[b]திருமகனும் திருமதிகளும்[/b]
அஜய் சென்னை ஏர்போர்ட் இல் இருந்து தனது அபார்ட்மெண்ட்க்கு டாக்ஸியில் சென்று கொண்டு இருந்தான். விடிகாலை வேளை என்பதால் டிரைவர் FM-ல் ஏதோ பாட்டு போட்டு கொண்டு இருக்க, அவன் வேடிக்கை பார்த்தவாறே வந்தான்.
கல்லூரி முடித்த கையோடு கேம்பஸ் இன்டெர்வியூவில் சாப்ட்வேர் வேலை கிடைத்துவிட, அவன் அண்ணனின் யோசனைப்படி முதல் வருடமே அபார்ட்மெண்ட் ஒன்றில் 3 BHK பிளாட் வாங்கி விட்டான். அதற்கு பிறகு, உடனே onsite செல்ல வாய்ப்பு வந்ததும் வாடகைக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டான்.
சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக 5 வருடம் கலிபோர்னியா வேலை பார்த்துவிட்டு, தற்போது திரும்பி வருகிறான். வாடகைக்கு இருந்தவர்கள், சென்ற மாதமே காலி செய்து விட்டனர்.
டாக்ஸி அந்த அபார்ட்மெண்ட் நெருங்கியது. 12 மாடி கொண்ட அபார்ட்மெண்ட், ஒரு பிலோர்-ல் 5 வீடுகள். அது அனைத்து நவீன வசதிகள் கொண்ட Luxury அபார்ட்மெண்ட். தேவையானது எல்லாம் புதிதாக வாங்கிக் கொள்ளலாம் என்று யோசித்து இருந்ததால் சில பொருட்களோடு மட்டுமே வந்தான். செக்யூரிட்டியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு டாக்ஸி க்கு பணத்தை கட்டிவிட்டு நேராக 12-வது மாடியில் இருக்கும் தனது பிளாட்-இற்கு சென்றான். இன்னும் முழுதாக விடியவில்லை, அதனால் வீட்டில் இருந்த ஒற்றை சோபா-வில் படுத்து பயணக் களைப்பு போக உறங்க ஆரம்பித்தான்.