Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
`நான் கொல்லப்பட்டால் இதைக் கூற வேண்டும் என்றார்!' - தீவைத்து எரிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியின் மகன் கதறல்

திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் அதிகாரியை ஆண் போலீஸ் நடு ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெண் போலீஸ் அதிகாரியின் தாய் மற்றும் மகன் ஆகியோர் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
[Image: IMG_20190615_193327_14123.jpg]
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்து வந்தவர் சௌமியா. இவரை ஆலுவா டிராஃபிக் காவலர் அஜாஸ் என்பவர் நேற்று மாலை காரால் இடித்து, அரிவாளால் வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார். சௌமியா உயிர் தப்புவதற்காக அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் புக முயன்றபோதும் விடாமல் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் அஜாஸ். அதிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்த அஜாஸ், ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டுவந்து இந்தக் கொலை பாதகத்தைச் செய்துள்ளார். மேலும், அஜாஸும் தம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அஜாஸ் 50 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதனால் அவரிடம் வாக்குமூலம் பெறமுடியாத நிலை ஏறட்டுள்ளது.


[Image: Edit_15554.jpg]
இந்த நிலையில் மூன்று குழந்தைகளின் தாயான சௌமியாவை அஜாஸ் திருமணம் செய்ய முயன்றதாகவும்.
அதற்கு மறுத்ததால் இந்தக் கொலையை அவர் செய்துள்ளதாகவும் சௌமியாவின் தாய் இந்திரா கூறியுள்ளார். திருச்சூர் போலீஸ் பட்டாலியனில் பயிற்சியில் இருக்கும்போதே சௌமியாவுக்கும் அஜாஸுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. ஆறு ஆண்டுகளாக இந்த நட்பு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் அஜாஸிடமிருந்து சௌமியா 1.25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனைத் திருப்பிக்கொடுத்த பிறகும் அஜாஸ் வாங்கவில்லை. எனவே, அவரது வங்கிக்கணக்கில் பணத்தைப் போட்டுள்ளார் சௌமியா. அந்தப் பணத்தை சௌமியாவின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டுள்ளார் அஜாஸ். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள அஜாஸின் வீட்டுக்குத் தாய் இந்திராவுடன் சென்ற சௌமியா பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். பணம் வேண்டாம் என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் அஜாஸ் வற்புறுத்தியதாக சௌமியாவின் தாய் இந்திரா தெரிவித்தார்.

[Image: image_(12)_14243.jpg]
சௌமியாவுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடைசி மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது. 12 வயதான மூத்த மகன் ருஷிகேஷ் போலீஸிடம் கூறும்போது, "அஜாஸிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக அம்மா சொன்னார். என்மீது தாக்குதல் நடந்தாலோ, நான் கொல்லப்பட்டாலோ இதைப் போலீஸில் கூற வேண்டும் என அம்மா சொல்லியிருந்தார்" என்றார். கடந்த ஒரு வருடமாக சௌமியாவுக்கும் அஜாஸுக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. அஜாஸின் உடல்நிலை சரியானால்தான் நடந்தது குறித்த முழுவிவரமும் தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-06-2019, 10:24 AM



Users browsing this thread: 94 Guest(s)