Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண்
புதுடில்லி: திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பர் மீது ஆசிட் வீசிய பெண் டில்லியில் கைது செய்யப்பட்டார். இது வரை ஆண்கள் தான் ஆசிட் வீசுவார்கள் என்ற நிலையை இந்த பெண் மாற்றி குற்றச்செயல் புரிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



[Image: Tamil_News_large_2299723.jpg]




டில்லி விகாஸ்புரியை சேர்ந்த 19 வயது பெண். 24 வயது ஆண் நண்பருடன் 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் உறவை முறித்து கொள்ள ஆண் நண்பர் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் அதனை ஏற்கவில்லை. திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆண் நண்பரோ மறுத்து விட்டார். இதனால் வழக்கம் போல் ஆண் நண்பருடன் அந்த பெண் பைக்கில் பின்னால் அமர்ந்தபடி சென்றார். இந்நேரத்தில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அவரது முகத்தில் ஊற்றினார். இதில் நிலைதடுமாறிய அவர் பைக்குடன் கீழே விழுந்தார்.


[Image: gallerye_08354836_2299723.jpg]





இதில் ஆசிட் யார் ஊற்றியது என்பது தெரியாத நிலையில் இருவரும் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரித்தனர். அந்த பாதையில் உள்ள காமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் முறையான குற்றச்செயலில் ஈடுபடும் படியான காட்சி கிடைக்கவில்லை.




ஹெல்மெட்டை கழற்றுங்க

இதனை தொடர்ந்து போலீசார் இருவரிடமும் துருவி, துருவி விசாரிக்கையில், அந்த ஆண் நண்பர் போலீசாரிடம் ; " நாங்கள் பயணித்து கொண்டிருக்கும் போது, பெண் நண்பர் ஹெ ல்மெட்டை கழற்றும் படி கூறினார். நெருங்கி அமர இடையூறாக இருப்பதாக கூறினார். இந்நேரத்தில் ஆசிட் என் மீது பட்டது என்றார். இதனை தொடர்ந்து போலீசாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர் விசாரணையில் பெண் ஆசிட் ஊற்றியதை ஒத்து கொண்டார்.போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-06-2019, 10:22 AM



Users browsing this thread: 101 Guest(s)