03-02-2024, 12:15 AM
வெயிட்டர் சென்ற பின்னர் நானும் அண்ணனும் அவளை சமாதானப் படுத்தினோம்..
அவள் தலையை நிமிர்த்தி,
"ஒண்ணுமில்ல.. ஐ ஆம் ஓகே.." என்றாள்..
"சரி.. எடுத்து சாப்பிடுங்க.."
"ஹ்ம்ம்.."
என்றவாறு அவள் ஃப்ரெஞ்ச் ப்ரெய்ஸ்சினை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.. நாங்களும் சாப்பிட ஆரம்பித்தோம்..
சிறிது நேர அமைதிக்கு பின்னர் நான் கேட்டேன்..
"அப்புறம் என்னாச்சி..?"
"அப்புறம் என்ன...? எங்கிருந்தாலும் வாழ்க ன்னு வாழ்த்தினேன்.." என்றான் அண்ணன் நக்கலாக..
அவனை பார்த்து முறைத்தபடி லேசாக சிரித்துக் கொண்டு அவள் தொடர்ந்தாள்..
"என்ன ரொம்ப திட்டி மெசேஜ் பண்ணான்.. நா என் பக்க நியாயங்களையும் வீட்டு நிலைமையையும் மறுபடியும் சொல்லி இவன சமாதானப்படுத்துனேன்.. என்னோட ஹஸ்பண்ட் பத்தி சொன்னேன்.. நாங்க வாழற வாழ்க்கை பத்தி சொன்னேன்.. இன்னும் உன்ன மறக்க முடியல ன்னு சொன்னேன்.. அப்புறமா நாள் ஆக ஆக இவனே மனசு மாறி என்ன சமாதானப்படுத்த ஆரம்பிச்சான்.. "என்ன மறந்துட்டு நல்ல படியா புருஷன் கூட சேர்ந்து வாழு"ன்னு அட்வைஸ் பண்ணான்.. நானும் இவன "ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி சந்தோசமா இரு" ன்னு சொன்னேன்.. அதுக்கு "வீட்ல பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.. யாரயாச்சும் பாத்து அப்பா அம்மா ஓகே பண்ணுற பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்" னு சொன்னான்.. ஒரு நாள் உங்க அண்ணியோட ஃபோட்டோவ அனுப்பி அவள தான் வீட்ல பொண்ணு பாத்திருக்காங்க ன்னு சொன்னான்.. அப்புறமா இனிமே நாம ரெண்டு பேருமே பேசிக்க வேணாம்.. ரெண்டு பேருமே அவங்க அவங்க லைஃப் பார்ட்னர் க்கு உண்மையா இருப்போம் ன்னு ஒரு முடிவுக்கு வந்தோம்.. அதுக்கப்புறமா நாங்க ரெண்டு பேருமே பேசிக்கல.. இவனோட கல்யாணம் நடந்தது கூட என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்லித் தான் எனக்கு தெரியும்.. அப்புறமா ஃபேஸ்புக் ல கல்யாண ஃபோட்டோ போட்டிருந்தான்.. நானும் அதுக்கு விஷ் பண்ணி ஒரு கமெண்ட் போட்டேன்.. அப்புறமா மறுபடியும் ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணி இருந்தான்.. நானும் ரிப்ளை பண்னேன்.. அப்புடியே மறுபடியும் ஃபேஸ்புக்லயே கண்டினியுவா பேசினோம்.."
சற்று நிறுத்தி விட்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.. அவள் கூறிய விடயங்களில் இருந்து எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே புரிய ஆரம்பித்தது..
அண்ணா போதையில் தான் லீனாவிற்கு மெசேஜ் பண்ணியதாக என்னிடமும் அவனது நன்பனிடமும் அபர்ணாவிடமும் கூறி இருந்தான்.. ஆனால், அவன் கல்யாணம் ஆக முதலில் இருந்தே இவளுடன் பேசிக்கொண்டு தான் இருந்திருக்கிறான்.. இடையில் ஒரு இடைவெளி.. ஆனால், கல்யாணம் ஆனதன் பின்னர் மீண்டும் பேஸ்புக்கில் பேசி இருக்கிறார்கள்.. அப்போது பேசியதனைத் தான் அபர்ணா கேட்ட நேரத்தில் அவளிடம் காட்டி இருக்கிறான்..
தண்ணீரைக் குடித்து விட்டு அவள் மீண்டும் தொடர்ந்தாள்..
"கல்யாணம் ஆகி 7 மாசம் ஆகியும், எவ்வளவோ முயற்சி செய்தாலும் என்னால இவன மறக்கவும் முடியல.. இவன் கூட பேசாம இருக்கவும் முடியல.. என் ஹஸ்பண்ட் கூட என்னால சேர்ந்து சந்தோசமா மனசு ஒத்து வாழவும் முடியல.. அவருக்கும் உண்மையிலேயே மனசு ஒத்துப் போகாம என்ன வற்புறுத்தி சேர்ந்து வாழுறதுல விருப்பமும் இருக்கல.. அப்புறமா ஒரு நாள், நா இன்னும் இவன் கூட பேசிட்டு தான் இருக்கேன்னு அவருக்கு தெரிய வந்துருச்சி.. "நீ மனசு மாறி என்கூட சேர்ந்து வாழுவன்னு நெனச்சா நீ இன்னும் அவன் கூட பேசிட்டு இருக்க.. கல்யாணம் ஆகி 7 மாசம் ஆயிடிச்சு.. யாராச்சும் அவங்க வைஃப்க்கு இப்படி ஒரு சான்ஸ் குடுப்பங்களா ன்னு எனக்கு தெரியல.. கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோ.. ஒண்ணு எல்லாத்தையும் மறந்துட்டு சுத்தமான மனசோட என்கூட சேர்ந்து வாழப் பாரு.. இல்லன்னா தயவு செய்து என்ன விட்டு போயிடு.. நா டைவர்ஸ் தந்துடறேன்.." அப்படின்னு ரொம்ப மனசு நோகி பேசுனாரு.. நானும் "இவனுக்கு கல்யாணம் ஆய்டிச்சு.. சும்மா பிரெண்ட்லியா தான் பேசிக்கிட்டோம்.. இனிமே பேச மாட்டேன்" ன்னு சொல்லி அவர சமாதானப் படுத்தினேன்.. அப்புறமா நடந்தத இவன் கிட்ட சொல்லி இனிமே ரெண்டு பேருமே பேசிக்க வேணாம் ன்னு மறுபடியும் முடிவு எடுத்தேன்.. அப்புறமா ரெண்டு பேருமே பேசிக்கல.. நானும் எல்லாத்தையும் மறந்து அவர்கூட சேர்ந்து வாழ முழுக்க முழுக்க முயற்சி பண்னேன்.. மனசுல இருந்து இவன கம்ப்ளீட்டா அழிச்சிடனும் ன்னு போராடினேன்.. அவர் ஃப்ரீ டைம் ல அவர் கூட வெளிய போனேன்.. அவர் கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்னேன்.. அவரும் ரொம்ப ஹேப்பியா இருந்தாரு.. கொஞ்சம் கொஞ்சமா இவன மறந்து கொஞ்சம் கொஞ்சமா அவர மனசளவுல நேசிக்க ஆரம்பிச்சேன்.." அவள் நிறுத்தினாள்..
"அப்புறம் என்ன..? மறுபடியும் அண்ணா மெசேஜ் பண்ணி அது அவருகிட்ட மாட்டிரிச்சா...?" ஆர்வத்தினை அடக்க முடியாமல் நான் கேட்டேன்..
"ச்சே.. ச்சே.."
"அப்புறம் என்னாச்சு..?"
"சொல்றேன்.."
"அதுக்கு முதல்ல நீங்க ஒரு விஷயம் சொல்லுங்க.."
"என்னது...?"
"கல்யாணம் ஆகி 7 மாசம் ஆனதுக்கு அப்புறமாவும் இவன மறக்க முடியலன்னு சொல்றீங்க.. அப்படி இருக்கும் போது ஃபேமிலி கிட்ட சண்ட போட்டு இவனத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா கேட்டிருக்கலாமே...?"
"எங்க ஃபேமிலி கிட்ட அப்படியெல்லாம் பிடிவாதமா கேட்டு எதுவும் சாதிச்சிட முடியாது.. அப்பாவும் அண்ணாவும் ரொம்ப ஸ்ட்ரிக்டு.. அப்ப கூட நா என்னால முடிஞ்ச அளவுக்கு போராடினேன்.. எவ்வளவு சண்ட போட்டாலும் எதுவுமே சரி வரல.. செத்துரலாம் ன்னு தோணிச்சு.. ஆனாலும், அதுக்கும் அந்த நேரத்துல துணிச்சல் வரல.. அப்புடி இப்புடின்னு கல்யாணமும் நடந்துரிச்சு.. என்னால எதுவுமே பண்ண முடியல.. இது தான் உண்ம.. உண்மையா லவ் பண்ணுனா அவங்களால அந்த லவ்வ எத்தன வருஷங்கள் ஆனாலும் மறக்க முடியாது.. அது உண்மையா லவ் பண்ணவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. எத்தனையோ பேர் குடும்பம், கெளரவம் ன்னு அவங்க காதல மனசுல போட்டு புதைச்சிட்டு யாரோ ஒருத்தங்க கூட ஏனோ தானோன்னு வாழ்ந்துட்டு இருக்காங்க.. ஆனா, உள்ளுக்குள்ள அந்த பழைய காதல் வாழ்ந்துக்கிட்டுத் தான் இருக்கும்.."
"ம்ம்.."
"ஆனா என்னால அது முடியல.. ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்திச்சு.. டெய்லி அழுவேன்.. நல்ல வேளையா அவருக்கும் விஷயம் தெரிஞ்சு என்ன புரிஞ்சிக்கிட்டு எனக்கு கொஞ்சம் கால அவகாசமாச்சும் தந்திருந்தாரு.."
"ஹ்ம்ம்.."
நான் அண்ணனைப் பார்த்தேன்.. அவன் நாங்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு ஜடம் போல அமர்ந்திருந்தான்.. ஒழுங்காக சாப்பிடவும் இல்லை.. அவளும் தான்..
"ரெண்டு பேரும் ரொம்ப அப்செட்டா இருக்கீங்க ன்னு எனக்கு நல்லாவே புரியிது.. என்னால என்ன பண்ண முடியுமோ அத நா கண்டிப்பா உங்களுக்காக பண்ணுவேன்.. எதுவும் யோசிக்க வேணாம்.. விதிப்படி எல்லாமே நடந்தே தீரும்.." என்று அவர்களை கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன்..
சற்று நேர அமைதிக்குப் பின் அவளைப் பார்த்துக் கேட்டேன்..
"அப்புறம் என்ன ஆச்சு..? எதனால உங்க லைஃப் ப்ரேக் அப் ஆச்சு....?"
"என்னவா இருக்கும் ன்னு நீங்க நினைக்குறீங்க...?"
"எனக்கென்ன தெரியும்..? அதுக்கப்புறம் அண்ணா மெசேஜ் பண்ணலன்னு வேற சொல்றீங்க.. என்னதான் ஆச்சு....??"