17-06-2019, 09:13 AM
பீக்கில் இருக்கும் எந்த ஹீரோவும் கனவில் கூட நினைக்காத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி
மலையாளம்
இங்கேயே நடிக்க நேரமில்லையாம் இதில் தெலுங்கு, மலையாள படங்கள் வேறா என்று விமர்சனம் எழுந்துள்ளது. நடிக்கப் போகிறவர் அவர், எத்தனை மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. நடிக்க தெம்பு இருப்பதால் அவர் தொடர்ந்து புதுப் படங்களை ஒப்புக் கொள்கிறார். அதற்காகஅவரை விமர்சிப்பதற்கு நாம் யார்?
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட நினைப்பவர். அதனால் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் அல்லாமல் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை அசத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி ரசிகர்கள் ஒரே மாதிரியான வரவேற்பு கொடுக்கிறார்கள். வில்லனாக நடிப்பதால் அவரை யாரும் கழுவிக் கழுவி ஊற்றுவது இல்லை.
கதாபாத்திரம்
விஜய் சேதுபதி சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க டேட்ஸ் கொடுத்துள்ளார். அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் என்னவென்று தெரிந்தால் அப்படியே ஷாக் ஆகிவிடுவீர்கள். புதுமுகம் புச்சு பாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். உப்பெனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் ஹீரோயின் க்ரித்தியின் அப்பாவாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி.
அப்பா
அந்த அப்பா கதாபாத்திரம் மிகவும் சுவராஸ்யமானதாக உள்ளதாம். அதனால் தான் துணிந்து ரிஸ்க் எடுக்க முடிவுசெய்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் இளைய மகன் தான் இந்த வைஷ்ணவ் தேஜ். உப்பெனா படம் மூலம் அவர் டோலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது