Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
Hospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இப்போது உள்ள பல இயக்குநர்களுக்கும் மானசீக குரு அவர் தான். பல முன்னனி இயக்குநர்கள் தங்கள் ஆதர்ஷமாக கருதுவது அவரைத்தான்.

[Image: maniratnam.jpg]Hospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி!
தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு. உலக அரங்கில் அவரின் படங்களுக்கு மிகப்பெரும் மரியாதை உள்ளது. அவர் படங்கள் பாடமாக திரைப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. கமல் மற்றும் ரஜினியின் வாழ்வில் மறக்க முடியாத படங்களை தந்தவர். கமலுக்கு நாயகனும் ரஜினிக்கு தளபதியும் என்று அவர் இயக்கத்தில் வந்த இரு படங்களும் தமிழ் சினிமா பொக்கிஷங்கள்
அவர் கடைசியாக இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக தன் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க உள்ளது. 
பொன்னியின் செல்வன் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னரே மூன்று முறை ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இது சாதரண நெஞ்சு வலி என தகவல்கள் தெரிவிக்கிறது. 

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இப்போது உள்ள பல இயக்குநர்களுக்கும் மானசீக குரு அவர் தான். பல முன்னனி இயக்குநர்கள் தங்கள் ஆதர்ஷமாக கருதுவது அவரைத்தான்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 17-06-2019, 09:10 AM



Users browsing this thread: 3 Guest(s)