Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
வெற்றியை மட்டுமல்ல இந்த சாதனைகளையும் வசப்படுத்திய இந்திய அணி!
2 வகையிலான உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி 100 விழுக்காடாக உள்ளது.

[Image: india.jpg] உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய இரண்டாவது இந்தியர், இவ்விரு அணிகளுக்கும் இடையே, ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

[Image: rohit-sharma-record.jpg]ரோகித் சர்மா



முன்னதாக, 2015 தொடரில் விராட் கோலி 107 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. அத்துடன், இப்போட்டியில், 3 சிக்சர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விளாசிய சிக்சர்கள் 358. இதனால் சர்வதேச போட்டிகளில் அதிகம் சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையுடன் ரோஹித் சர்மா பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

இவருக்கு அடுத்தபடியாக 355 சிக்சர்களுடன் தோனி 2-வது இடத்தில் உள்ளார். மேலும், குறைந்த போட்டிகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 24 சதங்கள் அடித்த வீரர்களில் சச்சினை பின்னுக்குத் தள்ளினார்.

சச்சின் 219-வது போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை, 203-வது போட்டியிலேயே ரோஹித் எட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 57 ரன்களை கடந்த போது, ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சச்சின் 276 இன்னிங்சுகளில் கடந்த இந்த சாதனையை 222-வது இன்னிங்சிலேயே கோலி முறியடித்துள்ளார். மேலும், 10 ஆயிரம் ரன்களில் இருந்து 11 ஆயிரம் ரன்களை கடக்க சச்சினும், கோலியும் 17 இன்னிங்ஸ்களை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக, உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் குவித்தவர்களில் லோகேஷ் ராகுல் - ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தனர். இவர்கள், முதல் விக்கெட்டிற்கு 136 ரன்கள் குவித்தனர்.

முன்னதாக, 1996-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து - சச்சின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது.

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று தோனி விளையாடியதன் வாயிலாக, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட்டை முந்தி 2-வது இடம் பிடித்தார்.

இவருக்கு நேற்றைய ஆட்டம் 341-வது போட்டியாக அமைந்தது. இந்த வரிசையில், 463 போட்டிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

[Image: ms-dhoni.jpg]மகேந்திர சிங் தோனி



இந்திய அணி, நேற்று 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. இதுவே, உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.

முன்னதாக, கடந்த 2015 தொடரில் 300 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது,

உலகக் கோப்பையில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும். முன்னர், கடந்த 2015 தொடரில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய முந்தைய 6 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணியே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், நேற்றைய போட்டியில் தான் பாகிஸ்தான் டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அத்துடன், 50 ஓவர் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோல்வியே சந்தித்ததில்லை என்ற சரித்திர சாதனை தொடருகிறது.
View image on Twitter
[Image: D9NBn-hX4AAfWZr?format=jpg&name=small]
Quote:[Image: juwuMrhX_normal.png]
[/url]Cricket World Cup

@cricketworldcup





Results of India v Pakistan in Men's World Cups:

1992: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
1996: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
1999: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2003: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2011: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2015: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]
2019: [img=16.9x18]https://abs.twimg.com/emoji/v2/72x72/1f1ee-1f1f3.png[/img]

10.2K
12:06 AM - Jun 17, 2019
[color][size][font]

2,343 people are talking about this

[url=https://twitter.com/cricketworldcup/status/1140327287449169920]
Twitter Ads info and privacy

[/font][/size][/color]



50 ஓவரை பொறுத்தவரை, 1992, 96,99, 2003, 2011, 2015 மற்றும் 2019 ஆகிய 7 தொடர்களிலும் பாகிஸ்தான் வீழ்த்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 20 ஓவர் உலகக் கோப்பையில் மோதிய 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

அந்த வகையில், 2 வகையிலான உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி 100 விழுக்காடாக உள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-06-2019, 09:00 AM



Users browsing this thread: 103 Guest(s)