17-06-2019, 08:53 AM
Urinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய போலீசார்; அதிர்ச்சியில் பத்திரிகையாளர்!
Urinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய போலீசார்; அதிர்ச்சி...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நேற்று இரவு, ரயில் ஒன்று தடம் புரண்டது. இதுகுறித்து செய்தி சேகரிக்க நியூஸ் 24 சேனலின் செய்தியாளர் அமித் ஷர்மா சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சாதாரண உடையில் வந்த ரயில்வே போலீசார், அவரை தாக்க முயற்சித்தனர்.
பின் கேமராவை கீழே தட்டிவிட்டு, அவரையும் தள்ளிவிட்டனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி, உடைகளை கிழித்து, வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். இதையடுத்து அவரை இழுத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள், உடனடியாக காவல் நிலையம் விரைந்தனர்.
அங்கிருந்த மூத்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் கோரிக்கை நிறைவேறாததால், போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மறுநாள் காலை பத்திரிகையாளரை போலீசார் விடுவித்தனர். பத்திரிகையாளர் அமித் ஷர்மாவை போலீசார் தாக்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அவற்றின் ஒரு வீடியோவில், ஷர்மா சிறைக்குள் இருப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் தனது சக பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அதாவது, 10 முதல் 15 நாட்களுக்கு முன்பு, ரயில்வே போலீசார் குறித்து ஒரு செய்தியை சேகரித்தேன்.
இதுதொடர்பான வீடியோ என்னுடைய மொபைல் போனில் இருந்தது. அதனை என்னிடம் பறித்துச் சென்றுள்ளனர் எனக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்து அறிந்த உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஹவுஸ் ஆபிசர் மற்றும் கான்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்
செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை வாயில் சிறுநீர் கழித்து, ரயில்வே போலீசார் அசிங்கப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.