30-01-2024, 10:53 PM
வெண்ணிலா பாத்ரூமுக்குள் சென்றாள்
செம நாத்தம்..
ஆனால் வேறு வழி இல்லை.. பயணம் செல்லும் யாரா இருந்தாலும் இந்த நாத்தத்தை அனுபவித்துதான் டாய்லெட் போய் ஆகவேண்டும்
4 பாத்ரூம் வரிசையாக இருந்தது..
அந்த 4 பாத்ரூமிலும் ஆட்கள் இருந்தார்கள்
வெண்ணிலா வெளியே காத்திருந்தாள்
நல்லவேளை அவள் நின்று கொண்டு இருந்த பாத்ரூம் தகர கதவு திறந்தது..
அதில் இருந்து வெளியே ஒரு குண்டு பெண்மணி வெளியே வந்தாள்
வெண்ணிலா உள்ளே போனவள் சற்றென்று உடனே வெளியே வந்தாள்
அக்கா அக்கா.. என்று அந்த குண்டு பெண்ணை கூப்பிட்டாள்
என்ன.. என்று கோபமாக முறைத்து கொண்டே குண்டு கேட்டாள்
தண்ணி ஊத்திட்டு போங்க.. என்றாள் வெண்ணிலா (சமீபத்தில் பார்த்த சித்தா படத்தின் பாதிப்பு)
குண்டு பெண் எதாவது பிரச்சனை பண்ணுவாளோ என்று எதிர் பார்த்தாள்
ஆனால் அந்த குண்டு பெண் திரும்ப அந்த பாத்ரூம் சென்று தண்ணீர் ஊற்றிவிட்டு சென்றாள்
வெண்ணிலா அதன் பிறகு உள்ளே போய் தன்னுடைய கழிவை கழித்து விட்டு நன்றாக தண்ணீர் ஊற்றி விட்டு வெளியே வந்தாள்
நடந்து மெல்ல அவள் வந்த பஸ் நோக்கி நடந்தாள்
அவள் அணிந்து இருந்த செருப்பின் ஈரம் அவள் நடந்து போன பாதையில் படர்ந்து படர்ந்தது மறைந்தது..
அவளுக்கே ஆச்சரியம்..
எப்படி அந்த குண்டு பெண்மணியிடம் அவ்ளோ தைரியமாக தண்ணீர் ஊற்று என்று அதட்டினாள்..
கல்லூரியில் படிக்கும் போது இருந்த துணிச்சலும் தைரியமும்.. இன்னும் தன்னிடம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டி கொண்டு இருபப்தை நினைத்து மகிழ்ந்தாள்
பஸ்ஸுக்குள் ஏறினாள்
பீட்டர் குழந்தையை வெண்ணிலா அண்ணியிடம் கைமாற்றினான்..
பீட்டர் பாத்ரூம் சென்றான்
குழந்தையை மடியில் வைத்து கொண்டு மீண்டும் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தாள் வெண்ணிலா..
அவள் நினைவுகள் மீண்டும் தன்னுடைய கல்லூரி நாட்களை ஆசை போட ஆரம்பித்தது..
தொடரும் 6