27-01-2024, 11:00 AM
(27-01-2024, 10:51 AM)Manmadhan67 Wrote:இந்த கதையை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஒரே மாதிரி வாரம் ஒரு முறை அப்டேட் கொடுத்து வந்தேன். அதற்கு பின் சொந்த காரணங்களால் கதையை நிறுத்தியிருந்தேன். இப்போது மீண்டும் துவங்கி வாரம் தவறாமல் அப்டேட்கள் கொடுத்து வருகிறேன். கதையை பற்றி கமெண்ட்கள் வருகின்றன என்றாலும், நிறுத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலான கதைகளிலும், எப்போதாவது அப்டேட் தரும் அல்லது எப்போது அப்டேட் தருவார் என்று தெரியாத கதைகளிலும் தினம் தவறாமல் போய் அப்டேட் குடுங்க அப்டேட் குடுங்க என்று கேட்போர் தான் அதிகம். இதற்கு வாசகர்களை குறை சொல்வது சரியல்ல. வாசகர்களுக்கு பிடிக்கும் படி கதை இல்லையோ, அல்லது அவசர குடுக்கை போல அடிக்கடி அப்டேட் கொடுக்காமல் நிறைய கேப் விட்டு அப்டேட் குடுத்தால் தான் ஒரு டிமாண்ட் இருக்கிறதோ தெரியவில்லை.
இந்த கதை வேர்ட் டாக்குமெண்டில் தான் எழுதி வருகிறேன். இது வரை அந்த டாக்குமெண்ட் இருநூறு பக்கங்கள் தாண்டி விட்டது. எனக்கு தெரிந்து எழுத்து பிழையோ வார்த்தை பிழையோ இல்லாமல் எழுதுகிறேன். அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது தான் என் வருத்தம்.
அருமையான கதை நண்பரே.
உங்கள் எழுத்து நடை, மிக இயல்பாக, நேருக்கு நேர் நடப்பது போல் உள்ளது.
நான் இந்த கதை ஆரம்பம் முதல் வாசித்து வருகின்றேன்.
உங்கள் தமிழ் மொழி திறமைக்கு நல்வாழ்த்துக்கள்.
பணி சிறக்கட்டும்.