அபர்ணா அண்ணி
அவர்கள் இருவரும் அருகே வந்ததும் அண்ணா என்னிடம் அவளை அறிமுகம் செய்து வைக்க.. அவளோ சற்று தயங்கியபடி நின்று கொண்டிருந்தாள்..

நான் அவளது தயக்கத்தினை போக்க லேசாக அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு "ஹை" என்றேன்..

அவளும் பதிலுக்கு சற்று புன்னகைத்து "ஹை" என்றாள்..

மூவரும் உள்ளே சென்று அமர்ந்தோம்.. இலேசான சில உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு அண்ணா பேச ஆரம்பித்தான்..

"சிவா.. சொல்லு.. இவ கிட்ட என்ன பேசணும்னு வர சொன்ன...?"

"என்ன பேசுறதுண்ணு எனக்கு தெரியல.. ஆனா நாம எல்லாரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தே ஆகணும்ல.. இது நாலு குடும்பம் சம்பந்தப் பட்ட விஷயம்.. நாலு பேரோட வாழ்க்க.."

"இவ பத்தியும் நடந்த எல்லா பிராப்ளம்ஸ் பத்தியும் நா உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன்.. என்னால இவளுக்கும் பிராப்ளம் ஆகி இவ இப்ப தனி மரமா வந்து நிக்குறா.. சத்தியமா எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.."

"சரி.. நீங்க என்ன முடிவு பண்ணி இருக்கீங்க இது பத்தி...?" நான் லீனாவைப் பார்த்து கேட்டேன்..

"எனக்கு என்னோட லைஃப் எப்புடி போனாலும் பரவால்ல.. ஆனா, என்னால இன்னொரு பொண்ணோட வாழ்க்க நாசமாக நா விரும்பல.. நா உங்க அண்ணா கிட்ட எவ்வளவோ சொல்லிட்டேன்.. 'என்னோட லைஃப்ப நா பாத்துக்குறேன்.. அத பத்தி வொரி பண்ணாம நீ உன் வைஃப் கூட சந்தோசமா வாழு'ன்னு.. ஆனா அவன் நா சொல்றத கேக்க மாட்டேங்குறான்.. இப்ப கூட எனக்கு இது பத்தி பேச இங்க வர்றதுக்கு விருப்பம் இல்ல.. இவன் தான் ஃபோர்ஸ் பண்ணி என்ன கூட்டி வந்தான்.." அவள் சற்று தயக்கத்துடன் என்னிடம் பேச ஆரம்பித்தாலும் உறுதியாகவே பேசினாள்.. அவள் பேசும் பொழுது தான் நான் அவளது கண்களை உற்று நோக்கினேன்.. அவை அவளது மனதில் இருந்த வேதனைகள் அனைத்தையுமே வெளிப்படுத்துவது போல சோர்வாக இருந்தன.. பாவம்.. எத்தனை நாள் அழுதிருப்பாளோ..

"என்னால தானே உனக்கு இவளோ பிராப்ளம்ஸ்.. உன்ன அப்படியே விட்டுட்டு போக சொல்றியா...? அப்புடி உன்ன விட்டுப் போனா நா ஒரு மனுஷனா...?" என்றான் அண்ணன்..

"சரி.. ரெண்டு பேரும் என்கிட்ட உண்மைய சொல்லுங்க.. உண்மையிலேயே என்ன நடந்துது...? சும்மா ஃபோன்ல பேசுன சாட் எல்லாம் பார்த்து யாரும் டைவர்ஸ் வரைக்கும் போவங்களா என்ன...?" எனது சந்தேகத்தை இருவரிடமும் முன் வைத்தேன்..

"இங்க பாரு.. நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழ வேண்டியவங்க.. நம்ம வீட்ல சொல்லி இருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது.. ஆனா.. இவ வீட்ல எப்படியோ கேள்விப்பட்டு எங்க லவ்வ ஒத்துக்காம திடீர்னு அவள மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சிட்டா மட்டும் எங்க மனசுல இருந்த காதல் இல்லாம போயிடுமா என்ன..? இவள மறக்க முடியாம..." அண்ணா கூறி முடிப்பதற்குள் இடையே அவள் குறுக்கிட்டாள்..

"எவ்வளவு வலியோடையும் வேதனையோடையும் விருப்பமே இல்லாம குடும்ப நிர்பந்தத்துக்காக தான் நா அவங்க சொன்ன பையன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவரு துபாய்ல வேல பாக்குறாரு.. எங்க அப்பா ப்ரெண்ட்டோட பையன் தான்.. அதனால.. அவசர அவசரமா எல்லாமே பிளான் பண்ணி.. பேச்சுவார்த்தைகள் எல்லாமே பண்ணி முடிஞ்சு.. லீவு போட்டு அவர இங்க வர வச்சி அவசர அவசரமா சிம்பிளா எங்க கல்யாணத்த முடிச்சி வச்சிட்டாங்க... சரி.. விதி.. எங்க காதல் சக்சஸ் ஆகல.. கல்யாணமும் பண்ணி வச்சிட்டாங்க.. இனிமே கட்டுன புருஷன் தான் நமக்கு எல்லாமே அப்புடின்னு நெனச்சி வாழ பழகிக்க வேண்டியது தான் னு நெனச்சேன்.. ஆனா, என் மனசு பூரா இவன் தான் இருந்தான்.. இவன என்னால மறக்கவே முடியல.. இவனயே நெனச்சிகிட்டு.. மனசு பூரா இவனையே வச்சிக்கிட்டு அவர் கூட என்னால சந்தோசமா பேசக் கூட முடியல.. நா பண்ண துரோகத்த இவன் எப்புடி தாங்கிகிட்டானோ.. இப்ப என்ன பண்றானோனு நெனச்சி ரொம்ப கவலையா இருந்தேன்.. கல்யாணம் பண்ணி முதல் நாள்லயே அவர்கிட்ட சொன்னேன்.. நா மேரேஜ் லைஃப் க்கு இன்னும் செட் ஆகல.. நாம ரெண்டு பேரும் கொஞ்ச காலம் பழகிக்கலாம்.. அப்புறமா இந்த பர்ஸ்ட் நைட் பத்தி யோசிக்கலாம் ன்னு.. அவரும் பெருந்தன்மையா ஓகே சொன்னாரு.. ஆனாலும், என்னோட பிஹேவியர்ஸ் பாத்து அவருக்கு என் மேல கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சி.. எப்படியோ யார்கிட்டயோ விசாரிச்சு எங்கள பத்தி உண்மைகள தெரிஞ்சிகிட்டாரு.. அன்னைல இருந்து அவரு ரொம்பவே அப்செட்டா இருந்தாரு.. ஒரு நாள் அவராவே என்கிட்ட கேட்டப்போ நா எல்லா உண்மையையும் சொன்னேன்.. அப்பா அம்மா வற்புறுத்தி தான் நா இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டேன் னு சொன்னேன்.. ரொம்பவே உடஞ்சி போயிட்டாரு.. இன்னும் அவன மறக்க முடியலையான்னு கேட்டாரு.. நா என்னோட நிலமைய சொன்னேன்.. ஆனாலும், எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க.. சீக்கிரமா ஓகே ஆகிடுறேன் ன்னு சொன்னேன்.. எல்லாத்துக்கும் அந்த மனுஷன் ஓகே ன்னு சொன்னாரு.. பாவம்.. ரொம்ப நல்லவரு.." கவலை தோய்ந்த முகத்துடன் கண்களில் கண்ணீர் மல்க கூறி முடித்தாள்..

"உங்கள நல்லாவே புரிஞ்சிக்கிட்டு உங்க ஆசைப்படியே நடக்க விட்ட நல்ல மனுஷன்னு சொல்றிங்க.. அது ஓகே.. அப்புறம் எதுக்கு டைவர்ஸ் வரைக்கும் போனாரு..?"

"வீட்ல பிராப்ளம் வந்ததுல இருந்து என்னோட சோஷியல் மீடியா எல்லாமே க்ளோஸ் பண்ணிட்டாங்க.. சிம் கார்டையும் உடச்சி வீசிட்டாங்க.. கல்யாண திகதி நெருங்கும் போது தான் புதுசா ஒரு சிம் போட்டு ஃபோன என்கிட்ட குடுத்தாங்க.. அது வரைக்கும் நா எங்க அப்பா ஃபோன்ல தான் அவர் கூட பேசுவேன்.. ஃபோன் கைல கிடைச்சாலும், இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமா இவன் கிட்ட ஸாரி சொல்லி பேசக் கூட எனக்கு ரொம்ப சங்கடமா இருந்திச்சு..
பேசப் பேச இன்னும் வலி தான் கூடுமே தவிர வேற எதுவும் ஆகப்போறதில்ல.. அதனால மனச கல்லாக்கிக்கிட்டு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டேன்.. அப்புறமா நடந்த விஷயங்கள ஆல்ரெடி சொன்னேன்ல.. என்னோட மனசு மாறனும்ன்னு அவரோட லீவு முடிஞ்சதும் என்னையும் துபாய்க்கு கூட்டி போனாரு.. புது இடம்.. புதிய மனிதர்கள் ன்னு கொஞ்சம் கொஞ்சமா என்னோட மனசும் மாற ஆரம்பிச்சுது.. ஆனாலும் ஒரு நாள் எப்படியோ என் நம்பர கண்டு பிடிச்சு எடுத்து ஒரு நாள் இவன் எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தான்.."
கூறி விட்டு சற்று நிறுத்தினாள்.. வெயிட்டர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்..

அவன் நாங்கள் ஆர்டர் செய்த உணவுகளை கொண்டு வந்து ஒவ்வொன்றாக மேசை மீது பரப்பி வைத்துக் கொண்டிருக்க.. அவள் மெல்ல கீழே குனிந்து கர்சீப்பால் கண்களை துடைத்துக் கொண்டாள்..

(தொடரும்..)
[+] 9 users Like siva92's post
Like Reply


Messages In This Thread
அபர்ணா அண்ணி - by siva92 - 04-12-2023, 05:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 11-12-2023, 08:43 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 17-12-2023, 08:30 AM
RE: அபர்ணா அண்ணி - by ZEUSK - 17-12-2023, 06:05 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 24-12-2023, 06:44 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 14-01-2024, 07:33 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 18-01-2024, 02:56 AM
RE: அபர்ணா அண்ணி - by siva92 - 26-01-2024, 01:34 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 27-01-2024, 02:10 AM
RE: அபர்ணா அண்ணி - by zacks - 27-01-2024, 09:19 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:03 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 28-01-2024, 10:54 AM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 07-02-2024, 06:23 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 10-02-2024, 08:01 AM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 04:53 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 17-02-2024, 11:32 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 20-02-2024, 06:11 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:25 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:59 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:57 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:20 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 10:36 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 12:11 PM
RE: அபர்ணா அண்ணி - by Bigil - 03-03-2024, 11:08 AM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 03-03-2024, 02:30 PM
RE: அபர்ணா அண்ணி - by jaksa - 30-03-2024, 05:10 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:22 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 06-04-2024, 12:31 PM
RE: அபர்ணா அண்ணி - by XmanX - 07-04-2024, 10:55 AM



Users browsing this thread: 6 Guest(s)