Romance மனைவியை தேடி
#9
கந்து வட்டி கந்தசாமி அப்படி சொல்லியும் என்னால் நம்ப முடியவில்லை 

எதுக்கும் ஒரு எட்டு அவர் வீட்டுக்கு போய் நேரடியாக பார்த்து விடுவோம் என்று கிளம்பினேன் 

பைக் கந்து வட்டி கந்தசாமி வீட்டை நெருங்கி கொண்டு இருந்தது 

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

அப்போது என் மொபைல் அலறியது 

டிரைவ் பண்ணும்போது செல் போன் உபயோகிக்க கூடாது என்று நம் அரசாங்கம் நிறைய இடத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தது என் நினைவுக்கு வந்தது 

அதனால் வண்டியை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு போன் அட்டென்ட் பண்ணேன் 

டேய் ரவி நான் ஹரி பேசுறேண்டா.. 

சொல்லுடா ஹரி.. என்னடா திடீர்ன்னு போன் என்று கேட்டேன் 

ஹரியும் நானும் சின்ன வயதில் இருந்தே ரொம்ப கிளோஸ் நண்பர்கள் 

எல் கே ஜி முதல் காலேஜ் வரை ஒன்றாகவே படித்தவர்கள் 

டேய் ரவி.. உன் பொண்டாட்டி அதுல்யாவையா தேடிட்டு இருக்க.. 

ஆமாண்டா மச்சான்.. உனக்கு எப்படி தெரியும் 

நான் இப்போ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து பேசுறேண்டா 

உன் பொண்டாட்டியை ரெண்டு பேரு மும்பை ரயில்ல ஏத்திட்டு போறானுங்கடா.. 

நீ உடனே சென்ட்ரல் ஸ்டேஷன் வந்துடு ரவி என்றான் ஹரி 

சரிடா மச்சான் நான் இப்போ உடனே அங்கே வர்றேன்.. என்று போனை வைத்து விட்டு பைக்கை ரயில் நிலையம் நோக்கி திருப்பினேன் 

அதுல்யா எதுக்கு பாம்பே போறா.. 

அவளா போறாளா.. இல்ல எவனாவது கடத்திட்டு போறானா.. 

நான் யோசித்து கொண்டே பைக்கை ஓட்டினேன் 

காரணம் நான் கடன் வாங்காத ஆட்களே இல்லை.. 

ரெண்டு பேருகூட அதுல்யா மும்பை போறான்னு ஹரி சொன்னானே.. 

யார் அந்த ரெண்டு பேர் 

நான் கடன் வாங்கிய நபர்களில் மும்பையை சார்ந்தவர்கள் யார் யார் என்று மனதுக்குள்ளேயே ஒரு லிஸ்ட் எடுத்து கொண்டு பைக்கை இன்னும் வேகம் கூட்டினேன் 

தொடரும் 3
[+] 3 users Like veerabagu's post
Like Reply


Messages In This Thread
மனைவியை தேடி - by veerabagu - 14-01-2024, 09:43 PM
RE: மனைவியை தேடி - by veerabagu - 23-01-2024, 05:07 PM
RE: மனைவியை தேடி - by Bigil - 07-02-2024, 06:14 AM



Users browsing this thread: 4 Guest(s)