21-01-2024, 11:06 AM
வருணும் வேகமாய் எழ முற்பட அவனை மணமேடையைவிட்டு எழுந்திரிக்க வேண்டாம் என தடுத்தனர்.... ப்ரணிதாவும் நடப்பது புரியாமல் குழம்பினாள்..... மறுபுறம் மணமேடையில் சிரித்து மகிழ வேண்டிய பூரணி கண்கள் கலங்கிட திகைப்பாய் நிற்கிறாள்....காணாமல்போன மாப்பிள்ளை மனோஜ் கனடாவில் வேலை பார்த்தவன்.....அவனின் பெற்றோர் தான் பூரணியை வரன் பார்த்து சம்மதம் சொன்னார்கள்...... ஆனால் அவனுக்கு விருப்பம் இல்லை போல.... அவனது பெற்றோர்கள் சொல்வது அறியாது தலை குனிந்து நின்றனர்...... பூரணியின் தாய்மாமன் சக்திவேல் மேலும் கத்திக்கொண்டே இருந்தார்..... இதை எதுவுமே அறியாது காலைப்பந்தியை கவனித்து கொண்டிருந்தான் கார்த்தி...... ப்ரணிதாவின் அண்ணன் தான் கார்த்தி..... சங்கீதா வேகமாக பந்தி பக்கம் வந்து கார்த்தி.... சீக்கிரம் வாப்பா இங்க...... என அழைத்தாள்..... சங்கீதா சக்திவேலின் மனைவி...... ஏதும் அறியாத கார்த்தி..... சங்கீதா வின் சத்தம் கேட்டு வேகமாக மணமேடை சென்றான்..... அங்கு கார்த்தி யின் பெரியப்பா பெரியம்மா சக்தி வேலை சமாதானம் செய்தனர்..... மனோஜ் சொந்தங்கள் அவனின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்..... ஆனால் சக்தி வேல் தன் அக்கா மகளின் வாழ்க்கையை எண்ணி ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்....... கூட சங்கீதாவும்..... அப்பா அம்மா இல்லாத பொண்ணு வாழ்க்கையை இப்படி பண்ணிட்டீங்களேன்னு அழுகுறா...... ஆம் பூரணி, வருண் இவர்களின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்...... இந்த பக்கம் கார்த்தி ப்ரணிதா வின் பெற்றோரும் விவாகரத்து பெற்றவர்கள்...... தந்தையின் வளர்ப்பிலும் தந்தையின் அண்ணன் அண்ணி அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள்.....தந்தையும் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார்...... தாய் எங்கோ தெரியவே இல்லை...... வருண், பூரணியும் தாத்தா பாட்டி தாய்மாமன் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள்..... தாத்தா இப்போது இல்லை பாட்டியும் படுத்த படுக்கையாக உள்ளார்...... திருமணத்திற்கும் வரவில்லை......