Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
அந்த காலண்டரில் தேதி வருடம் 1924 என்று இருந்தது 

ஐயோ.. 100 ஆண்டுகளுக்கு கடந்து வந்து விட்டேனா.. 

இது எப்படி சாத்தியம்.. இது எப்படி நடந்தது 

2084ல் அந்த கிழட்டு அண்ணாமலை தாத்தா தேதி மாத்தி என்னை அனுப்பியதற்கு பிறகு நான் மேஜிக் ஷூவை தொடவே இல்லையே 

அப்புறம் எப்படி தேதி மாறியது.. என்று யோசிக்க ஆரம்பித்தேன் 

சுப்பையா.. கங்காணி.. அசோக் சக்கரவர்த்தி எல்லாம் மாற்றி மாற்றி எட்டி உதைத்தது நியாபகம் வந்தது 

அப்போது கங்காணியின் கால் என் மேஜிக் ஷூ மேல் யதார்த்தமாய் பட்டது நியாபகத்துக்கு வந்தது 

ஓ அவன் என்னை எட்டி உதைத்தபோதுதான் அவன் கால் தவறி என் மேஜிக் சூவில் பட்டு தேதி மாறி விட்டதோ.. என்று தெரிந்து கொண்டேன் 

மெல்ல சுற்றும் முற்றும் பார்த்தேன் 

அது ஒரு பிரிட்டிஷ் பேலஸ் அரண்மனை சமையலறை 

நான் கிட்சன் விட்டு அந்த பிரிட்டிஷ் அரண்மனைக்குள் சென்றேன் 

அங்கே வெள்ளைக்கார துறை சுருட்டு பிடித்து கொண்டு ஸ்டைலாக உக்காந்து இருந்தார் 

அவர் கால் அருகில் கீழே தரையில் அமர்ந்து அவர் கால்களை ஒரு இளைஞன் அமுக்கி விட்டு கொண்டு இருந்தான் 

அந்த இளைஞனை உற்று பார்த்தேன் 

எங்கேயோ இந்த முகத்தை பார்த்த மாதிரி இருக்கே.. என்று நினைத்தேன் 

அட இது என் ஜமீன்தார் தாத்தா மகுட பூபதி அல்லவா.. 

ஓ அவர் சின்ன வயசுல இந்த பிரிட்டிஷ் பேலஸ்லதான் வேலைக்காரனா இருந்திருக்காரா.. என்று நினைத்து கொண்டேன் 

பிரிட்டிஷ் துறை ராபர்ட் கிளைவ் என் இளைஞன் தாத்தாவை பார்த்து எதோ பேசி கொண்டு இருந்தார் 

எனக்கு அவர்கள் பேசியது சரியாக கேட்கவில்லை.. 

மெல்ல அவர்கள் அருகில் சென்று ஒட்டு கேட்டேன் 

ஐயோ அந்த பிரிட்டிஷ் துறை ராபர்ட் கிளைவ் என் இளமை தாத்தாவை பார்த்து சொன்னதை கேட்டு அதிர்ந்தேன் 

தொடரும் 45
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 18-01-2024, 11:56 AM



Users browsing this thread: 14 Guest(s)