Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)

என்ன செய்வது.. எப்படி தப்பிப்பது.. என்று யோசித்து கொண்டு இருந்தபோது.. இந்தியன் பார்ட் 1 திரைப்படம் சமீபத்தில் பார்த்த நியாபகம் வந்தது.. 

அதில் கிழட்டு கமலை கிளைமாக்சில் நெடுமுடி வேணு கிச்சனில் கட்டி போட்டு வைத்து இருப்பார் 

அப்போது கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு இந்தியன் தாத்தா தப்பித்து விடுவார் 

அந்த டெக்னீக்கையே நம்மளும் பாலோ பண்ணுவோம் என்று எண்ணி மெல்ல மெல்ல கமல் ஸ்டைலிலேயே நகர்ந்து நகர்ந்து கிட்சன் பக்கம் போனேன்.. 

அப்படியே மெல்ல மெல்ல குண்டியை தரையில் வைத்து ஊர்ந்து ஊர்ந்து அடுப்பு பக்கம் நகர்ந்தேன்.. 

அடுப்பை பார்த்தேன்.. அதிர்ந்தேன்.. 

காரணம் நான் இருப்பது ஒன்னும் 2024 இல்லை.. 

பலவருடங்கள் பின்னோக்கி போய் இருக்கிறேன்.. 

அந்த காலகட்டத்தில் கேஸ் சிலிண்டரே இன்னும் கண்டு பிடிக்காத காலம்.. 

மூட்டை மூட்டையாக விறகு கட்டை அடுக்கி வைத்து இருந்தார்கள்.. 

கங்காணியின் அக்கா சமையல்காரி கூட விறகடுப்பில்தான் சமையல் செய்து அந்த அரண்மனை ஜமீன் மக்களுக்கு சமையல் செய்து போட்டு கொண்டு இருந்தாள் 

என்னடா இது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து போனேன்..

சமையல்காரி அடுப்பில் உலைவைத்து விட்டு எங்கேயோ போய் விட்டாள் 

எனக்கு கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது.. 

நானும் கங்கானியும் பால் வேனில் இருக்கும்போது கேஸ் தீந்துடுச்சி.. சிலிண்டர் மாத்தணும் என்றுதான் சமையல்காரி அவனை கூப்பிட்டாள் 

ஆனால் இங்கே விறகு கட்டை சமையல் செய்கிறாள்.. 

எனக்கு ஒன்றும் புரியவில்லை.. 

நான் எந்த காலத்தில்தான் இருக்கிறேன்.. என்று குழப்பமாக இருந்தது.. 

கிச்சனில் ஒரு தினசரி காலெண்டர் தொங்கி கொண்டு இருந்தது.. 

அந்த காலண்டரில் தேதியை பார்த்த நான் அதிர்ந்து போனேன்.. 

தொடரும் 44
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 16-01-2024, 09:16 AM



Users browsing this thread: 10 Guest(s)