Non-erotic கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு....
#1
வணக்கம் நண்பர்களே.. கதை படிக்கும் வாசகர்களுக்கு என் மனதில் தோன்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக  தான் இந்த திரியை ஆரம்பித்தேன். 


நான் சொல்லப்போகும் விசயத்தை ஆதரிப்பவர்களும் இருப்பார்கள். நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்களும் கண்டிப்பாக இருப்பார்கள்.


பல வருடங்களாக கதை எழுதுபவர்களும் இங்கு கதை எழுதுகிறார்கள். புதிது புதிதாக கதை எழுதும் ஆர்வத்துடன் திரியை ஆரம்பித்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை எழுதும் பாணியும் இருக்கிறது. சிலர் எழுதும் போது மற்ற கதைகளின் தாக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

சரி கதை எப்படி எழுதினாலும் அவர்களை ஊக்கப்படுவது ஒன்றும் தவறில்லை. நன்றாக ஊக்கப்படுத்தலாம்..

ஆனால் கதையில் ஆழமான விசயம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை,, எங்களுக்கு அப்டேட் வந்தால் மட்டும் போதும் என்பது போல நிறைய கமெண்ட்டுகளை பார்க்க முடிகிறது.


சிரத்தை எடுத்து எழுதும் கதைகளுக்கு கூட கிடைக்காத பாராட்டுகளை சாதாரணமாக போடப்பட்டும் பதிவுகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்.


உடனே இவன் பொறாமைல பேசுறான்டானு நினைக்க வேணாம்.. கண்டிப்பாக கிடையாது..


கண்டிப்பாக ஒவ்வொரு கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. அதே போல கதைகளில் உள்ள குறை நிறைகளை எடுத்துச் சொல்லுங்கள்...

கதைக்கு அப்டேட் போட தாமதம் ஆவது என்பது கதைக்கான குறை கிடையாது.. கதையில் எழுதப்படும் காட்சிகளில் தவறு இருப்பது தான் குறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்‌‌. அது என்னுடைய கதையாக இருந்தாலும் தவறு இருந்தால் ஏற்றுக் கொள்வேன்..


மாங்கு மாங்கு என்று கதை எழுதி அதற்கு சரியான வரவேற்பு கிடைக்காமல் பாதியில் நிறுத்தப்பட்ட கதைகள் இங்கு நிறைய இருக்கிறது.. 

ஆனால் சாதாரணமாக ஒரு காம காட்சியை மட்டும் பதிவிட்டால் அந்தக் கதைக்கு விழுந்து விழுந்து கமெண்ட் செய்கிறீர்கள்.. 

"மிகவும் வித்தியாசமான பதிவு"

"ஆஹா‌.. அற்புதமான பதிவு"

"அட்டகாசமான பதிவு"

"கதை அற்புதமாக செல்கிறது"

"மிகவும் நம்பகதன்மையோடு எழுதுகிறீர்கள்"

"எதார்த்தமாக எழுதுகிறீர்கள்.."



இது போன்ற கமெண்டுகளை படிக்கும் போது சிரிப்பதா இல்லை கோவப்படுவதா என்று தெரியவில்லை.....



இப்படியெல்லாம் கமெண்ட் போடும் போது உங்களுடைய கமெண்ட்டுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது...


உங்களுடைய கணிப்பும், ரசனையும் இவ்வளவு தானா என்று தோன்றுகிறது... 

ஒரு கமெண்ட்டை படிக்கும் போது அந்த நபர் அந்தக் கதையை எந்த அளவிற்கு ரசித்து படித்திருக்கிறார் என்று தெரிய வேண்டும்.. 

ஆனால் இப்போதெல்லாம் போடப்படும் கமெண்ட்டுகள் கண்ணை மூடிக்கொண்டு எதையாவது போட்டு வைப்போம் இல்லைன்னா கதையை நிப்பாட்டிற போறான் என்பது போல இருக்கிறது..


அதாவது அந்த ஆசிரியரை பாராட்டி அப்டேட் போட வைப்பது போல இருக்கிறது..  


"அப்போ எங்களை பாராட்டவே வேணாம்னு சொல்றீங்களா...? கமெண்ட் போடலனாலும் திட்டுறீங்க.. கமெண்ட் போட்டாலும் திட்டுறீங்க.. எங்களை என்ன தான் பண்ண சொல்றீங்க....?? "


கண்டிப்பா இந்த மாதிரி கமெண்ட் இங்கே வரும்.. அதனால தான் நானே அதை போட்டுட்டேன்...


கமெண்ட் போடுறது தப்பு இல்ல.. கண்மூடித்தனமா போடாதீங்கனு தான் சொல்றேன்... உங்களோட கமெண்ட்டு தான் அந்தக் கதைக்கு கிடைக்கிற விமர்சனம்.. அது தரமா இருக்கனும்னு நினைக்கிறேன்..


அதே போல தான் வியூஸ் கிடைக்கிறதும்.... ஒரு கதைக்கு கமெண்ட் வரலனாலும் வியூஸ் வர்றதை வச்சு தான் அந்த ஆசிரியர் கதையை தொடருவதா வேணாமா என்று முடிவு செய்கிறார்..  

என்னுடைய கதைக்கு கூட ஒரு கதையில் வியூஸ் வராமல் நிறுத்திவிட்டேன்.. அது ஒரு உண்மைக்கதை... 

உண்மைக்கதை என்று சொல்லிவிட்டு எதையோ எழுதி வைப்பது என் பழக்கம் இல்லை.. 

அத்தினி என்ற தலைப்பில் நான் எழுதிய கதை 100% உண்மை கதை.. அதற்கு ஆதரவு சுத்தமாக இல்லை.. காரணம் இங்கு காமம் மட்டும் தான் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது..

காமக்கதைக்கு காமம் தேவை தான்.. அதற்காக வெறும் காமம் மட்டுமே இருந்தால் அது சுவைக்காது..

உப்பு, புளி, காரம், என்று அனைத்தும் கலந்தால் தான் உணவு சுவையாக இருக்கும்.. வெறும் உப்பையோ,  வெறும் புளியையோ ,  வெறும் காரத்தையோ அள்ளி கொட்டினால் சாப்பிட முடியுமா....


இறுதியாக நான் சொல்ல விரும்புவது...‌

நீங்கள் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதாவிட்டாலும் நீங்கள் பதிவிடும் சிறிய கமெண்ட் நியாயமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

அனைத்து கதை ஆசிரியரையும் உற்சாகப்படுத்துங்கள்.. கதையில் தவறு இருந்தால் எடுத்து சொல்லுங்கள்.. அது அந்தக் கதையை மேலும் மெறுகேற்ற உதவியாக இருக்கும்..  
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
கதை‌ படிக்கும் வாசகர்களின் கவனத்திற்கு.... - by Kokko Munivar 2.0 - 14-01-2024, 06:57 PM



Users browsing this thread: 1 Guest(s)