12-01-2024, 08:23 AM
(12-01-2024, 07:48 AM)Ragavan 2.O Wrote: நான் அந்த கதையில் சொன்ன கருத்து ஒரு சதவீதம் கூட உங்கள பற்றி இல்லை நண்பா எனக்கு எப்பவும் கதை ஆசிரியர்கள் மீது மரியாதை உண்டு நான் எழுதுவது சாதாரண கதை என்றாலும் எனக்கும் கதை எழுதும் கஷ்டம் தெரியும்
என்னுடைய கோபம் எல்லாம் கதையே எழுதமால் கதைக்கு சஜஷன் பண்ணும் ஆட்கள் பற்றி ஏன் என்றால் நிஷா கதையை அது போன்ற பலர் காமெண்ட் இட்டு தான் கெடுத்தார்கள் அவர்களை போன்ற ஆட்களை தான் திட்டினேன் ,உங்கள ஒரு சதவீதம் கூட நான் சொல்லவில்லை
அதையும் தாண்டி என்னால உங்க மனசு புண்பட்டு இருந்தால் அதுக்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மீண்டும் சொல்கிறேன் நான் உங்களை திட்ட வில்லை
நானும் உங்களை தவறாக புரிந்து கொண்டு விட்டேன் நண்பா.என்னையும் மன்னிக்கவும்.MMMMMMMMM என்ற ID இல் இருந்த நபர் தான் வீணாக சண்டைக்கு வந்தது.நான் அந்த கதையையோ,அல்லது கதையின் ஒரு இடத்தில் கூட விமர்சனம் செய்யவில்லை.ஒரு வாசகர் வந்து மற்ற எழுத்தாளர்களை சிறுமைப்படுத்தி போட்டு இருந்த comment க்கு ஓரு கதையின் ஆசிரியரான நீங்கள் அதை like செய்யலாமா என்று கேட்டேன்.அவ்வளவு தான் அதில் இருந்து வந்தது எனக்கும்,அந்த ஆசிரியருக்கும் வாக்குவாதம்.அதுவும் நாகரீகமான முறையில் தான் சென்றது.இரண்டு மூன்று பதிவுகளுக்கு பிறகு நானும் அமைதியாக விட்டு விட்டேன்.ஆனால் அதற்கு பிறகு தான் fanboy மூலமாக வந்தது பிரச்சினை..அவரின் ஒவ்வொரு பதிவும் என்னையும்,இன்னொருவரும் மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருந்தார்.பிறகு அந்த fan boy I'd மற்றும் இன்னொருவரின் id ஐ அட்மின் block செய்தார்கள்..என் id கூட பிளாக் செய்வதாக இருந்தது. பிறகு அந்த கதையின் ஆசிரியர் மீண்டும் கதையை தொடங்கினார்.வரவேற்கப்பட வேண்டிய விசயம்.திரும்ப ஆரம்பிக்கும் பொழுது சில எழுத்தாளர்கள் fake I'd இல் வந்து நல்ல கதைகளை கெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைத்து தான் தொடங்கினார்.சரி அவர்கள் வாசகர்களுக்கு கதை கிடைத்தால் போதும் என நான் அதற்கு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை..மீண்டும் சில வாசகர்கள் மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டி போடும் பொழுது தான் திட்டு வாங்கி கொண்டு கதை எழுத வேண்டுமா என்று தோன்றிற்று..ஒருவர் கதையை விமர்சனம் செய்யலாம்..ஆனால் அதை எழுதிய எழுத்தாளரை மட்டம் தட்டி பேசுவது என்ன நியாயம்..இந்த சினிமா கதை மோசமாக உள்ளது,எப்படி இந்த மாதிரி ஒரு கதையை இந்த இயக்குனர் இயக்கினார் என விமர்சனங்கள் வரும்..ஆனால் இந்த கதையை இயக்கியவன் முட்டாள் என ஒருவரை யாரும் விமர்சனம் செய்வது இல்லை..