10-01-2024, 11:45 AM
சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்தேன்..
பால் வேனில் இப்போது என்னைத்தவிர யாருமே இல்லை..
அப்படியென்றால்.. அப்படியென்றால்.. மில்க்கி அம்மா என்னைத்தான் பார்க்கிறாளா..
அவள் காதல் புன்னகையை என் மீதுதான் இவ்ளோ நேரம் வீசிக்கொண்டு இருக்கிறாளா..
என்னால் நம்பவே முடியவில்லை..
பால் ஊற்றிக்கொண்டே நைட்டு மொட்டை மாடிக்கு வா.. என்று எனக்கு சைகை காட்டினாள் மில்க்கி அம்மா
ஆனால் அவள் அப்படி சைகை காட்டியது அவ்ளோ கூட்டத்திற்கிடையே எனக்கு மட்டும்தான் புரிந்தது..
மற்றவர்களுக்கு எல்லாம் அவள் ஹேர் ஸ்டைலை சரி பண்ணுகிறாள்..
வியர்வையை துடைத்து கொள்கிறாள் என்பது போலதான் அவள் ஆக்ஷன் இருந்தது..
இரவு வரை காத்திருக்கவேண்டுமா.. என்று யோசித்தேன்..
எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது..
இப்போதே மேஜிக் ஷூவில் இரவு நேரத்தை மாற்றி விட்டால் என்ன என்று தோன்றியது..
ஆனால் அப்படி அவசரப்பட்டால் கால பிரபஞ்சத்தில் எதாவது கோளாறு ஏற்பட்டுவிடும்.. அப்புறம் எல்லாமே வீணாகிவிடும்..
எதையும் பொறுத்திருந்துதான் அனுபவிக்கவேண்டும்.. என்று 2084ல் இருந்த கிழட்டு அண்ணாமலை தாத்தா எனக்கு எச்சரிப்பு கொடுத்துதான் இங்கே இந்த காலத்துக்கு அனுப்பி இருந்தான்..
சரி இரவு வரை இங்கேயே எப்படியாவது பொழுதை கழிப்போம் என்று காத்திருந்தேன்..
டேய் தம்பி.. இங்கே கொஞ்சம் வா.. என்று சமையல் அறையில் இருந்து கங்காணி என்னை பார்த்து கூப்பிட்டான்
சரி நமக்கு எப்படியும் இரவுதான் வேலை இருக்கிறது.. அதுவரை கங்காணி எதற்கு கூப்பிடுகிறான் என்று பார்த்து வருவோம் என்று நினைத்து நான் பால் வேனில் இருந்து இறங்கி அரண்மனை கிட்சன் பக்கம் போனேன்..
திடீரென்று என் முகத்தில் ஒரு அழுக்கு துண்டு போத்தப்பட்டது..
தரதரவென்று என்னை யாரோ இழுத்துக்கொண்டு போவது போல இருந்தது..
டம்மு டும்முன்னு எனக்கு பல கும்மாங்குத்துக்கள் என் முகம் மூடிய மூஞ்சியில் சராமாரியாக விழுந்தது..
அப்படியே அடித் தாங்க முடியாமல் நான் மயங்கி கீழே விழுந்தேன்..
என் மூஞ்சில் இருந்த அழுக்கு துண்டை அகற்றினார் ஒருவர்..
என் முகம் முழுவதும் ரத்த வெள்ளம்..
லேசான மயக்கத்தில் மங்கலாக என்ன முன்னே இருந்த உருவத்தை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்..
ஐயோ.. என்னை ஏன் இந்த உருவம் தாக்கியது.. என்னால் நம்பவே முடியவில்லை..
யாரு என்னை தாக்கியது தெரியுமா?
தொடரும் 42