05-01-2024, 10:59 AM
(05-01-2024, 10:41 AM)Agniheart Wrote: இந்தத் தளத்து வாசகர்கள் 90% பேர் 50+ வயதுள்ளவர்கள்தான் என்று கணித்தேன். நடிகைகள் பட்டியலைப் பார்த்ததும் உறுதியாகிவிட்டது!
நண்பா,இந்த தளத்தில் வந்து படிக்கும் வாசகர்கள் பெரும்பாலும் 80's and 90's Kids ஆக தான் இருப்பார்கள்..ஏனெனில் அவர்களிடையே தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது.அதனால் அவர்கள் மொபைலில் வாசிக்கும் பழக்கத்தை தொடருகிறார்கள்.ஆனால் 2k kids நிலையே வேறு..2k kids எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் காட்சியாகவே சில சமயம் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது..என்ன இருந்தாலும் ஒரு புத்தகத்தை படித்து கற்பனையை ஓடவிட்டு அதில் லயித்து ரசிக்கும் சுகமே தனி தான்..ஒரு பாடலை டிவியில் பார்க்கும் பொழுது அதன் நடனங்கள்,காட்சிகள் இவை இசையை ரசிக்க முடியாமல் கவனத்தை திசை திருப்பும்..ஆனால் அதே பாடலை MP3 வடிவில் கண்ணை மூடி ரசிக்கும் போது அதன் சுகமே தனி.. உதாரணமாக ஊரு சனம் தூங்கிடுச்சு என்ற பாடலை தனிமையாக உட்கார்ந்து கேட்டு பாருங்கள்.அந்த பெண் ஆணை நோக்கி பாடும் ஏக்கம் நன்றாக உணர்வீர்கள்..அந்த இசை அந்த சூழலுக்கே உங்களை இட்டு செல்லும்..