03-01-2024, 09:25 PM
(This post was last modified: 03-01-2024, 09:36 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(03-01-2024, 09:06 PM)vjFun123 Wrote: Spam செய்வதற்கு மன்னிக்கவும்.
இளையராஜா & வடிவேலு
அவர்களுக்கும் தலைக்கணம் இருக்கக் கூடாது. அவரவர் துறையில் சக கலைஞர்களை மதிக்க தெரியா விட்டாலும் மிதிக்க கூடாது..
இந்த இருவருமே ரொம்ப சுய நலவாதிகள். படங்களில் அவர்கள் செயலை பாராட்டலாம். ஆனால் நிஜ வாழ்வில் பிறருக்கு பெரிதாக உதவி செய்ய மறுக்கும் நபர்கள்.
உதவி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அவர்கள் இருக்கும் நிலையில் உதவி செய்தால் கெட்டுப் போக மாட்டார்கள்.
மன்னிக்கவும்.. இளையராஜா பற்றிய தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை..அவர் சில இடங்களில் வார்த்தையை விட்டு இருக்கலாம்..ஆனால் உதவி செய்யாதவர் என்ற கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை..நலிந்து போன தயாரிப்பாளர்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்..இப்பொழுதும் அவர் பாடல்களில் வரும் royalty தொகையில் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு இன்றளவும் கொடுத்து கொண்டு இருக்கிறார்.நன்றாக கவனித்து பாருங்கள்,ஒரு தயாரிப்பாளர் கூட அவரை பற்றி தவறாக பேசி இருக்க மாட்டார்கள்..
பரணி,சிற்பி,பால பாரதி,AR ரஹ்மான்,ஹாரிஸ் ஜெயராஜ்,தேவிஶ்ரீ பிரசாத்,மணி சர்மா போன்றோர் அவர் இருந்த பிரசாத் லேப்பில் பயின்று வந்தவர்கள் தான்..அவரிடம் உள்ள எல்லா உபகரணங்களை மீட்டி கற்று கொள்ளும் வாய்ப்பு அங்கு உண்டு..ஆனால் இன்றைய தலைமுறை இசை அமைப்பாளர்கள் இது போல் எத்தனை பேரை உருவாக்கி உள்ளார்கள் என்று கூற முடியுமா?உள்ளே வஞ்சத்தை வைத்து கொண்டு சிலர் வெளியே நல்லவர் மாதிரி வேஷம் போட்டல் அவர் நல்லவர் ஆகிவிடுவாரா..?வெளியே முரட்டுத்தனமாக பேசினாலும் இளையராஜா உதவி செய்யும் எண்ணம் படைத்தவர்..நானே வடபழனியில் பிரசாத் லேபில் கண் கூடாக பார்த்தவன் 2008 ல்...திரு.விஜயகாந்த் அவர்களும் அதே போல் தான்..என்ன..! நம் தமிழ் நாட்டில் ஒருவர் இறந்தால் தான் அவரின் மதிப்பு வெளியில் தெரிகிறது...