Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)

அந்த போட்டோவில் நானும் மில்க்கி அம்மாவும் மணமக்கள் கோலத்தில் இருந்தோம்.. 

மில்க்கி அம்மா தேவதை போல இங்கிலாந்து இளவரசி டயானா அவள் கல்யாணத்துக்கு போட்டிருந்தது போல கிராண்ட் ராயல் உடையில் இருந்தாள் 

நான் இளவரசன் சார்லஸ் போல ராஜ உடையில் இருந்தேன்.. 

என்னால் நம்பவே முடியவில்லை.. 

நான் எப்படி மில்க்கி அம்மாவுக்கு புருஷனாக இருக்க முடியும்.. இந்த போட்டோ எப்படி இந்த ஆல்பத்தில் வந்தது.. என்று குழம்பினேன்.. 

அந்த போட்டோவையே உற்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.. 

என்னப்பா.. இந்த போட்டோவை மட்டும் இப்படி உத்து உத்து பார்த்துட்டு இருக்க.. என்று மில்க்கி பாட்டி என்னை பார்த்து கேட்டாள் 

இது இது.. யாரு.. என்று தயக்கமாக கேட்டேன்.. 

இவர்தான் அண்ணாமலை.. என்றாள் மில்க்கி பாட்டி 

இது எப்படி சாத்தியம்.. எப்படி நானே எனது அம்மாவுக்கு புருஷனாக முடியும் என்று குழம்பினேன்.. 

அப்போது எங்கள் கிளவுடு அபார்ட்மெண்ட் முன்பாக இன்னொரு எலி டாக்சி வந்தது நின்றது.. 

அதில் இருந்து ஒரு வயதான கிழவன் இறங்கி வந்தான்.. 

அவன் கொஞ்சம் நொண்டி நொண்டி வந்தான்.. 

மில்க்கி பாட்டி ஓடி சென்று அவனை கைத்தாங்கலாக பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தாள் 

எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாற்றீங்க.. 

உங்களுக்கு எதுக்கு இந்த வயசுல வாக்கிங்.. அதுவும் பக்கத்து பிளான்ட்க்கு அவ்ளோ தூரம் லாங் வாக்கிங் போகணுமா.. 

பாருங்க இப்போ கால் வலின்னு நொண்டி நொண்டி நடக்குறீங்க.. 

உள்ள வாங்க.. நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் தம்பி வந்து இருக்கான் பாருங்க.. என்று அந்த கிழவனை உள்ளே அழைத்து வந்தாள் 

ஹலோ எங் மேன்.. ஐ யம் அண்ணாமலை.. என்று அந்த கிழவன் எனக்கு கை கொடுத்தான்.. 

நானும் கைகொடுத்தபடி குழப்பத்துடன் அந்த கிழவன் முகத்தை பார்த்தேன்.. 

ஐயோ.. இவன் முகம்.. இவன் முகம்.. இந்த கிழட்டு முகம் அப்படியே அச்சு அசல் என் முகம் போலவே இருக்கிறதே.. எப்படி எப்படி என்று அதிர்ச்சி அடைந்தேன்.. 

தொடரும் 38
[+] 4 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 01-01-2024, 09:12 PM



Users browsing this thread: 13 Guest(s)