இந்நிலையில் மூன்றாவது நாளிலும் ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், அதிரடியாகக் குறிப்பிட்ட நபர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. பதிவு செய்யப்பட்ட வீடியோவின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர், ``ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒருபோதும் இனவாத கருத்தை ஏற்றுக்கொள்ளாது. அது வீரர்கள், ரசிகர்கள், மைதான ஊழியர்கள் என யார் மீது சொல்லப்பட்டாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. ரசிகர்களின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்றார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது.