29-12-2018, 10:40 AM
போட்டியின் முதல் இரண்டு நாள்களில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் மோசமாகப் பேசியதாக சில குற்றச்சாட்டுகள் சென்றுள்ளது. இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இறங்கியது. போட்டியின் முதல் நாளே புகார்கள் வந்ததால், இரண்டாம் நாள், ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர். ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இந்திய வீரர்களையும், மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த இந்திய ரசிகர்களையும் இனவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் மைதான நிர்வாகத்துக்கும் தகவல் செல்ல, இது மீண்டும் தொடர்ந்தால், குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது