♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(21-08-2023, 11:31 PM)Geneliarasigan Wrote: Episode -30

சஞ்சனா திரும்ப வீட்டுக்கு வந்ததை பார்த்த அவரது அப்பா,

"என்ன சஞ்சனா,வேலைக்கு போய்ட்டு உடனே திரும்ப வந்துட்டே."

நான் வேலைக்கு போகல அப்பா,என் வாழ்க்கை துணையை பார்க்க போறேன்.

யாரு அர்ஜுனா..?

இல்லப்பா ராஜாவை..

வர வர உனக்கு ரொம்ப திமிர் அதிகமாகி விட்டது சஞ்சனா,உனக்கும் அர்ஜூனுக்கும் நிச்சயம் நடந்து முடிந்து விட்டது.அதுவும் உன் சம்மதத்தோட.இப்போ போய் அந்த கேடு கெட்டவனை பார்க்க போறேன் என்று சொல்றியே

நான் எப்போ சம்மதம் கொடுத்தேன்?துர்கா தான் வாயை விட்டா,நான் உங்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று அமைதியா இருந்தேன் அவ்வளவு தான்.

இங்க பாரு சஞ்சனா எனக்கு அதெல்லாம் தெரியாது,நீ அவனை பார்க்க போக கூடாது.என் பேச்சை மீறி போவதாக இருந்தால் நீ உன் அப்பாவையும் இழக்க வேண்டி இருக்கும் பார்த்துக்க

என்னப்பா,சினிமாவில் வருகிற அப்பா மாதிரி மிரட்டி பார்க்கறீங்களா..தெரிந்தோ தெரியாமலோ என் இளமை காலத்தில் எனக்கு நீங்க ஒரு பாதுகாப்பா இருந்து இருக்கீங்க.ஆனா அதுக்கு கூட காரணம் அவன் தான்.அவன் இல்லை என்றால்  நீங்க உயிரோடவே இருந்து இருக்க முடியாது.பெங்களூரில் நீங்க ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்கு போராடிய பொழுது உங்களை காப்பாற்றியது அவன் தான்.

என்னது அவனா? ஒரு நிமிஷம் ஆறுமுகம் அதிர்ந்தார்

ஆமாம்.

சரி இருக்கட்டும்,அதுக்கு நாம நன்றி வேணா சொல்லிக்கலாம்.ஆனால் உன் வாழ்க்கையையே கொடுப்பது முட்டாள்தனம். அர்ஜுனையும்,அவனையும் கம்பேர் பண்ணி பாரு.ராஜாவை விட அர்ஜுன் பல மடங்கு சம்பாதிக்கிறான்.உன்னோட எதிர்காலமும் நல்லா இருக்கும்.

"அப்படியா அப்பா,அர்ஜுனை விட ராஜா பல மடங்கு நல்லவன்.உங்களுக்கு நடந்த விசயத்தை வைச்சே சொல்றேன்.அவன் கிட்ட காசு இல்லை என்ற போதும் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று தன் தங்கச்சி கல்யாணத்திற்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்துட்டு போனான்.அவனவன் ஒரு சின்ன உதவி செய்தாலும் ஊர் பூரா தம்பட்டம் அடிப்பாங்க,ஆனா  நீங்க அவனை அசிங்கப்படுத்தும் பொழுது கூட,அவன் உங்க உயிரை காப்பாற்றியது பற்றி வாயே திறக்கல.இந்த ஒரு விசயத்திலேயே நீங்க புரிஞ்சிக்கலாம் அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்று?
எனக்கு இந்த கார்,பணம் வீடு எதுவும் எனக்கு முக்கியம் இல்ல.அவன் கூட வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் சந்தோஷமாக இருப்பேன்.பைக்கில் அவன் கூட போகிற சுகம் எனக்கு காரில் போவது தந்து விடாது."

"சஞ்சனா நான் உனக்காக நான் இன்னொரு கல்யாணம் கூட பண்ணிக்கல.நேற்று வந்தவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதே"

ஓ,எனக்காக நீங்க கல்யாணம் பண்ணிக்கல ,அம்மா இறந்த பிறகு என்னை வளர்ப்பதற்கு அம்மாவோட அப்பா அம்மா வந்தப்ப நீங்க என்னை அவங்க கூட அனுப்பாம அவங்க கொடுக்கிற காசை மட்டும் மாசா மாசம் வாங்கி கொண்டீங்க.ஏன்?என்னை வளர்க்க தாத்தா பாட்டி கொடுக்கிற காசை வைச்சு பலான வீட்டுக்கு போவது எல்லாம் எனக்கு தெரியாது என்று நினைச்சீங்களா?ஒரு பொண்ணா நான் உங்களுக்கு இதுவரை என்னவெல்லாம் செய்து இருக்கிறேன் என்று என்னால் கூட சொல்லி காட்ட முடியும்.சஞ்சனா ஆறுமுகமா இருந்திருந்தால் செஞ்சதை எல்லாம் இந்நேரம் சொல்லி காட்டி இருப்பா, ஆனா நான் இப்போ சஞ்சனா ராஜாவா இருப்பதால் என்னால சொல்லி காட்ட முடியாது.அது என் புருஷனோட குணம்.

என்ன புருஷன் என்று சொல்ற சஞ்சனா ராஜா என்று சொல்ற,எனக்கு ஒன்னும் புரியல.

ஆமா கல்யாணம் ஆகிற வரை தான் அப்பா பேர் பின்னாடி வரும்.அதுக்கு அப்புறம் புருஷன் பேரு தானே.நான் அவனை எப்பவோ கணவனாக மனதில் வரிச்சாச்சு.அவனுக்காக யாரையும் ஏன் உங்களை கூட தூக்கி எறிய நான் தயங்க மாட்டேன்.நான் வரேன்ப்பா.

சஞ்சனா விறுவிறுவென செல்ல ஆறுமுகம் அரண்டு போய் உட்கார்ந்து இருந்தார்.

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி.இயற்கை எழில் சூழ்ந்த இடம்.பதினெண் சித்தர்கள் வாழக்கூடிய இடம் என்று சொல்வார்கள்.பல அரிய வனவிலங்குகளின் புகலிடமும் அதுவே.பல அதிசயங்களை உள்ளடக்கிய இடமும் அதுவே.ஒரு தடவை அங்கே உள்ள மகாலிங்கத்தை தரிசிக்க சென்றான்.அப்பொழுது அங்கே உள்ள மடத்தில் அன்னதானம் சாப்பிட்டுவிட்டு அங்கு அவன் நன்கொடை கொடுக்கும் பொழுது அங்கு இருந்த சாமியார் அவன் கைரேகையை பார்த்து "தம்பி நீ இங்கே வந்து விடுகிறாயா,எனக்கு அப்புறம் இங்கு இறை சேவையை செய்ய சரியான ஆள் நீ தான்.உன் மூலமாக இந்த மடம் பெரும் அளவுக்கு வளர்ச்சி பெறும்." என்று கூறினார்.ராஜா இறைவனை நம்புவான்,ஆனால் சாமியாரை நம்ப மாட்டான்."சாமி எனக்கு துறவறம் எல்லாம் விருப்பம் இல்லை.கல்யாணம் பண்ணி கொண்டு வாழ தான் ஆசை "என்று வந்து விட்டான்.ஆனால் அப்பொழுது சாமியார் அவனை பார்த்து சிரித்து கொண்டே" நீ இங்கே என்னை தேடி வரும் காலமும் வரும்."என்று சிரித்தார்.அதே போல் அவன் இதோ இப்பொழுது அந்த சாமியாரை சந்திக்க சதுரகிரி மலை ஏறி கொண்டு இருந்தான்.

டேய் பாண்டி,"அன்ன தானத்திற்கு சாப்பாடு ரெடி ஆகி விட்டதா?சாமியார் கேட்க

ஆயிட்டே இருக்கு சாமி.

டேய் சீக்கிரம் ,யாரும் வந்து சாப்பாடு இல்லை என்று திரும்பி போக கூடாது.

ஏன் சாமி,நான் ஒன்னு கேட்கறேன் என்று தப்பா நினைக்க கூடாது.இங்கே நான் தானே எல்லா வேலையும் பார்ப்பது.?உங்களுக்கு அப்புறம் இந்த மடத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்கிட்ட கொடுக்க கூடாதா?வெளியில் இருந்து ஆளை தேடறீங்க.

டேய் அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது.நான் சில வருஷத்துக்கு முன்னாடி ஒரு பையனோட கை ரேகையை பார்த்தேன்.அற்புதமான பிரம்மச்சரிய ஜாதகம்,அவன் மட்டும்  மூலாதாரத்தில் உள்ள அவன்  விந்துவை சகஸ்ரஞானத்திற்கு கொண்டு சென்று விட்டால் போதும் ,அவனால் அஷ்டமா சித்திகளையும் அடைந்து விட முடியும்.அப்புறம் அவனை இந்த மடத்தின் பீடாதிபதி ஆக்கி விட்டால் நம் மடத்தின் புகழ் உச்சிக்கு சென்று விடும்.

என்ன சாமி நீங்க என்னென்னவோ பேசறீங்க,விந்துவை உச்சிக்கு கொண்டு செல்வது என்பது சாதாரண காரியமா?அது எவ்வளவு கஷ்டம்.இதில் நிறைய பேர் மண்டை குழம்பி பைத்தியமா ஆயிருக்காங்க.

உலகத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் சில பேரை தியாகம் செய்வது தப்பு இல்லை.நீ இந்த விசயத்திற்கு சரிபடமாட்டே.நான் கொடுக்கிற வேலையை மட்டும் பாரு.

"சாமி"என்ற அழைத்த குரல் கேட்டு திரும்ப அங்கு ராஜா நின்று கொண்டு இருப்பதை பார்த்து சாமியார் முகம் மலர்ந்தது.

வாப்பா நீ வருவே என்று நினைச்சேன் வந்துட்டே

சாமி நான் கல்யாணம் பண்ணி வாழ தான் ஆசைப்பட்டேன்.உனக்கு காதல் வரும்,ஆனால் கல்யாணத்தில் போய் முடியாது என்று நீங்க சொன்ன மாதிரி தான் நடந்தது.அதே நேரம் காதல் மூலமா நிறைய பிரச்சினைகள் வர கூடும் என்று நீங்க சொன்னது முற்றிலும் உண்மை.

எப்படியோ புரிஞ்சிக்கிட்டா சரி தான்.இப்போ என்ன முடிவு பண்ணி இருக்க

சாமி,நான் துறவறம் மேற்கொள்ளலாம் என்று இருக்கேன்.ஆனா எனக்கென்று சில கடமைகள் இருப்பதால் அதை முடித்து விட்டு வர 2 வருஷம் அவகாசம் மட்டும் தேவை.

சாமி என்று என்னை கூப்பிடாதே,குரு என்று தான் கூப்பிடனும்.உனக்கு என்ன கடமை பாக்கி இருக்கு மட்டும் சொல்லு

குரு,என் தங்கைக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்,அப்புறம் என் அம்மாவின் வாழ்க்கைக்கு கடைசி வரை எந்த சிரமமும் இல்லாமல் வாழ வழிவகை செய்யனும்.

துறவறம் என்பது எல்லாவற்றையும் உதறி விட்டு வருவது தானே,சரி பரவாயில்லை நான் உனக்கு ஒரு வாக்கு அளிக்கிறேன்.நீ இந்த மடத்தில் உடனே சேருவதாக இருந்தால் எனக்கு தெரிந்த செல்வந்தர் ஒருத்தர் கிட்ட சொல்லி உன் குடும்பத்தை தத்து எடுக்க சொல்றேன்.நீ கேட்டது ரெண்டுமே கிடைக்கும்.ஆனா கடைசி வரை நீ இந்த மடத்தில் தான் இருக்க வேண்டி வரும்.உனக்கு ஓகேவா..

சரிங்க குரு.

பாண்டி இங்கே வாடா,சீக்கிரமே பூஜைக்கு ரெடி பண்ணு.நான் ராஜாவுக்கு இன்றே தீக்ஷை அளிக்க ஏற்பாடு செய்.ராஜா இதற்கு மேல் நீ என்னுடைய சிஷ்யன்.நீ இதற்கு மேல் அசைவம் சாப்பிடவே கூடாது.சாத்வீகமான உணவுகளை அளவாக தான் எடுத்து கொள்ள வேண்டும்.ஒவ்வொரு பயிற்சியா நான் உனக்கு சொல்லி தர போறேன்.அதற்கேற்ப உன் உடம்பை தயார் செய்ய நீ கடுமையா உழைக்க வேண்டி இருக்கும்.

என் மனசில் இருக்கும் பொண்ணை மறக்க நான் எந்த தியாகமும் செய்ய தயார் குரு.

ராஜா நீ இங்கே வா.

ராஜா அருகில் வந்தவுடன்,அவன் கைரேகையை பார்த்து திருப்தி அடைந்து, அவன் அடிவயிற்றில் கை வைத்து அழுத்தி பார்த்தார்.பின் அவன் கண்ணை நோக்குவர்மத்தை பயன்படுத்தி சில கேள்விகளை அவன் உள்மனதிடம் கேட்க அதுவும் அவருக்கு பரம திருப்தியாக இருந்தது.

ஆஹா நெடுங்காலமாக நான் தேடி கொண்டு இருந்த என் மடத்திற்க்கான வாரிசு கிடைத்து விட்டது என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டார்.

பூஜைகள் ஜகஜோராக நடந்து கொண்டு இருந்தது.ராஜாவுக்கு தீக்ஷை அளிக்க குரு ஒவ்வொரு பூஜையாய் செய்து கொண்டு இருந்தார்.அவனுக்கு  மாலை அணிவிக்க குரு சென்ற பொழுது அவரிடம் இருந்த மாலையை இளமங்கையின் கைகள் தட்டி பறித்து ராஜாவின் கழுத்தில் அணிவித்தது.அது வேறு யாருமில்லை சஞ்சனா தான்.

ஏய் பொண்ணு,என்ன காரியம் செய்ஞ்சுட்ட,இதுவரை செய்த பூஜை எல்லாம் நொடியில் பாழ்படுத்தி விட்டாயே.

சாமி,இவன் எனக்கானவன்.எதுக்காகவும் நான் இவனை விட்டு கொடுக்க மாட்டேன்.

ராஜா பேச வாயெடுக்க சாமியார் கை அமர்த்தினார்.

அங்கு இருந்த ஒருவரிடம்," நீ ராஜாவை கோவிலுக்கு கூட்டிட்டு போ.நான் இந்த பொண்ணு கிட்ட பேசிக்கிறேன்."

ராஜா அவருடன் சென்ற பிறகு,இப்ப சொல்லுமா என்ன வேணும்?

சாமி நாங்க ரெண்டு பேருமே காதலிக்கிறோம்.சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்க போறோம்.நீங்க அவனை என்கிட்ட கொடுத்துடுங்க.

அவன் உனக்கு உபயோகப்பட மாட்டான்மா,சொல்றது புரிஞ்சிக்க அவனுடையது பிரம்மச்சரிய ஜாதகம்.எந்த பெண்ணுடன் சேர மாட்டான்.அப்படி சேர ஆசைப்பட்டால் வீணாக அவனுக்கு துன்பம் தான் வந்து சேரும்.

இல்ல சாமி,அவன் எனக்கு தான் சொந்தம் என்று உள்மனது அடிக்கடி சொல்லி கொண்டே இருக்கிறது.நான் உள்மனதை திடமாக நம்புகிறவள்.

ம் இருக்கலாம்.அவனோட 32 வயது வரை சில கல்யாண ரேகைகள் இருந்தது.ஆனா இன்றோடு இரவு 8.39 மணிக்கு அவன் 32 வயது பூர்த்தி ஆகி 33 வயது ஆரம்பம் ஆகிறது.இனிமேல் முழுக்க முழுக்க அவன் ஜாதகம் பிரம்ச்சரியம் தான்.இனிமேல் அவன் கல்யாண வாழ்க்கைக்கான காலம் கடந்து விட்டது.நான் அவன் கைரேகையை உற்று பார்த்தேன்.அப்புறம் நோக்கு வர்மம் மூலம் சில கேள்விகளை அவன் உள்மனதிடம் கேட்டேன்.அவன் விந்தணுவை இன்னும் இதுவரை வெளியவே விடவில்லை.ஒருமுறை நீங்கள் இருவரும் இணை சேர காலம் ஒரு வாய்ப்பை தந்தது.அப்படி நீங்கள் இணை சேர்ந்து இருந்தால் அவன் எனக்கு உபயோகபட்டு இருக்க மாட்டான்.

சாமி உங்களுக்கு இதே மாதிரி வேறு யாராவது கிடைக்கலாம் இல்ல.என் ராஜாவை என்கிட்ட கொடுத்துடுங்க என கெஞ்சினாள்.

அது முடியாது சஞ்சனா,சாமியார் திடமாக மறுத்தார்.

சாமி என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்.

அதையும் நான், அவன் உள்மனதிடம் பேசும் போது அறிந்து கொண்டேன்.அவனோட ராசி மகர ராசி,நட்சத்திரம் உத்திராடம்.அப்படியே ஐயப்ப சாமி ராசி மற்றும் நட்சத்திரத்தில் பொறந்து இருக்கான்.முக்கியமான விசயம் அவனோட 32 வயது வரை அவன் விந்து என்கிற தங்கத்தை வீணாக்கவே இல்லை.எனக்கு தேவையான மூன்று விசயமும் அவன்கிட்ட இருக்கு.விந்துவை  மட்டும் அவன் ஆறு சக்கரங்கள் வழியே சகஸ்ரஞானத்தில் ஏற்றி விட்டால் போதும் அவனுக்கு அட்டமாசித்திகள் கைவரப்பெற்று விடுவான்.அவன் மூலம் இந்த மடம் பெரும் விருத்தியாகும்.என்னிடம் ஒரே ஒரு சித்தி மட்டுமே உள்ளது.அவனை வைத்து நானும் மற்ற சித்திகளை அடைந்து விடுவேன்.இப்போ நீ கிளம்பறது தான் ரெண்டு பேருக்கும் நல்லது.

ஏன் சாமி உங்க சுயநலத்திற்காகவும்,உங்க மடத்தின் வளர்ச்சிக்காக எங்க ரெண்டு பேரை பிரிக்கிறீங்களே,உங்களுக்கே இது நியாயமா இருக்கா.?ஆதங்கத்துடன் சஞ்சனா கேட்டாள்.

நான் சுயநலம் பிடிச்ச சாமியார் தான் சஞ்சனா,ஆனா இதில் அவன் நலனும் இருக்கு.

நான் உங்களை பற்றி உண்மையை சொல்லி அவனை கூட்டிட்டு போறேன்.

"முடிந்தால் முயற்சி பண்ணு"சாமியார் சிரித்தார்.

சஞ்சனா கோவிலுக்கு செல்ல,ஒளிந்து இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த பாண்டி அவள் பின்னே ஓடினான்.

சஞ்சனா சாமியாரிடம் இருந்து ராஜாவை காப்பாற்றினாளா?

[Image: images-59.jpg]

Aiyoo natla intha saamiyar tholainga thaangala pa, yaenga ponaloom yaethavathu sollikittu vanthiruvaanga.
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Lashabhi - 30-12-2023, 05:47 PM



Users browsing this thread: 34 Guest(s)