♥️ நினைவோ ஒரு பறவை ❤️(நிறைவுற்றது)
(02-08-2023, 09:58 PM)Geneliarasigan Wrote: Episode - 11

ஹே good morning சீனி,நேற்று  promoter activity எப்படி போச்சு?promoter ஒழுங்கா வேலை செய்தானா?

எங்க வேலை செய்தான் ராஜா,அவன் சுத்த வேஸ்ட்.அவன் என்ன பண்ணான் தெரியுமா ?அவன் கிட்ட ஸ்டிக்கர்ஸ் கொடுத்துட்டு no parking போர்டில் பார்த்து ஒட்டு என்று சொல்லிட்டு போனேன்.ஒரே ஒரு appointment நான் போய் விட்டு வருவதற்குள் அவன் டீ கடையில் உட்கார்ந்து முட்டை போண்டா சாப்பிட்டுகிட்டு இருக்கான்.

"பசியா இருந்து இருக்கும்,சாப்பிட்டு கொண்டு இருந்து இருப்பான்."

"அப்படி தான் ராஜா நானும் நினைச்சேன்.என்னடா ஸ்டிக்கர்கள் எல்லாம் ஒட்டி ஆச்சா என்று கேட்டால் ஒட்டி ஆச்சு என்று சொல்றான்.வெறும் அரை மணி நேரத்தில் 500 ஸ்டிக்கர் எப்படி மச்சான் ஒட்ட முடியும்."

"கண்டிப்பாக ஒட்ட முடியாது.மிஞ்சி போனா நூறு ஸ்டிக்கர் ஒட்டலாம்."

ம் அது தான் ராஜா, எங்கடா ஒட்டிய ஸ்டிக்கர் காண்பி என்று கூட்டி போனால் நூறு ஸ்டிக்கர் கூட ஓட்டல.மிச்ச ஸ்டிக்கர் எங்கடா ஒட்டின என்று கேட்டால் பேந்த பேந்த முழிக்கிறான்.அப்புறம் முட்டை போண்டா எப்படிடா வந்துச்சி என்று கேட்ட பிறகு தான் உண்மையை சொல்றான். ஸ்டிக்கரை எடைக்கு போட்டு தான்,முட்டை போண்டா வாங்கினேன் என்று சொல்றான்.

"சும்மாவா விட்டே அவனை சீனி,complaint பண்ண வேண்டியது தானே"

அதற்கு வாசு,சீனி என்ன பண்ணான் என்று நான் சொல்றேன்.அவன்கிட்ட இருந்து முட்டை போண்டா பிடுங்கி இவன் தின்னு ஏப்பம் விட்டுட்டு,அது தான் உனக்கு தண்டனை என்று சொல்லி விரட்டி விட்டுட்டான்.

பதிலுக்கு சீனி"டேய் வாசு,என்னை நீ குறை சொல்றியா,போன வாரம் newspaper activity பண்ணப்போ, நியூஸ் பேப்பரை எடைக்கு போட்டு சரக்குக்கு காசு உஷார் பண்ணவன் தானே நீ!

ராஜா இருவரிடம் "உண்மையை சொல்றவங்க தெய்வத்திற்கு சமம் என்று பெரியவங்க சொல்லுவாங்க,ரெண்டு பேரும் இப்படியே மாறி மாறி போட்டு கொடுத்துக்கிறீங்களேடா .

என்ன பண்றது ராஜா,நீ target achieve பண்ணி incentive வாங்கிடுவே,ஆனா எங்க நிலைமை அப்படியா,நாங்க வாங்குற சம்பளம் அப்படியே பொண்டாட்டிகிட்ட கொடுக்க வேண்டியதா இருக்கு. கைச்செலவுக்கு இந்த மாதிரி தானே கை வைக்க வேண்டி இருக்கு.சரி ராஜா எங்கே இன்னிக்கு ராஜேஷ் வரலையா?

இல்ல சீனி,அவன் இன்னிக்கு வீக் ஆஃப்,

அப்ப என்ஜாய் பண்ணட்டும்.டிஸ்டர்ப் பண்ண வேணாம்.ராஜா swiggy வருது.

என்னது swiggy யா ?

Food டெலிவரி மச்சான்.என்ன ரொம்ப லவ் பண்றளோ!

இல்ல மச்சான் கேட்டுட்டேன்,லவ் எல்லாம் கிடையாது என்று சொல்லிட்டா.சும்மா ஒரு அக்கறை தானாம்.அவ கொடுக்கிற சாப்பாட்டிற்கு அவளுக்கு பிடித்த  கிஃப்ட்டா ஏதாவது வாங்கி கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன்.

முருகேஷ் அண்ணன் வழக்கம் போல் வந்து கொடுத்து விட்டு போக சாயங்காலம் சஞ்சனாவும்,ராஜாவும் மீண்டும் சந்தித்தனர்.

சஞ்சனா இன்னிக்கு சப்பாத்தி சூப்பர்.அதுக்கு தக்காளி சட்னி வித்தியாசமான சுவையாக இருந்தது.இது வரை நான் அந்த மாதிரி சாப்பிட்டதே கிடையாது.

அது தக்காளி சட்னியில் கொஞ்சம் கடலை மாவு சேர்த்தால் சுவை இன்னும் அதிகமாகும்.நான் எப்பவுமே அப்படி தான் செய்வேன்.

சூப்பர் சஞ்சனா,உன்னை கட்டிக்க போறவன் கண்டிப்பாக குடுத்து வைச்சவன் தான்.

ராஜா,எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும்.இன்னிக்கு கொஞ்சம் என்னை அங்கே கூட்டி போக முடியுமா?

அவ்வளவு தானே,நீ எந்த பீச் மட்டும் சொல்லு,பெசன்ட் நகரா,இல்லை மெரினாவா?

மெரினாவே போலாம்.

முதல் முறை அவள் அவனோடு கை கோர்த்து கொண்டு மணலில் நடக்க,அவனுக்கு பூட்டி வைத்த உணர்வுகள் மேல் புதிய சிறகு முளைத்தது.

கடல் அலையை பார்த்ததும் சின்ன குழந்தை போல் துள்ளி குதித்து ஓடினாள்.கடலும் ஓடி வந்த அவள் பாதத்தை ஆசையுடன் நனைத்து சென்றது.
அவள், அவன் விரல்களுடன் கை கோர்த்து தோளை உரசிக்கொண்டு கடலின் அலையை அவள் ரசிக்க,அவனுக்கு ஒரு பனிமலை,ஒரு எரிமலை சேர்ந்து உள்ளுக்குள் பொங்கி வெடித்தது.

அவளின் பாதத்தை தழுவியது போதும் இன்னும் மேலே சென்று நனைக்கலாம் என்ற ஆவலோடு கடல் அலைகள் உற்சாகத்தோடு,பெரிய பெரிய அலையாக ஓடி வர,பெரிய அலையில் இடுப்பளவு தண்ணிரில் சஞ்சனா நிலைதடுமாறி கீழே விழும் போது,ராஜா அவள் மெல்லிய இடுப்பில் கை வைத்து தாங்கி பிடித்தான்.அவன் விரல்கள் அவள் இடுப்பில் பட்டவுடன் அவள் மேனி சிலிர்த்தது.இருவரும் ஒருவரை ஒருவர் நேரம் போவதே தெரியாமல் இமைக்காமல் பார்த்து கொண்டு இருக்க,மற்றொரு அலை வந்து இருவரையும் கீழே தள்ளி முழுக்க நனைத்தது.

சஞ்சனா அணிந்து இருந்த மஞ்சள் சுடிதார் முழுக்க நனைந்து போனது.

ராஜா எழுந்து கை கொடுக்க,அவளும் வெட்கத்துடன் அவன் கைகளை பிடித்து எழுந்தாள்.

"என்னடா தண்ணிக்குள்ள ஜலபுலஜங்கா என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க" ,ராஜேஷ் சிரித்து கொண்டு நின்று இருந்தான்.

"அடப்பாவி நாங்க ரெண்டு பேர் என்ன பண்றோம் என்பதை வேடிக்கை பார்த்து கொண்டு சிரித்து கொண்டு இருக்கியா நீ"

"டேய் நான் மட்டும் இல்ல, ஊரே வேடிக்கை பார்த்து சிரிச்சுச்சு.அப்படியே என்னவோ லைலா மஜ்னு மாதிரி ரெண்டு பேரும் போஸ் கொடுத்துட்டு நின்னுட்டு இருக்கீங்க."

"அது சரி நீ இங்கே எங்கடா வந்தே,"

"நான் என் பொண்டாட்டி,புள்ளையோடு லீவில் என்ஜாய் பண்ண வந்தேன்.சார் எதுக்கு வந்தீங்க என்று தெரிஞ்சுக்கலாமா"

நான் நான்....

நீ நீ நீ .... தான் சொல்லு

"சஞ்சனா ஆசைப்பட்டா அதனாலே கூப்பிட்டு வந்தேன்."

"டேய் சும்மா ரீல் உடாதே,நீ கூட்டிட்டு வந்துட்டு அவள் மேல் பழியை போடாதே.பச்ச மண்ணுடா அவ"

"டேய் நான் பொய் சொல்லல,நீ வேணுமின்னா சஞ்சனா கிட்டேயே கேளு."

"நீ சொல்லு தங்கச்சி,நீ தான் ஆசைப்பட்டீயா"

"இல்ல அண்ணா,இவர் தான் இன்னக்கி பாடம் போர் அடிக்குது,பீச்சுக்கு போலாமா என்று கேட்டார்.சரி என்று வந்தால் அங்கே இங்கே கை வைச்சு,தண்ணியில் இழுத்து போட்டு விளையாடி எப்படி என்னை நனைச்சுட்டார் பாருங்க",என்று சிணுங்க

டேய் ராஜா,இந்த பூனை பால் குடிக்கும் என்று பார்த்தால் பீரே அடிக்கும் போல இருக்கே.ரெண்டாவது நாளே பீச்சா,நீ தேறிடுவா மச்சான்.

"டேய் அவ பொய் சொல்றாட,நீ அவளை நம்பாதே."

"இந்த விசயத்தில் பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்க மச்சான்,அதுவும் என் தங்கச்சி பொய் சொல்லவே மாட்டா"என்று ராஜேஷ் கூறியவுடன்

சஞ்சனா ராஜா பக்கம் திரும்பி,நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காட்டி கண்ணடித்தாள்.

என்னிக்குடா ஆம்பள பேச்சை நம்பி இருக்கீங்க,

அண்ணா அவர் கிடக்கறாரு விடுங்க,நீங்க உங்க பொண்டாட்டியை அறிமுகம் செய்து  வைங்க, சஞ்சனா கூறியவுடன்,

மூவரும் ராஜேஷ் மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

ராஜேஷ் அவன் மனைவியிடம், சஞ்சனாவை அறிமுகப்படுத்தி அவன் மனைவியின் காதில் ஏதோ கிசுகிசுக்க,உடனே அவன் மனைவி சஞ்சனாவிடம் கை நீட்டி advance congratulations என்று வாழ்த்து கூறினார்.

எதுக்குடா congratulations?ராஜா கேட்டான்.

ராஜேஷ் அதற்கு,அது ரெண்டு பொம்பளைக்குள்ள இருக்கிற விசயம்.அதை எல்லாம் நீ கேட்க கூடாது.

சஞ்சனா ராஜேஷ் குழந்தையை வாங்கி கொண்டு,
அண்ணா குழந்தை பேர் என்ன?

"யாழினி"

சூப்பர் தமிழ் பேரு அண்ணா,அப்படியே குழந்தை உங்களை உரிச்சு வைச்சு இருக்கு.

நால்வரும் பேசி சிரித்து அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது,சஞ்சனா ராஜாவை பார்த்து கொண்டே, அவன் பார்க்கும் போது குழந்தையின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

"சரி ராஜேஷ், டைம் ஆச்சு,கிளம்பலாமா?"

"சரி, நீ சஞ்சனாவை கூட்டிட்டு கிளம்பு"

ராஜா,சஞ்சனாவை நேராக நாகராஜ் kulfi கடைக்கு கூட்டி சென்றான்.ஒரு சின்ன tricycle தான்.அதை சுற்றி மக்கள் ஈ போல் அவரிடம் kulfi வாங்க மொய்த்து கொண்டு இருந்தனர்.

சஞ்சனா இங்கே kulfi ice நல்லா இருக்கும்.நானும்,ராஜேஷிம் இங்கே வந்தா கண்டிப்பாக சாப்பிடாமல் போக மாட்டோம்.

"அப்போ அவரையும் கூப்பிட்டு இருக்கலாமே"

அவன் குழந்தைக்கு ஐஸ் கிரீம் ஆகாது சஞ்சனா.கூட்டி வந்தால் குழந்தை அடம் புடிக்கும்.அதனால் தான் அவன கூப்பிடல.இரு நான் போய் வாங்கிட்டு வரேன்.

ஒரு இலை கப்பில் வைத்து kulfi ice கொண்டு வந்து கொடுத்தான்.சாப்பிடு சஞ்சனா,அருமையாக இருக்கும். பாதாம்,முந்திரி தூக்கலாக இருக்கும்.

[Image: IMG-20230802-180805.jpg]
சஞ்சனா வாயில் வைத்து சப்பி,"ம் செமையா இருக்கு."

பாதி ஐஸ்கிரீம் இருவரும் சாப்பிட்டு முடிக்க,சஞ்சனா அவன் கையில் இருந்த ஐஸ்க்ரீமை வாங்கினாள் இல்லை பிடுங்கினாள்.அவள் ஐஸ்க்ரீமை அவனிடம் கொடுத்து விட்டு அவன் எச்சில் ஐஸ்க்ரீமை சாப்பிட தொடங்க ,அவனும் சிரித்து கொண்டே அவள் எச்சில் பட்ட ஐஸ் க்ரீமை சுவைக்க தொடங்கினான்.

"ம்,நான் சாப்பிட்ட ஐஸ்க்ரீமை விட இது சுவையாக இருக்கே"என்று கூற சஞ்சனாவிற்கு வெட்கம் வந்தது.

"ம் இருக்கும்டா, இருக்கும்"என்ற குரல் கேட்டு திரும்பி பார்க்க,ராஜேஷ் மீண்டும் நின்று இருந்தான்.

டேய் என்னடா எங்களையே சுற்றி சுற்றி வந்துட்டு இருக்கே.

நான் உன்கிட்ட பேச மாட்டேன் மச்சான்.வர வர நீயும் பொய் பேச ஆரம்பிச்சுட்ட,அவளை வீட்டுக்கு கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்லிட்டு நேராக ஐஸ்கிரீம் கடைக்கு கூப்பிட்டு வந்து இருக்கே,ஏன் சஞ்சனா இங்க ராஜா என்ற ஒருத்தன் தான் ஒரு அரிச்சந்திரனா இருந்தான்.அவனையும் கெடுத்து விட்டுட்டேயே

நான் ஒண்ணுமே பண்ணல அண்ணா,எனக்கு ஒன்னும் தெரியாது என்று சஞ்சனா அப்பாவியாய் முகத்தை வைத்து கொள்ள,

ராஜா அவனிடம் "டேய் உன் கோபம் தீர நான் என்னடா பண்ணட்டும்"

ஒழுங்காக எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடு.ஒன்னு இல்லை ரெண்டு வாங்கி கொடு.

ராஜா வாங்கிட்டு வந்து கொடுக்க,

டேய் நீ இங்கே தான் இருப்பே என்று ,நானே என் பொண்டாட்டியை எப்படியோ பொய் சொல்லி ஆட்டோவில் ஏற்றி விட்டு வந்தால் ,நான் நினைச்சபடியே இங்கே நின்னுட்டு இருக்கீங்க,இதுல romance வேற.

இது தான் எங்க ஏழு வருஷ friendship சஞ்சனா,அடுத்து நான் என்ன செய்வேன் என்று இவன்  சரியா சொல்லிடுவான்.மனைவி கடவுள் கொடுத்த வரம் என்பார்கள்.ஆனால் நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரம்.எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நான் ஒவ்வொரு நிமிஷமும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பான்.

நானும் தான் என்று சஞ்சனா மனதில் சொல்லி கொண்டாள்.

டேய் அது தான் ஐஸ் வாங்கி கொடுத்தாச்சு இல்ல.அப்புறம் என்ன மேற்கொண்டு ஐஸ்.போதும் உடுடா. மழை வர மாதிரி இருக்கு,ரெண்டு பேரும் வீட்டுக்கு சீக்கிரம் கிளம்புங்க.

சரி ராஜேஷ் நான் நாளை appointment முடித்து விட்டு நேராக YMCA கிரவுண்ட் வரேன்.

நீ மட்டும் வராம போனே,அப்புறம் உன்னை சும்மா கூட விட மாட்டேன்.

கண்டிப்பாக வரேன் ராஜேஷ்.

ராஜா ,சஞ்சனாவை வீட்டில் விடும் பொழுது,
சஞ்சனா அவனிடம் ஒரு application கொடுத்தாள்.இதை fill பண்ணி monday கொடுங்க

என்ன இது,

Madras university application இது.இப்போ உனக்கு இருக்கிற qualification வச்சு TL மட்டும் தான் ஆக முடியும்.மேற்கொண்டு அடுத்த லெவல் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக டிகிரி அவசியம்.அதுதான் பகுதி நேரமாக டிகிரி சேருவதற்கான அப்பிளிக்கேஷன் இது.அடுத்த இரண்டு வருடத்தில் நீங்கள் கண்டிப்பாக AM ஆக வேண்டும்.

"சஞ்சனா ஒரு நிமிஷம்"

"என்ன சொல்லுங்க"

"உன்கிட்ட முக்கியமா ஒரு விசயம் சொல்லணும்"

"ம் சொல்லுங்க"

"இப்போ இல்ல,ஓணம் அன்னிக்கு நான் கண்டிப்பாக சொல்றேன்."

சஞ்சனா நெருங்கி வந்தாள்.அவன் நெற்றியில் தன் ஸ்ட்ராபெர்ரி உதடுகளை அழுத்தமாக சில்லென்று பதித்தாள்.சுற்றிலும் உள்ள உலகத்தை இருவருமே மறந்தார்கள்.இரண்டு நிமிடம் தொடர்ந்த அந்த ஒரு முத்தமே அவள் காதலை அவனுக்கு பறைசாற்றியது.

"நீங்க சொல்லும் அந்த வார்த்தைக்காக நான் அனுதினமும் காத்து இருக்கிறேன்"என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்,
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்
நீ காதலா... இல்லை கடவுளா...
புரியாமல் திணறிப் போனேன்.

உனக்காக ஒரு பெண் இருந்து
விட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பி
விட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம் திறக்காத கனவுகள் திறக்கும்

[Image: IMG-20230731-WA0009.jpg]

Wow Wow Wow yaenna oru romantic story da, vaerra level, aiyoo antha Rajesh character pull arikka vaekkeethu appadiyae yaen friend velu Kumar niyabagum paduthiduchu. Super
[+] 1 user Likes Lashabhi's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️நினைவோ ஒரு பறவை♥️ - by Lashabhi - 30-12-2023, 12:44 PM



Users browsing this thread: 23 Guest(s)