Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மேஜிக் ஷூ (காலப் பயண கதை)
இப்போது தான் அவள் முகத்தையும் உருவத்தையும் தெளிவாக பார்த்தேன்.. 

கிழவி 60 வயதிலும் சும்மா கின்னுன்னு இருந்தா.. 

தூரத்துல பார்த்த போது கொஞ்சம் கிழடு தட்டியது போல இருந்தது.. 

பாட்டி உங்க வீட்டுல போட்டோ ஆல்பம் இருக்கா.. என்று கேட்டேன்.. 

போட்டோ ஆல்பமா.. அப்படின்னா என்ன.. என்று பால்மா எங்கள் இருவருக்கும் இடையே வந்தது கேட்டாள் 

அதெல்லாம் உனக்கு தெரியாது பால்மா.. 

இப்போதான் எல்லாம் பவர்புல் ஸ்மார்ட் சிப் நம்ம உள்ளங்கை புஜத்துல நம்ம ரோபோ அரசாங்கம் பதிச்சி வச்சி இருக்காங்களே.. 

அதுல கூட நீ ஸெல்ப்பி எடுப்பியே.. 

அந்த மாதிரி எங்க காலத்துல அந்த காலத்துல போட்டோ கேமரான்னு ஒன்னு இருக்கும்.. அதுல நாங்க போட்டோ எடுத்து பிரிண்ட் போட்டு ஆல்பம் போட்டு வச்சுக்குவோம்.. என்று தன்னுடைய பேத்தி பால்மாவுக்கு விளக்கம் அளித்தாள் மில்க்கி பாட்டி 

என்ன என்னவோ சொல்றீங்க பாட்டி.. போட்டோ ன்னு சொல்றீங்க.. பிரிண்ட் ன்னு சொல்றீங்க.. கேமரான்னு சொல்றீங்க.. ஆல்பம் ன்னு சொல்றீங்க

நான் கேள்வி படாத பொருள் பெயரை எல்லாம் சொல்றீங்க.. என்றாள் பால்மா 

இருப்பா நான் எங்க குடும்ப ஆல்பத்தை எடுத்துட்டு வர்றேன் என்று சொல்லி மில்க்கி பாட்டி தட்டு தடுமாறி எழுந்து சென்று ஒரு போட்டோ ஆல்பம் எடுத்து வந்தாள் 

என்னிடம் அந்த ஆல்பத்தை கொடுத்தாள்  

அட அதே ஆல்பம் 

நான் முதல் முதலில் இந்த கதையின் முதல் அத்தியாயத்தில் அரண்மனைக்கு எடுபுடி வேலைக்கு சென்ற போது சுத்தம் செய்து தூசி துடைத்த போட்டோ ஆல்பம் 

நான் அவசரமாக மில்க்கி பாட்டியிடம் இருந்து அந்த போட்டோ ஆல்பத்தை வாங்கி பார்க்க ஆரம்பித்தேன் 

முதல் பக்கத்தில் அந்த பெரிய அரண்மனையின் முழு போட்டோ

அடுத்த பக்கம் என் ஜமீன்தார் தாத்தா மகுட பூபதி 

அடுத்த பக்கம் என் ஜமிந்தாரிணி பாட்டி 

அடுத்த பக்கம் என் இளமையான அழகான அற்புதமான 16 வயது கியூட் மில்க்கி அம்மா 

அடுத்த பக்கம் ஒரு பெரிய கிரூப் போட்டோ.. 

அரண்மனையில் இருந்த அத்தனை ஜாமீன் குடும்பத்தாரும் வேலைக்காரர்களும் இருந்தார்கள் 

அவர்களோடு ஓரத்தில் பால்காரன் சுப்பையா.. அவன் நண்பன் கங்காணி.. அவன் அக்கா சமையல்காரி செண்பகம்.. மற்றும் மற்ற வேலைக்காரர்கள் நின்றிருந்தார்கள் 

அடுத்த பக்கத்தை புரட்டினேன் 

அதில் இருந்த போட்டோவை பார்த்து எனக்கு படுபயங்கரமான ஒரு இன்ப அதிர்ச்சி உண்டாயிற்று 

தொடரும் 37
[+] 3 users Like vibuthi viyabari's post
Like Reply


Messages In This Thread
RE: மேஜிக் ஷூ (காலப் பயண கதை) - by vibuthi viyabari - 30-12-2023, 08:14 AM



Users browsing this thread: 12 Guest(s)